Apr 6, 2013

குரங்குகளால் வளர்க்கப்பட்ட பிரிட்டன் பெண்


பிரிட்டனிலுள்ள பிராட்பேர்டு நகரை சேர்ந்த மரீனா சேப்மேன்(63) என்பவர் குழந்தையாக இருந்தபோது சிலர் இவரை கடத்திச் சென்று கொலம்பியாவில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் அனாதையாக விட்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை குரங்கு கூட்டம் தத்தெடுத்து தன் குழந்தை போன்று பாலூட்டி சீராட்டி வளர்த்துள்ளது. இதனால் அவர் குரங்கு போன்றே இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை தரையில் ஊன்றியபடியே நடந்து வளர்ந்துள்ளார்.
மேலும், குரங்குகள் போன்று இவரும் மரத்துக்கு மரம் தாவியபடி வாழ்ந்துகொண்டு உடம்பில் துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாகவே குரங்குகளுடன் சுற்றித் திரிந்துள்ளார்.
இதற்கிடையில் ஒரு சில்லறை வியாபாரி ஒருவர் இவரை காட்டில் கண்டுபிடித்து ஊருக்குள் அழைத்து வந்தபொழுது அவருக்கு பேச தெரியாது. பின்னர் ஒரு வீட்டில் பெண்ணிடம் வேலைக்கு சேர்த்துவிட்டார். அங்குதான் மரீனா பேசவும், எழுத படிக்கவும் கற்றுக் கொண்டார்.
தற்போது, தனது சுய சரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். அதற்க 'தி கேர்ள் வித் நோ நேம்' என பெயரிட்டுள்ளார்.
அடர்ந்த காட்டில் நடந்த தனது வாழ்க்கை போராட்டம் குறித்தும், அதில் இருந்து மீண்டு மனித வாழ்க்கைக்கு திரும்பியதையும் திகிலுடன் எழுதியுள்ளா
படியுங்கள்! பகிர்ந்துகொள்ளுங்கள்!

More than 100 Keyboard Shortcuts:
Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
...... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத சிலந்தி!




மாங்குளம் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித  முகமொன்றின் அளவை ஒத்த சிலந்தியானது முழு உலகினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-2304180-19186E21000005DC-56_634x424.jpg
இச்சிலந்தியானது குறுக்காக சுமார் 8 அங்குளம் நீளமானதென கணிப்பிடப்பட்டுள்ளதுடன் கால்களில் மஞ்சள் நிற கோடுகளையும் கொண்டுள்ளது.
http://www.virakesari.lk/image_article/img2090at8-1-762x428.jpg
டரான்டூலாஸ் 'tarantulas' எனப்படும் இராட்ச சிலந்தி குடும்பத்தைச் சேர்ந்த இச் சிலந்தியானது பொயிசிலோதேரியா 'Poecilotheria' இனத்தைச் சேர்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.virakesari.lk/image_article/article-2304180-19186D16000005DC-256_634x375.jpg
இலங்கை மற்றும் இந்தியாவில் மட்டும் காணப்படும் இச் சிலந்திகள் மரங்களிலேயே பெரும்பாலும் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவை வேகமான அசைவுகளைக் கொண்டதுடன் விஷத்தன்மை வாய்ந்தது. இவற்றின் விஷமானது  பூச்சிகள், எலி, பாம்பு மற்றும் சிறிய பறவைகளைக் கொல்லக்கூடியது.

http://www.virakesari.lk/image_article/p-rajaei-male-1-762x428.jpg
இதுமட்டுமன்றி இச்சிலந்தியானது 'கோலியாத் பேர்ட் ஈட்டர்' எனப்படும் தென் அமெரிக்காவில் வாழும் உலகின் மிகப் பெரிய சிலந்திகளை ஒத்ததென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.virakesari.lk/image_article/3203912438_7ebacabaaa_z.jpg
இலங்கையில் இச்சிலந்தி 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்த சிலந்தியொன்றை கிராமவாசிகள் உயிரினப் பல்வகைமை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ரணில் நாணயக்காரவுக்கு அளித்துள்ளனர்.
அதை அவர்கள் அடித்துக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச்சிலந்தியை ஆராய்ந்த ரணில் குறித்த சிலந்தியானது இதற்கு முன்னர் இலங்கையில் இணங்காணப்பட்டதொன்றல்லவென  அறிந்து கொண்டுள்ளார்.
பின்னர் ரணில் தலைமையிலான குழுவினர் குறித்த சிலந்தியை தேடும் பணியை தொடங்கியுள்ளனர்.
நீண்ட நாள் தேடலின் பின்னர் பெண் சிலந்தி மற்றும் அதன் குஞ்சுகளை மாங்குளம் வைத்தியசாலையின்  வைத்தியரொருவரின் தங்குமிடத்தின் வளாகத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இதை கண்டுபிடிக்க உதவிய பொலிஸ் உத்தியோகத்தரான மைக்கல் ராஜ்குமார் புராஜா என்பவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு இச்சிலந்தி இனமானது Poecilotheria rajaei எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதேபோல் பல சிலந்திகள் எதிர்வரும் காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம் என ஆராய்ச்சியாளர் ரணில் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலந்தியானது இந்தியாவில் காணப்படும் Poecilotheria regalis என்றழைக்கப்படும் சிலந்திகளை ஒத்ததென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.virakesari.lk/image_article/Regalis.jpg
இதேவேளை Poecilotheria rajaei இனை தனிப் பிரிவாக அங்கீகரிக்க மேலும் உறுதிப்படுத்தல்கள் அவசியமென அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து நூதனசாலையைச் சேர்ந்தவரும் சிலந்தி ஆராய்ச்சித் துறையில் நிபுணருமான ரொபர்ட் ரவேன் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; உஷார் நிலை பிரகடனம்

இந்தோனேசியாவில் இன்று காலை இந்திய நேரப்படி 10.15க்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 7.4 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தின் போது குடியிருப்புகளும், கட்டிடங்களும் அதிர்ந்தன. இந்தோனேசியாவின் எனரோடலில் இருந்து 256 கி.மீ. கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் 58 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக கூறப்படுகிறது.

இது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதல் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதியுடன் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓடி வந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...