Mar 20, 2014

விண்டோஸ் 7 நினைவில் கொள்ள


இதுவரை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இல்லாத சில புதிய வசதிகளை விண்டோஸ் 7 கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை நினைவில் கொள்வோம்.


1. பின் அப் போல்டர்:

நீங்கள் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட போல்டரிலிருந்து பைல்களை எடுத்து பயன்படுத்துகிறீர்களா? தினந்தோறும் குறிப்பிட்ட பைல்கள் உங்கள் செயல்பாட்டிற்குத் தேவையா? போல்டரையும் அதில் உள்ள பைல்களையும் பெற விண்டோஸ் எக்ஸ்புளோரர் எல்லாம் சென்று திறக்க வேண்டியதில்லை.

குறிப்பிட்ட போல்டரை, டாஸ்க் பாரில் பின் அப் செய்து வைத்துக் கொள்ளலாம். அந்த போல்டரில் ரைட் கிளிக் செய்து, இழுத்து வந்து டாஸ்க் பாரில் விட்டுவிடவும். விண்டோஸ் 7 தானாக அதனை எக்ஸ்புளோரர் ஜம்ப் லிஸ்ட்டில் வைத்துக் கொள்ளும். போல்டரைத் திறக்க, டாஸ்க் பாரில் உள்ள

விண்டோஸ் 7 - பைல் நிர்வாகம்


மைக்ரோசாப்ட் இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 7 இயக்கம் பயனாளர்களுக்குப் பல வகைகளில் எளிமையான இயக்கத்தினைத் தருவதாக உள்ளது. இங்கு பைல்களைக் கையாள்வதில், விண்டோஸ் 7 தரும் புதிய வழிகளையும் வசதிகளையும் காணலாம்.

எக்ஸ்பி சிஸ்டத்தில் பைல்களைக் கையாள, பைல்களின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்று ஓரளவிற்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எந்த விபரமும் தெரிந்திருக்க வேண்டிய தில்லை.

விண்டோஸ் 7 சிஸ்டம், எக்ஸ்பி சிஸ்டத்தின் விரிவாக்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். கீழே இன்னும் தெளிவான ஒரு இயக்கத்தைத் தர ஐந்து குறிப்புகள் தரப்படுகின்றன.


1. டாகுமெண்ட்ஸ் லைப்ரேரி:

விண்டோஸ் 7 இயக்கத்தில் Documents என்பது, எக்ஸ்பி இயக்கத்தில் நமக்குக் கிடைத்த மை டாகுமெண்ட்ஸ் (My Documents) போல்டராகும். ஆனால் இது ஜஸ்ட் ஒரு போல்டர் மட்டுமல்ல; டாகுமெண்ட்ஸ் என இங்கு அழைக்கப் படுவது இங்கு ஒரு லைப்ரரியாக உள்ளது.

விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ்


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

முற்றிலும் மாறானது, கூடுதல் வசதிகளைக் கொண்டது, விலையும் நியாயமானது என்ற எண்ணம் கம்ப்யூட்டர் வாங்குவோரிடம் விண்டோஸ் 8 ஏற்படுத்தியுள்ளது. வாங்கிய சில வாரங்கள், விண்டோஸ் 8, அதன் பயனாளர்களிடையே சற்று தடுமாற்றத்தினை ஏற்படுத்துகிறது. 

அவற்றைப் போக்கும் வகையிலான பயனுள்ள சில குறிப்புகளை இங்கு காணலாம்.

1. அப்ளிகேஷன் புரோகிராம்களை ஒழுங்கு படுத்த:
விண்டோஸ் 8 தரும் புதிய ஸ்டார்ட் ஸ்கிரீன் மூலம், அப்ளிகேஷன் டைல்ஸ்களை, நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். முதலில் அவை, எந்த வரிசையிலும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருப்பது போல

விண்டோஸ் 7 - சில புதிய குறிப்புகள்



புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் அனைவரும், அதனுடன் வரும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கத் தொடங்கிய பின்னர், அது தரும் வசதிகளை ஒவ்வொன்றாய் ஆய்வு செய்து அறிந்து வரு கின்றனர். 

விஸ்டாவிற்குப் பின் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன், மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதுமைகளையும் எளிய, திறனுடன் கூடிய வசதிகளையும் தந்துள்ளது. 



1. கீபோர்ட் ஷார்ட் கட்ஸ்: 

விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம். 

எச்: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.
ஐ: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்கிறது; அல்லது

விண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்


புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பெற்று பயன்படுத்தத் தயங்குபவர்கள், இப்போது விண்டோஸ் 7 தொகுப்பினையே பெறுகின்றனர். 

அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் தன்மையினை முழுமையாகப் பெறச் செயல்படு கின்றனர். விஸ்டாவின் தோல்விக்குப் பின் வந்த இந்த சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பல கூடுதல் வசதிகளைத் தந்துள்ளது. பல புதுமைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். 


1. கீ போர்டு ஷார்ட் கட்ஸ்:
விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம்.

எச்: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.

ஐ: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது. 

ஷிப்ட்+ ஆரோ: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.

D: அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்து, டெஸ்க்டாப் திரையைக் காட்டுகிறது.

E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும்; மை கம்ப்யூட்டர் போல்டர் காட்டப்படும்.

F: தேடல் விண்டோ காட்டப்படும்.

G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.

L: டெஸ்க்டாப்பினை லாக் செய்திடும்.

M: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.

R: ரன் விண்டோவினை இயக்கும்.

T: டாஸ்க் பாரில் சுழன்று வரும்; ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஏரோ பீக் வசதியினைக் கொடுக்கும்.

U : ஈஸ் ஆப் யூஸ் சென்டரைத் திறக்கும்.

TAB: முப்பரிமாணக் காட்சி

Pause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.


2.ஹெல்ப் அண்ட் சப்போர்ட்:
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஹெல்ப் பிரிவு புதிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மைப் பக்கத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. 

Search Box, மைக்ரோசாப்ட் இணைய தளத்திற்கான நேரடி லிங்க், அண்டு என்று பெயரிடப்பட்ட பட்டன். விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள அண்டு பட்டனை அழுத்தலாம்; அல்லது ஹோம் பேஜில், இடது கீழ்ப்புறம் உள்ள More Support Options பிரிவில் கிளிக் செய்து, தேவையான தகவல்களைப் பெறலாம். 

இதில் தான் மைக்ரோசாப்ட் அண்டு a Person for Help என்ற பிரிவை மறைத்து வைத்துள்ளது. இதில் கிளிக் செய்தால் Remote Assistance, Microsoft Help Forums, மற்றும் Computer Manufactures Homepage ஆகியவை கிடைக்கும். இதன் மூலம் எப்படி உதவி பெறலாம் என்பதனை, இதில் சென்று அறிந்து கொள்வதே சிறப்பாக இருக்கும்.


3. சிஸ்டம் ஹெல்த் ரிப்போர்ட்:
நம் கம்ப்யூட்டர் எந்த நிலையில் உள்ளது என்று அறிய அனைவருக்கும் ஆர்வமாகத்தான் இருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதற்கான வழி தரப்பட்டுள்ளது. சர்ச் லைன் பெட்டியில், perfmon /report என டைப் செய்து என்டர் தட்டினால், கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். 

கம்ப்யூட்டர் செயல்படும் திறன், எவ்வளவு திறனைப் பயன்படுத்துகிறது, பிரச்னைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்க வழி ஆகியவை காட்டப்படும்.இந்த அறிக்கை கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். இதனை எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்து, உங்கள் நண்பருக்கு, இதனை இமெயிலில் அனுப்பவும் வழி தரப்படுகிறது.


4. அப்ளிகேஷன்ஸ் அன் இன்ஸ்டால்:
விண்டோஸ் சிஸ்டத்துடன், சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைத்தே தரப்பட்டன. இவை சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்த தனால், பயன்படுத்துகிறோமோ இல்லையோ, அவை சிஸ்டத்தில் இயக்க நிலையில் இருந்து கொண்டே இருக்கும். 

இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 8, மீடியா பிளேயர், மீடியா சென்டர், டிவிடி மேக்கர் போன்ற புரோகிராம்கள் இதற்கு எடுத்துக் காட்டு. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இவற்றை தேவை இல்லை என்றால், நீக்கிவிட வசதி தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் பேனலில், Program and Features என்ற பிரிவிற்குச் செல்லவும். 

இதில் Turn Windows features on or off என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இவற்றில் இது போன்ற ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புரோகி ராம்களின் பட்டியல் காட்டப்படும். இதில் உங்களுக்குத் தேவைப்படும் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்ள அதன் முன்புறம் உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். 


5. கிரெடென்ஷியல் மேனேஜர் (Credential Manager):
இந்த சிஸ்டத்தின் கண்ட்ரோல் பேனலில், கிரடென்ஷியல் மேனேஜர் என்னும் புதிய அப்ளிகேஷன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை இயக்க சர்ச் லைனில் Credential என டைப் செய்திடவும். இதில் நம் பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றைக் குறிப்பிட்டு சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். 

நாம் அடிக்கடி செல்லும் இணையதளங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களையும், இதில் பதிந்து பாதுகாப்பாக வைக்கலாம். இவை Windows Vault என்பதில் சேவ் செய்து வைக்கப்படும். இந்த பைலையும் பேக்கப் எடுத்து வைக்கலாம். 


6. புதிய செயல்முறையில் வேர்ட் பேட்:
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புடன் வரும் வேர்ட் புரோகிராமினையே அனைவரும் பயன்படுத்துகிறோம். அதனால் சிஸ்டத்துடன் வரும் நோட் பேட் மற்றும் வேர்ட் பேட் புரோகிராம்களை அவ்வளவாகப் பயன்படுத்துவது இல்லை. நோட்பேட் புரோகிராமினையாவது, சில புரோகிராம்களை எழுதுகையில் இயக்குகிறோம். 

ஆனால் வேர்ட் பேட் புரோகிராமினை முழுமையாக ஒதுக்கி வைக்கிறோம். இதனாலேயே மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாமலேயே, தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் தந்து வந்தது. இப்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இது பெரிய மாற்றங்களுடனும் வசதிகளுடனும் தரப்பட் டுள்ளது. 

இப்போது டாகுமெண்ட்களை விருப்பப்படியான பார்மட்டில் உருவாக்க முடியும். ஆர்.டி.எப். (.rtf) பார்மட்டில் தான் இவற்றை முன்பு சேவ் செய்து வந்தோம். இப்போது இவற்றை Office Open XML documet (.docx) ஆகவும் சேவ் செய்திடலாம். இதனால் வேர்டில் உருவாக்கப்படும் இந்த பார்மட் பைல்களை, வேர்ட் பேடிலும் திறந்து எடிட் செய்திடலாம்.


7. டெஸ்க்டாப் ஒழுங்கமைப்பு:
ஐகான்கள் திரையெங்கும் சிதறிக் கிடக்கின்றனவா! சிரமம் எடுத்து அவற்றைச் சீரமைக்க வேண்டாம். எப்5 கீயை, சற்று நேரம் அழுத்தியவாறு வைக்கவும். ஐகான்கள் தாமாக சீராக அமைக்கப்படும். அல்லது வழக்கம்போல, டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, விஸ்டாவில் உள்ளது போல, View, Auto arrange அழுத்தவும்.


8. சிஸ்டத்தினை ரிப்பேர் செய்திட:
கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வாசகர்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டு அவசர அழைப்புகளைக் கொடுப்பதுண்டு. அவர்களிடம், ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி உள்ளதா என்று கேட்டால், பதில் கிடைக்காது. ஏனென்றால், சிஸ்டத்துடன் தரப்படும் சிடிக்களில், அப்படி ஒன்று உள்ளதென்று தெரிந்தவர்கள், அதனைப் பத்திரமாக வைத்திருப்பதில்லை. 

அப்படியானால், விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். விண்டோஸ் 7 சிஸ்டம் இதுபோன்ற ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி தயாரிக்கும் வழியைக் கொண்டுள்ளது. சிஸ்டம் பூட் ஆவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலையில், இது போன்ற சிடிக்கள் நமக்கு கை கொடுக்கும்.

இதனைத் தயாரிக்க Start > All Programs > Maintenance > Create a System Repair Disc என்று செல்லவும். விண்டோஸ் 7, சிஸ்டத் தினை இயக்கக் கூடிய சிடி ஒன்றைத் தயாரித்துக் கொடுக்கும்.


9. பிரச்னைகளைக் கண்டறிய:
சில வேளைகளில், சிஸ்டத்தின் சில செயல்பாடுகள் மட்டும் முடங்கிப் போகும். அந்த வேளையில், எதனால் பிரச்னை ஏற்படுகிறது என நமக்குத் தெரியாது. இதனைக் கண்டறிந்து கொள்ள, விண்டோஸ் 7 வழி ஒன்றைத் தருகிறது. அது போன்ற சூழ்நிலையில், கண்ட்ரோல் பேனல் செல்லவும். 

அங்கு System and Security என்பதன் Find and Fix என்ற பிரிவைப் பார்க்கவும். அல்லது சர்ச் பாக்ஸில் Troubleshooting என்று டைப் செய்து என்டர் தட்டவும். பொதுவான பிரச்னைகள், நீங்கள் அமைத்துள்ள செட்டிங்ஸ், சிஸ்டம் கிளீனிங் போன்ற வழிகளில், பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கலாம். 

இதற்கு முன் இதே போல ஏற்பட்டிருந்தால், சர்ச் பாக்ஸில் Troubleshooting history என்று டைப் செய்து பார்க்கவும். இந்த விண்டோவின் இடது மேல் பக்க மூலையில் View All என்ற லிங்க்கில் கிளிக் செய்தால், இதற்கு முன் இது போல ஏற்பட்ட சிக்கல்கள், அவற்றின் தன்மை மற்றும் தீர்வுகள் காட்டப்படும்.

ஏர்டெல் தரும் 4ஜி இணைய சேவை




ஏர்டெல் நிறுவனம், பெங்களூருவில், தன் 4ஜி இணைய சேவையைத் தொடங்கி உள்ளது. இதனால் உடனடியாகப் பயன் பெறுபவர்கள், ஐபோன் 5 எஸ் மற்றும் 5சி ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே. 

இந்த போன்களில், ஏற்கனவே 3ஜி பயன்படுத்தக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்தவர்கள், கூடுதலாக எதுவும் செலுத்தாமல், 4ஜி செயல்பாட்டினை, அதே கட்டணத்தில், அனுபவிக்கலாம். 

ப்ரீ பெய்ட் மற்றும் போஸ் பெய்ட் என இரண்டு திட்டங்களில் இயங்குபவர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் 3ஜி சிம் கார்டினை, 4ஜி சிம் கார்டுக்கு மாற்ற

அபாயத்தை எதிர்நோக்கி 50 கோடி கம்ப்யூட்டர்கள்


விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும், வரும் ஏப்ரல் 8 முதல் நிறுத்திக் கொள்ளப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து, தொடர்ந்து எச்சரிக்கையும் கொடுத்து வருகிறது. 

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பலரின் பிரிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்கி வந்த, இயங்கிக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை முடிவுக்குக் கொண்டு வர மைக்ரோசாப்ட் பல ஆண்டுகள் முடிவெடுத்து, தற்போது அதன் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது.

பல கணக்கெடுக்கின்படி, ஏறத்தாழ 48.8 கோடி கம்ப்யூட்டர்கள் எக்ஸ்பியில் இயங்குவதாக தெரிகிறது. மிகச் சரியாக எத்தனை கம்ப்யூட்டர்கள் என்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் மட்டுமே சொல்ல முடியும். 

இது ஒரு பெரிய எண்ணிக்கையாகத் தோன்றினாலும், அனைத்து நாடுகளிலும் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரில், இவை ஏறத்தாழ 30 சதவீதம் மட்டுமே என Net Applications என்ற

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...