Jan 29, 2013

அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் மிதக்கும் மாகாணங்கள்

அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் மிதக்கும் மாகாணங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013
அவுஸ்திரேலியாவில் வீசிய கடும் சூறாவளி மற்றும் மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் குயின்ஸ் லேன்ட் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரமாக கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதுடன், வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது.
இதனையடுத்து குயின்ஸ் லேன்ட் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசுகள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளன.
மேலும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க 20க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.

பிரபலமான சமூக வலைத்தளங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்தது கூகுள் பிளஸ்




[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013,
இணையத்தள வளர்ச்சியின் பயனாக உருவான சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுவருகின்றன. இதனால் காலத்திற்கு காலம் பல்வேறு புதிய சமூகவலைத்தளங்கள் உருவெடுத்து வருகின்றன.இவ்வாறு தோன்றிய கூகுளின் கூகுள் பிளஸ் சமூகவலைத்தளமானது தற்போது இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது.
லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் இணையத்தளங்களுக்கான ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களின் படியே கூகுள் பிளஸ் ஆனது உலகின் பிரபல்யமான சமூகவலைத்தளங்களின் வரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதேவேளை 1 பில்லியனிற்கும் மேற்பட்ட பாவனையாளர்களுடன் பேஸ்புக் தளமானது தொடர்ந்தும் முன்நிலையில் காணப்படுவதுடன், வீடியோக்களை பகிரும் வலைத்தளமாகிய YouTube ஆனது Twitter சமூக வலைத்தளத்தினை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...