Sep 5, 2012

ஒபாமாவுக்கு நன்கொடையை அள்ளித் தரும் அமெரிக்க இந்தியர்கள்- ரோம்னிக்கு கொஞ்சமே!


 Indian Americans Open Up Wallets Obama
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஒபாமாவுக்குத்தான் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அதிகளவு நன்கொடை கொடுத்து வருகின்றனராம். அவரை எதிர்த்து போட்டியிடும் மிட் ரோம்னிக்கு அவ்வளவாக இந்தியர்களின் நன்கொடை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும்கூட 2008-ம் ஆண்டு ஒபாமாவுக்கு இந்தியர்கள் அளித்த நன்கொடையைவிட குறைவாகத்தான் தற்போது கிடைத்திருக்கிறது.
ரோம்னி தரப்பில் ப்ளோரிடாவைச் சேர்ந்த இந்தியரான டாக்டர் அக்ஷாய் தேசாய்தான் அதிகளவு நன்கொடையை திரட்டிக் கொடுத்திருக்கிறார். 1 மில்லியன் டாலர் வரையில் தேசாய் நன்கொடை திரட்டியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய உணவு விடுதிக்கு ரூ.55 லட்சம் அபராதம்: சமையல் அறையில் எலி செத்து கிடந்தது


ஆஸ்திரேலியாவில் இந்திய உணவு விடுதிக்கு ரூ.55 லட்சம் அபராதம்: சமையல் அறையில் எலி செத்து கிடந்தது  

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இந்திய உணவு விடுதி ஒன்று உள்ளது. அங்கு சுத்தமான உணவு வழங்கப்படவில்லை என புகார் வந்தது. அதை தொடர்ந்து அங்கு சுகாதார துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு தரமான சுத்தமான உணவு இல்லை உணவு பண்டங்களில் கரப்பான் பூச்சிகள் மொய்க்கின்றன என வாடிக்கையாளர்கள் புகார் செய்தனர்.

ரூ.18 கோடிக்கு ஏலம் போன தென்ஆப்பிரிக்க காட்டெருமை


ஜோகனஸ்பர்க், செப்.5-
 
ரூ.18 கோடிக்கு ஏலம் போன தென்ஆப்பிரிக்க காட்டெருமைதென்ஆப்பிரிக்காவில் பிரடோரியா பகுதியில் உள்ள பெலா பெலா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜேக்குயஸ் மலான். இவரது பண்ணையில் ஒரு ஆண் காட்டெருமை இருந்தது. அந்த காட்டெருமை ரூ.18 கோடிக்கு ஏலம் போனது. கொரிஷான் என பெயரிடப்பட்டுள்ள இதற்கு 4 வயது 10 மாதம் ஆகிறது. இது அபூர்வ வகை இன காட்டெருமையாக கருதப்படுகிறது. அதன் கொம்புகள் 1.3 மீட்டர் நீளமும், 41 செட்டிமீட்டர் அகலமும் உள்ளது.

35 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய குடும்பத்தை சென்றடையும் வாயேஜர்-1 விண்கலம்

35 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய குடும்பத்தை சென்றடையும் வாயேஜர்-1 விண்கலம்

வாஷிங்டன், செப். 5-
 
சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி ஆகிய கிரகங்களில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் வாயேஜர்-1, வாயேஜர்-2 என்ற இரண்டு விண்கலங்களை அனுப்பியது. அவற்றை எட்ஸ்டோன் என்ற 76 வயது விஞ்ஞானி மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினார். அவை கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து அனுப்பப்பட்டது. அதாவது கடந்த 1977-ம் ஆண்டில் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
 
அதில் வாயேஜர்-2 விண்கலம் இரண்டு வாரத்துக்கு முன்பு சூரிய குடும்பத்துக்குள் சென்றடைந்தது. தற்போது அது சூரியனில் இருந்து 1440 கோடி கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நிலையில் வாயேஜர்-1 விண்கலம் சூரிய குடும்பத்தை சென்றடையும் நிலையில் உள்ளது. அது சூரியனில் இருந்து 1770 கோடி கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

23 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பல் மீட்பு: நைஜீரிய கடற்படை அதிரடி

23 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பல் மீட்பு: நைஜீரிய கடற்படை அதிரடி

லாகோஸ், செப். 5-
 
நைஜீரியாவின் வணிக நகரமான லாகோஸ் கடலில் சிங்கப்பூர் நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.டி. அபு தாபி ஸ்டார் என்ற எண்ணெய்க் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினர். நேற்று இரவு அந்த கப்பலில் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர்கள் சிலரைத் தாக்கி, கப்பலை கடலுக்குள் செலுத்தும்படி மிரட்டியுள்ளனர். இந்தக் கப்பலில் 23 இந்திய மாலுமிகள் இருந்தனர்.

உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணராக கௌசிக் பாசு அறிவிப்பு


நியூயார்க், செப். 6 -
 
உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணராக கௌசிக் பாசு அறிவிப்புஉலக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவில் வாஷிங்டன்  நகரில் அமைந்துள்ளது. இந்த வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணராகவும் மூத்த துணைத் தலைவராகவும் இந்தியாவை சேர்ந்தவரான கௌசிக்  பாசு நேற்று அறிவிக்கப்பட்டார்.   60  வயதாகும் கௌசிக் பாசு வரும் அக்டோபர் மாதம் பதவியேற்கிறார்.
 
அவர் இந்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.  வளரும் நாட்டிலிருந்து வந்துள்ள அவர், முதல் தர அனுபவத்துடன் இந்த அமைப்புக்கு மிகுந்த பயனாக இருப்பார்  என்று உலக வங்கியின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்பு இந்திய தலைமை பொருளாதார நிபுணராக பதவி வகித்த ரகுராம் ராஜன் தற்போது பன்னாட்டு நிதியகத்தின் தலைமை பொருளாதார நிபுணராகவும் உள்ளார்.

கோஸ்டா ரிகா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி


சான்ஜோஸ், செப், 6 -
 
கோஸ்டா ரிகா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலிமத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேலில் 7.6 எனப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 
 
பெரும்பாலான கட்டிடங்கள் குலுங்கியதில் குறைந்தது இருவர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் பூகம்ப மையம் தலைநகர் சான் ஜோசுக்கு மேற்குப்பகுதியில் 87 மைல் தூரத்தில் அமைந்துள்ளது.
 
அருகிலுள்ள பசிபிக்கடல் நாடுகளில் சுனாமி தாக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. 1991 ல் இங்கு ஏற்பட்ட பூகம்பத்திற்கு 47 பேர் இறந்தனர்.

ஆகாயத்தில் நடந்து சர்வதேச விண்வெளி நிலைய மின்சார இணைப்பை சரிசெய்கிறார் சுனிதா வில்லியம்ஸ்


ஆகாயத்தில் நடந்து சர்வதேச விண்வெளி நிலைய மின்சார இணைப்பை சரிசெய்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
 
15 நாடுகள் கூட்டு முயற்சியில் 200 கிலோமீட்டர் தூரத்தில் ஆகாயத்தில் சர்வதேச விண்வெளி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டு ஆகாயத்தில் நிறுவபட்ட இந்த 4,50,000 கிலோ எடையுள்ள விண்வெளி ஓடம் 2016 ஆண்டு வரை பணியாற்றும். இது பூமியில் நடக்கிற நிகழ்வுகளையும் பூமிக்கு வெளியே அண்டத்தில் நடக்கிற நிகழ்வுகளையும் ஆராய விஞ்ஞானிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. இதன் பராமரிப்பிற்காக பல்வேறு குழுக்கள் மேலே சென்று பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

CT Angiogram

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...