Feb 22, 2015

அகரம் தந்து சிகரம் ஏற்றிய தமிழ் வாழ்க: இன்று உலக தாய்மொழி தினம்

 இன்று உலக தாய்மொழி தினம்எங்கும் தமிழ்

பதிவு செய்த நாள்

20பிப்
2015 
23:50

மொழி நம் பண்பாட்டைச் செதுக்கும் உளி. தகவல் தொடர்பு எனும் ஒப்பற்ற ஊடகத்தின் விழி. நம் தாய் வழியே பிறந்து வாய் வழியே வளர்ந்து நம்மை அடையாளப்படுத்தும் மந்திரச்சொல். மொழியைத் தாயிடம் இருந்து கற்றதாலும், தாயாய் அமைந்து அது நம்மைக் காப்பதாலும் தாய்மொழி என்று அழைக்கப்படுகிறது. அழியும் மொழிகளை இனியும் காக்காதிருக்கக் கூடாது என்பதற்காக யுனஸ்கோ பிப்.21 ஐ உலகத் தாய்மொழிகள் தினமாய் அறிவித்தது.
சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்கத் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே முடியும். தாகூர், கீதாஞ்சலி எனும் நோபல்பரிசு பெற்ற படைப்பை முதலில் உருவாக்கியது அவரது தாய்மொழியான வங்கமொழியில்தான்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...