Dec 8, 2012

ஆச்சரியம் தரும் அழகு

* பண்டிகைக் காலத்தில் பளிச்சென தெரிய, அடர்த்தியான `மேக்-அப்’ போட்டு விடக்கூடாது. இயல்பாக `லைட்டாக’ போடப்படும் அலங்காரம் தான் நேர்த்தியாக இருக்கும். பவுண்ட்டேஷன் லைட்டாக போடுங்கள். பவுண்ட்டேஷன் போடும் போது காதுகளையும், கழுத்தையும் மறந்து விடாமல் அவைகளையும் மேக்-அப் மூலம் சரிசெய்யுங்கள்.
* லிப்ஸ்டிக் கொஞ்சமாக போடுங்கள். பெரிய உதடுகளாக இருந்தால், உதடுகளின் உள்புறத் தில் மேல் நோக்கி `லிப் லைனர்’ மூலம் வரை யுங்கள். லைனரின் வெளிப்பகுதி கறுப்பாகத் தெரிந்தால் பவுண்டேஷனோ, கண்சீலரோ பூசுங்கள்.
* கண்களில் காஜல் ஸ்டிக் மூலம் வரையுங் கள். ஸ்டிக்கில் கண்மை படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஐ லைனர் போட விரும்பு கிறவர்கள் மேல் கண் இமையில் மிக மெலிதாக வரைந்துகொள்ளவேண்டும்.
* பண்டிகை காலங்களில் பெண்கள் மல்லிகை, முல்லைப்பூ சூடிக்கொள்கிறார்கள். புடவை கட்டி இந்த பூக்களை வைத்துக்கொள்ளும்போது கூந்தலை அவிழ்த்துவிட்டால் நன்றாக இருக்கும். குளிக்கும்போது ஷாம்பு போட்டு, கண்டிஷனரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது கூந்தல் சில்க்கியாக, தனித்தனியாகத் தெரியும்.
* முகத்தில் புள்ளி, படை போன்று தெரியும் பெண்கள் பண்டிகைகால அழகுக்காக சில நாட்களுக்கு முன்பே தயாராக வேண்டும். முகத்தில் புள்ளிகள், படைகளை போக்க சில வகை அழகு சிகிச்சைகளை அவர்கள் செய்துகொள்ளவேண்டும்.
* இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் மேக்-அப்பை முழுமையாக நீக்கிவிடவேண்டும். அதற்காக உங்கள் சருமத்திற்கு பொருத்தமான `பேஸ் வாஷை’ தேர்ந்தெடுக்கவேண்டும். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் கடலைமாவுடன், பாலாடையைக் கலந்து முகத்தில் பூசவேண்டும். பயணம் முடிந்து வீடு திரும்பியதும் தயிரை பஞ்சில் முக்கி முகத்தில் பூசி கழுவவேண்டும்

கூந்தலை பாதுகாக்கும் இயற்கை ஷாம்பூ



hair care_21அண்மைக்காலத்தில் வேதிப்பொருளால் உருவான ஷாம்பூகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது ஆயுர்வேத ஷாம்பூகள் அதிகமாக வருகின்றன. சோறு வடித்தெடுத்த பின் கிடைக்கும் கஞ்சி நீர் ஒரு நல்ல ஷாம்பூவாகும். அதைச் சீயக்காய்ப் பொடி அல்லது கடலைமாவுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
குழந்தையின் தலையில் தேய்க்க, கஞ்சியும் கடலைமாவும் சிறந்தது. தலைக்கோ உடம்பிற்கோ எரிச்சல் தராது. தாளி இலையை அரைத்தால் முட்டைக்கரு போன்று வழவழா என்று வரும். இதுவும் ஒரு நல்ல ஷாம்பூ. இதனைச் சீயக்காய்ப் பொடியுடன் கலந்து உபயோகித்தால் முடியில் அதிகமான எண்ணெய்ப் பிசுக்கு அகன்று நல்ல சக்தியை அளிக்கும்.
சீயக்காய் 2 பங்கு, சிறுபயறு 1 பங்கு, வெந்தயம் 1 பங்கு எடுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது 1 தேக்கரண்டி பொடியைக் கஞ்சியுடன் சேர்த்து தாளி இலைச்சாறு கலந்து அல்லது முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துப் பயன்படுத்தினால் ஷாம்பூவைப் பயன்படுத்துகின்ற பலன் கிடைக்கும்.

நகைகளை தேர்ந்தெடுத்து அணிவதற்கான சில குறிப்புகள்

வியாழக்கிழமை, 06 டிசம்பர் 2012,
indian-jewellery-shopping11. பெண்களே! உங்கள் முகம் வட்ட‍ வடிவமாக உள்ள‍து. அப்ப‍டியென் றால், ஜிமிக்கி என்ற காதணி வகையை உங்கள் காதுகளுக்கு அணி யலாம்.
2. குட்டையான‌ கழுத்து உடையவர்க ள் அளவில் நீண்ட தங்க நகைகளை யும், ஜிமிக்கி வகைகளையும் அணிய லாம்.
3. நீண்ட கழுத்து உடைய பெண்கள் குட்டையான நகைகள் அதாவது கழு த்தோடு தழுவும் நெக்லஸ் போன்ற நகைகளை அணியலாம்.
3. உயரமான தோற்ற‍ம் கொண்ட பெண்கள் சற்று பெரிய அளவிலான நகைகளை அணிந்தால் மட்டுமே எடுப்பான தோற்ற‍மளிக்கும்.
4. எப்போதும் எங்கேயும் அதிக எண்ணிக்கையில் நகைகளை அணிந்துகொண்டு செல்ல‍ வேண் டாம். முக்கிய விஷேசங்களான திருமணம் அல்லது நிச்சயதார்த்த ம் போன்ற நிகழ்ச்சிகளின்போது மட்டும் அதிக

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ்

  • டோக்கியோ : ஜப்பானில் வடகிழக்கு பகுதியில் உள்ள சென்டாய் நகரை மையமாகக் கொண்டு அப்பகுதியின் சுமார் 245 கி.மீட்டர் சுற்றளவில் இன்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 என அளவிடப்பட்டுள்ள இந்த நில நடுக்கம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் உணரப்பட்டது.பூமிக்கு அடியில் 33 கி.மீ. ஆழத்தில் உருவான இந்த நில நடுக்கம் காரணமாக அங்கு கடல் அலைகள் சீற்றமாக காணப்படுகின்றன. இதனையொட்டி, ஜப்பானின் கிழக்கு கடற்கரை, மியாமி கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாலை 6.02 மணியளவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சுனாமி காரணமாக கடல் அலைகளின் உயரம் 2 மீட்டர் வரை உயரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து சுனாமி பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
    பின்னர் இரவு 7.20 மணியளவில் ஏற்கனவே விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதனால் சுனாமி அச்சத்தில் இருந்த இஷினேமாக்கி, மியாகி, அவுமோரி, இபாராக்கி பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.இந்த நில நடுக்கத்தால், ஒங்கேவா மின் உற்பத்தி நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் புகுஷிமா டாய்ச்சி, புகுஷிமா டய்னி மின் உற்பத்தி நிலையங்களும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டோக்கியோ அருகேயுள்ள நரிடா விமான நிலையத்தின் ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளது. செண்டாய் விமான நிலையத்தின் வழியாக செல்லும் அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கப்பட்டன.
    ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா, அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2011-ம் ஆண்டு 9 ரிக்டர் அளவில், ஜப்பானை குலுக்கிய நில நடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டில் இதுவரை இப்பகுதியில் 9 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஜப்பான் நாட்டு நேரப்படி மாலை 5.18 மணியளவில் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகு பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹோன்சு அருகே சென்டாயை மையமாகக் கொண்டு உருவானது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அலுவகலத்தில் பணியிலிருந்தவர்களும் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு தெருவில் இறங்கி ஓடினர். கடுமையான நிலநடுக்கம் என்பதால் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சத்தில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மியாகி அருகே 1 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பும் என்று அந்த சுனாமி எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால அப்பகுதியிலுள்ளோர் அச்சத்துடன் உள்ளனர்.
எனினும் இந்த நிலநடுக்கத்தால், 2011 ஆம் ஆண்டு உருவானதுபோன்ற பேரலைகள் ஏற்படவாய்ப்பில்லை என கருதப்படுகிறது. செண்டாய் பகுதியில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் இது 9 ஆவது நிலநடுக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்டேட்:
நேற்று மாலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் இன்று காலை சுனாமி அடித்தது. எனினும், சுனாமி அலைகளின் உயரம் பாதிப்பில்லாத அளவுக்கு 1 மீட்டர் உயரத்துக்குள் இருந்ததால் சுனாமி அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது.



கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:

கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:

வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர


் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...