Feb 7, 2014

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்



மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் .
சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம்

GIMP போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர்




ஜிம்ப் (GIMP (GNU Image Manipulation Program)) என்ற பெயரில் நமக்குக் கிடைக்கும் புரோகிராம், போட்டோ எடிட்டிங், இமேஜ் உருவாக்கம், இமேஜ் எடிட்டிங் போன்ற பணிகளுக்காக நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் ஆகும். 

இலவசமாகக் கிடைக்கும் மற்ற புரோகிராம்களில், இது தரும் அளவிற்கு சிறப்பான பயனுள்ள வசதிகள் கிடைப்பதில்லை. 

பல பணி நிலைகளில் பயன்படுத்தப்படும் அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷாப் புரோகிராமிற்கு இணையாகவும், சில வேளைகளில், அதனைக் காட்டிலும் அதிக வசதிகள் கொண்டதாகவும் இது இயங்குகிறது. 

பேஸ்புக் ஒரு சமூக நோய்




பேஸ்புக் ஒரு சமூக நோய் என அண்மையில் இது குறித்து ஆய்வு நடத்திய் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் கருத்து தெரிவித்துள்ளது. 

அது மட்டுமின்றி, வரும் 2017 ஆம் ஆண்டுக்குள், இதன் வாடிக்கையாளர்களில் 80 சதவீதம் பேர் இதனை விட்டு விலகிவிடும் வாய்ப்புகளும் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது பேஸ்புக் சமூக இணைய தளத்திலேயே குடியிருக்கும் பலரை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாக்கியுள்ளது.

 எப்போதும் ஸ்டேட்டஸ் போட்டு, தங்கள் போட்டோக்களை அப்லோட் செய்து, நண்பர்களின் சொத்தைக் கருத்துக்களுக்கெல்லாம் லைக் போட்டு, தான் போட்ட ஸ்டேட்டஸுக்கு எத்தனை லைக் மற்றும் ஷேரிங் வந்துள்ளது என்று அடிக்கடி பேஸ்புக் வீட்டில் சுழன்று வருவோருக்கு இந்த ஆய்வு முடிவுகள் ஆச்சரியத்தைத் தந்துள்ளன. 

சிலரோ, இது என்ன முட்டாள்தனமான முடிவாக உள்ளது. இதற்கு அடிப்படையே இல்லை; சிலர் விலகினாலும், பலர் இதில் ஐக்கியமாவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆய்வு என்னதான் சொல்கிறது என்று சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பேஸ்புக் வேகமாகப் பரவி வரும் தொற்று நோய் போல நம்மைச் சூழ்ந்துள்ளதாக, புள்ளிவிபரங்களுடன் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ப்ளு காய்ச்சல் வேகமாகப் பரவிய போது, கூகுள் ஒரு சேவையைத் தொடங்கியது. 

இதனால் பாதித்தவர்களும், பாதித்தால் என்ன செய்வது என்று பயந்தவர்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க எண்ணியவர்களும், தகவல்களைத் தெரிந்துதான் வைப் போமே என்று நினைத்தவர்களும், மொத்தம் மொத்தமாக இந்த சேவை கேட்டுத் தங்கள் பெயர்களைப் பதிந்தனர். 

பெர்சனல் கம்ப்யூட்டர் திறன் சோதனை


நாம் பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு சரியாக உள்ளதா? அதன் திறன் எந்த அளவில் உயர்ந்து உள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது? 

ஒரு சாதனத்தின் இயக்கம் அல்லது செயல்பாடு இந்த அளவிற்காவது இருக்க வேண்டும் என்று அறுதியிட்டு சொல்வதையே ஆங்கிலத்தில் Benchmark என்று சொல்கிறோம். 

ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் திறன் எப்படி உள்ளது என்று அறிந்து, அதனை மற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களின் திறனோடு ஒப்பிட்டுப் பார்த்து அறிந்துகொள்ள நமக்கு உதவும் பெஞ்சமார்க் பயன்பாடு (benchmarking utilities) புரோகிராம்கள் பல நமக்குக் கிடைக் கின்றன. அவற்றில் ஐந்து புரோகிராம்கள் குறித்து இங்கு காணலாம். 


1. எவரெஸ்ட் அல்ட்டிமேட் எடிஷன் (Everest Ultimate Edition): 

இந்த புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்றின் பெஞ்ச்மார்க் திறன் சோதனை நடத்துவது மட்டுமின்றி, கம்ப்யூட்டர் குறித்த வேறு பல பொதுவான தகவல்களையும் தருகிறது. 

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...