Aug 15, 2012

நித்தியானந்தா அடியாட்களால் அருணகிரிநாதர் சிறை வைப்பு: கர்நாடக சாமியார் புகார்




17 அடி நீள மலைப்பாம்பு அமெரிக்காவில் சிக்கியது



மேற்கு பாம் பீச்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்கிளேட் தேசிய உயிரியல் பூங்காவுக்குள் 17.7 அடி நீளம், 75 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாம்பு கருத்தரித்து 87 முட்டைகளை வயிற்றில் வைத்துள்ளது சாதனை அளவாக கருதப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவை பூர்விகமாகக் கொண்ட இந்த வகைப் பாம்புகள் எங்கும் பரவிக்கிடக்கின்றன. எவர்கிவேட் உயிரியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான மலைப்பாம்புகள் உள்ளன. மான்கள் உள்ளிட்ட விலங்குகளை அப்படியே சுருட்டி நெருக்கிக் கொன்று விழுங்கும் இந்த வகைப் பாம்புகளின் எண்ணிக்கையை குறைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அவற்றின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. தற்போது இந்தளவுக்கு பெரிய பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது என்று பாம்பு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்

பிரேசிலை சென்றடைந்தது ஒலிம்பிக் கொடி



நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள், அடுத்து எதிர்வரும் 2016ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ளது.

இதற்காக ரியோடி ஜெனிரோ நகர மேயர் எடுர்டோ பயஸ், கவர்னர் ஜெர்சியோ கேப்ரல் ஆகியோர் கொடியை தனி விமானத்தின் மூலம் லண்டனிலிருந்து பிரேசில் நாட்டுக்கு எடுத்து வந்தனர்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...