Aug 28, 2012

சிவகங்கை பொன்னாகுளம் வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிவகங்கை: சிவகங்கை அருகே பொன்னாகுளம், வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக., 24 அன்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து யாகசாலை, பூர்ணாகுதி பூஜைகள் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று, காலை 7.30 மணிக்கு கோ பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜையுடன், கும்பாபிஷேகம் துவங்கியது. காலை 10.45 - 11.30 மணிக்குள் கணேச குருக்கள், கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். பொன்னாகுளம், பனையூர், முத்துப்பட்டி, துக்கால், வீரவலசை, ஆத்தூர், நயினாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, வள்ளிதிருமணம் நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கோவில் நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்தனர்.

வேளாங்கண்ணி திருவிழா வரும் 29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்!


  





வேதாரண்யம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழா, வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, பத்து நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து, சர்ச் அதிபர் மைக்கேல் அடிகள் கூறியதாவது: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி சர்ச் ஆண்டு திருவிழா, ஆக.,29ம் தேதி துவங்கி, செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடக்கிறது. அனைத்து ஊர்களுக்கும் போக்குவரத்து,ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது. நாகை வந்து செல்லும் அனைத்து ரயில்களும் வேளாங்கண்ணிக்கு வர, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், இலவச தங்குமிடம்,

புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கு சில ஆலோசனைகள்!!


புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பது என்பது மிகவும் ஈஸியான ஒன்று. ஆனால் அதை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான செயல்.
பொதுவாக புகைப்பிடிப்பவர்களுக்கு,
புகைபிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளும் தெரியும், அதைவிட நிறுத்துவது கடினம் என்பதும்
நன்றாக தெரியும்.

ஏனெனில் அதற்கு அடிமை ஆகிவிட்டால் அதை நிறுத்தும் போது பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். இவ்வாறு அதற்கு அடிமை ஆனவர்கள் நிறுத்த நினைக்கும் போது புதிதாக ஒரு சில பழக்கத்தை மேற்கொண்டால், ஈஸியாக அதனை நிறுத்தலாம்.

ஆணிக்கால் ஏற்பட கரணங்கள் மற்றும் மருத்துவ குறிப்புகள்:-



பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி.

இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது.


இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.
அதிகமான காரசார உணவுகளால் ஏற்படும் நோய்கள்:-

இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் காரசாரமான உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.மேலும் அவர்கள் உணவில் நல்ல சுவை மற்றும் மணம் வருவதற்கும் பல பொருட்களை சேர்க்கின்றனர்.


ஆனால் அப்படி காரமான உணவுகளை, சுவைக்காக அதிக மணமூட்டும் பொருட்களை சேர்ககும் உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவரும் அறிவதில்லை.

பெற்றோர்களே நல்லெண்ணெய் குளியல் குழந்தைகளுக்கு கூடாது!


பிறந்த குழந்தைகளுக்கு தலையில் நல்லெண்ணெய் தேய்க்ககூடாது. தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கனும். குழந்தை தலையிலும் உடம்பிலும் தேய்க்க தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்பால் விடுங்க. அது படபடன்னு கொதிச்சு அடங்கினதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் கஸ்துரி மஞ்சள் பொடியை போட்டு இறக்குங்க. பின்னர் அந்த எண்ணையை குந்தைக்கு பயன்படுத்துங்க.

குழந்தைகளை தாக்கும் இருதய நோய்


குழந்தைகளுக்கு பொதுவாக காணப்படும் மற்றொரு வியாதி "எம்.வி.பி.எஸ்'' எனப் படுகிறது. அதாவது இடது புறம் உள்ள இரண்டு இதழ்களை கொண்ட மைட்ரல் வால்வு களில் ஏதேனும் ஒரு இதழோ அல்லது இரண்டு இதழ்களுமோ, நீளம் அதிகமாக இருக்கும். இதனால் சரியாக மூடாமல், சற்று உள்நோக்கி மடங்கிவிடும். இதனால் நெஞ் சில் படபடப்பு, மயக்கம், பயம் போன்றவை தோன்றும்.

செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு



கலிபோர்னியா: செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவின், முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.   . அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தான் கணவர் கொடுமை 13 ஆண்டாக தனி அறையில் இந்திய பெண் சிறை வைப்பு



கராச்சி : பாகிஸ்தான்காரரை காதலித்து மணம் முடித்து அந்நாட்டுக்கு சென்ற இந்திய பெண், 13 ஆண்டுகளாக தனி அறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இன்டர்நெட் மூலம் தெரிய வரவே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் குல் முகமதுகான். இவர் இந்தியாவுக்கு வந்த போது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஷிர்லி ஆன் ஹாட்ஜஸ் என்ற பெண்ணை காதல் மணம் புரிந்தார். இதன்பின், ஷிர்லி தன் பெயரை ஷப்னம் குல்கான் என்று மாற்றிக்கொண்டார்.

14,000 கி.மீ செல்லும் நவீன ஏவுகணையை பரிசோதித்தது சீனா





பெய்ஜிங் : கண்டம் விட்டு கண்டம் செல்வதும், அணு குண்டுகளுடன் 14,000 கி.மீ., தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டதுமான அதிநவீன புதிய தலைமுறை ஏவுகணையை வெற்றிகரமாக சீனா சோதனை செய்து பார்த்துள்ளது. இதுகுறித்து சீன அரசின் டிவி சேனலில் கூறப்பட்ட செய்தியில், ‘‘சுமார் 14,000 கி.மீ. தூரம் பாய்ந்து செல்லக்கூடிய டோங்பெங்க்,41 ரக ஏவுகணை கடந்த மாதம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்


இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற் றைச் சாதனமாக செயல்படுகிறது.
போன், பாடல், வீடியோ, போட் டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறி தல், வழி நடத்தல், வங்கிக் கண க்குகளைக் கையாளுதல், மெ சேஜ், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன்மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுக ளை அடுக்கிக் கொண்டே போக லாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல்போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க் கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?

ஆம்ஸ்டிராங் மறைவுக்கு அனுதாபம்: அமெரிக்க கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட ஒபாமா உத்தரவு


neel_28வாஷிங்டன் : நிலவில் முதல் முதலில் கால் வைத்த அமெரிக்கா விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்டிராங் (வயது 82) கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார். அவருடைய இறுதிச்சடங்கு ஒஹிகோ மாகாணத்திலுள்ள சின்சின்னாத் நகரில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. ஆம்ஸ்டிராங்கின் இறுதி சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த வேண்டுமென ஜனாதிபதி ஒபாமாவிற்கு ஒஹிகோ பகுதி குடியரசு கட்சி எம்.பி. கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் ஆம்ஸ்டிராங் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட ஒபாமா உத்தரவிட்டார். ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை, அனைத்து அரசு அலுவலகங்கள், ராணுவம் உள்ளிட்ட முப்படை முகாம்கள், கப்பல்கள், தூதரகங்கள் ஆகியவற்றில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகின் விலை உயர்ந்த கார் (SUV )


EVADE SUV

இந்தியாவில் வாகன விற்பனை நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. இதனால் பல புதிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள்   இந்தியாவில்  விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். உலகின் விலை உயர்ந்த sports utility vehicle(SUV) கார் இந்தியாவிற்க்கு வருகிறது.

கனடா நாட்டை சேர்ந்த கான்குஸ்ட்(conquest vehicles) நிறுவனத்தின் EVADE SUV அறிமுகம் செய்துள்ளனர். FORD நிறுவனத்தின் F550 வாகனத்தின்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...