Apr 29, 2013

கொலை வெறியுடன் துரத்தும் கொலஸ்ட்ரோல் - ஒரு பார்வை!


News Service
இப்போதெல்லாம் 'காலில் ஆணி குத்திடுச்சு' என மருத்துவரிடம் போனால்கூட, 'ஷுகரும் கொலஸ்ட்ராலும் செக் பண்ணிருங்க' என்பதுதான் மருத்துவரின் முதல் அறிவுரை. சர்க்கரை வியாதி இருக்கிறது என்று தெரிந்ததும் அதற்கான மருந்துகளுடன் கொசுறாக, ஒரு கொலஸ்ட்ரால் மருந்தும் கொடுப்பது மருத்துவ ஐதீகமாகிவருகிறது. ஏன் இந்த கொலஸ்ட்ரால் பயம்? 'பின்னே, மாரடைப்பைத் தடுக்க கொலஸ்ட்ராலைக் குறைக்க வேணாமா? அதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வலி இல்லா மாரடைப்பு வந்துவிடுமே, அதைத் தடுக்கத்தான் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகள்!' என்று வாதாடும் மருத்துவர்கள் இன்று ஏராளம்.
  
கொலஸ்ட்ரால் பெரும்பாலும் உடலின் ஈரலால் உருவாக்கப்படும், உடலுக்குத் தேவையான ஒரு வஸ்து. அதை வஸ்தாது ரேஞ்சில் பார்க்க ஆரம்பித்தது சமீபத்தில்தான்

தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்!

Written By ratnam raja on Monday, April 29, 2013 | 7:49 AM


இந்த சீன மங்கையின் பெயர் ஸாஒ ஜியாங் . ஆனால் இவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார். இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? 15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார்.

சீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல் அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார் . சுமார் 25,000 ரசிக பெருமக்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது . தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப் படுத்தும் நிமித்தமாகவே இவர் தமிழின் மேல் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார் .

இவரது முதல் புத்தகமான ‘சீனாவில் இன்ப உலா ‘ என்னும் புத்தகம் இப்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கௌதம் பதிப்பகம் இதை கண்காட்சியில் விற்பனைக்கு கொண்டு

தினமும் சாப்பிடலாம் உலர்ந்த திராட்சை




உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம். உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும், பாயாசத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்...

உலர்ந்த திராட்சைப் பழத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. ஓர் உலர்ந்த திராட்சைப் பழம் 30 மிலி கிராம் சுண்ணாம்புச் சத்து கொண்டது. இதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்ந்து வருவார்கள். எலும்புகளோடு பற்களும் உறுதியாக அமையும். ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இரவு உணவுக்குப் பின் தினசரி 15 முதல் 20 வரை திராட்சை பழத்தைக் கொடுத்து வருவது நல்லது.

வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும் பொழுது தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும். எலும்புகள் உறுதியாக இருக்கும், பற்கள் கெட்டிப்படும்; பல் சம்பந்தமான எந்தக் கோளாறும் ஏற்படாது. இதயம் பலத்துடனிருக்கும். இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் சத்தான பால் உற்பத்தியாகும். வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்டு கால்கள் வளையாது வளரும்.

தற்போது உள்ள பருவ பெண்களுக்கு முடி உதிரும் பிரச்னை அதிகமாக உள்ளது. பியூட்டி பார்லர் சென்று ஆலோசனை கேட்பதை விட, தினமும் 10 உலர் திராட்சையை சாப்பிட்டாலே போதும் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் சாப்பிட மண்டையோடு பலப்படும்.

கின்னஸ் சாதனைக்கு முயன்றவர் அந்தரத்தில் உயிரை விட்டார்


கின்னஸ் சாதனைக்கு முயன்றவர் அந்தரத்தில் உயிரை விட்டார்!
கின்னஸ் சாதனை படைத்த, ஒருவர், மலையிலிருந்து, இன்னொரு மலைக்கு, கம்பியில் தொங்கியபடி செல்லும் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டபோது, திடீரென மரணம் அடைந்தார். இதை பார்த்து, செய்வதறியாது நின்ற பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி மிலான் பாலியைச் சேர்ந்தவர் சைலேந்திரநாத், 45. போலீஸ் டிரைவராக பணிபுரியும் இவர்,சாகசம் செய்வதில் வல்லவர். டார்ஜிலிங்கில் ரயிலை, தனிநபராக தலைமுடியால் இழுத்து உலக சாதனை புத்தகமான, "கின்னஸ்´சில் இடம் பிடித்தவர். தன் சாகச பயணத்தின் அடுத்த கட்டமாக, டார்ஜிலிங் மாவட்டத்தில், டீஸ்ரா ஆற்றில், இரு மலைகளை கம்பியில் தலைமுடியில் தொங்கியபடி கடக்கும் சாகச பயணத்தில், நேற்று பிற்பகல் ஈடுபட்டார். 

ஒரு மலையிலிருந்து, மற்றொரு மலைக்கு கம்பியில் தொங்கியபடி அவர் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் துடித்தார். அவர், சாகசம் செய்வதாக நினைத்த, பார்வையாளர்கள் கைதட்டி பாராட்டினர்.

ஆனால், அந்தரத்திலேயே அவர் உயர் பிரிந்தது. பின்னர், தான் அங்கிருந்தவர்களுக்கு உண்மை தெரிந்தது.மீட்புக்குழுவினர், வந்து அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை, பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம்,சிலிகுரி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...