Sep 21, 2012

தினம் ஒரு கிளாஸ் ஒயின் குடித்தாலே மார்பக புற்றுநோய் ஏற்படும்


ஓராண்டுக்கு தினமும் ஒரு கிளாஸ் ஒயின் குடித்தால், மார்பக புற்றுநோய் உட்பட உடலில் பல கட்டிகள் உருவாகும் அபாயம் உள்ளது என்று சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. மிலன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேரிடம் மது குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தியது.

இதுவரையில் ஒயின் குடித்தால் எந்த பாதிப்பு ஏற்படாது, உடலநலனுக்கு மிக நல்லது என்று நம்பப்பட்டு வரும் நிலையில், அது தவறு என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.  மது

இந்தியாவில் 10ல் ஒருவருக்கு நீரிழிவு 4ல் ஒருவருக்கு ரத்த அழுத்தம் ஆய்வில் தகவல்

இந்தியாவில் வசிப்போரில் 4ல் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. 10ல் ஒருவருக்கு சர்க்கரை வியாதி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல்களை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்கிரீன் இன்டியா டுவின் எபிடெக் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த விவரங்கள் வருமாறு:
இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் வசிக்கும் 16 ஆயிரம் மக்களிடம் மூன்று கட்டங்களாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 23.1 சதவீத ஆண்களுக்கும், 22.6 சதவீத பெண்களுக்கும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது. 11.1 சதவீத ஆண்களுக்கும் 10.8 சதவீத பெண்களுக்கும் நீரிழிவு (சர்க்கரை நோய்) உள்ளது.

சிறுநீரில் இரத்தம் போவதற்கான காரணங்கள் என்ன?

பொதுவாக சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் (Red Blood Cells)  வெளியே வருவதில்லை.  இவை சிறுநீரகங்களின் வடிகட்டியில் தடுக்கப்பட்டு விடுகின்றன. சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் சிறுநீரக மண்டலத்தின் எந்த பாகத்தில் இருந்து வேண்டுமானாலும் வரலாம்.
    
கீழ்கண்ட சில காரணங்கள்

சிறுநீரகங்களின் வடிகட்டிகளில் அழற்சி (சிறுநீரக நுண்தமனி அழற்சி Glomerulonephritis)
சிறுநீரகங்களில் நீர்க் கட்டிகள் (Cysts in Kidney)
சிறுநீரகங்களில் சாதாரண கட்டிகள், புற்று நோய்க் கட்டிகள் (Benign and Cancerous tumours in Kidney)
சிறுநீரகங்களில் கற்கள் (Kidney Stones)
சிறுநீரகங்களில் கிருமித் தாக்கம் (Kidney Infections)
சிறுநீரகங்களைப் பாதிக்கும் சில பரம்பரை  வியாதிகள் (Inherited disorders of Kidney)
உள்சிறுநீர்க் குழாய்களில் கற்கள், கட்டிகள், கிருமி பாதிப்புகள்
(Stones, tumours, infections of Ureters)
சிறுநீர்ப்பையில் கற்கள், கட்டிகள், கிருமித் தாக்கம் (Stones, tumours, infections of Bladder)
ப்ராஸ்டேட் சுரப்பியில் கட்டி, கிருமி, கல் (Swelling, Infection and stone in Prostate Gland)
அபூர்வமாக இரத்த உறைவில் குறைபாட்டு நோய்களாலும், இரத்த உறைவை தடுக்கும் சில மருந்துகளாலும் (உதாரணம்-சில இதய நோய்களுக்கு தரப்படும் வார்பாரின்- Warfarin)  வரலாம்.

இன்று ஒரு தகவல் - விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள் -

-னைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் ஒரு புதியத் தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. தினந்தோறும் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சியினால் சுயமாக சிந்திக்கும் திறனில் இருந்து எழுபது விழுக்காடு, மனிதர்களாகிய நாம் பின்தங்கி இருப்பதாக ஒரு விஞ்ஞான அறிக்கை கூறுகிறது.


ண்மைதான் ஒரு காலத்தில் எந்த அறிவியல் வளர்ச்சியும் இன்றியே இன்று நிகழும் அற்புதங்களை விட பல மடங்கு சாதனைகளை செய்த மனிதன் இன்று தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்குக் கூட இயந்திரங்களை எதிர்நோக்கும் நிலைக்கு இன்றைய மனிதர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

  ஒரு காலத்தில் கடிகாரம் என்றால் என்னவென்றேத் தெரியாமல் இருந்த மனிதன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நேரத்தை அளக்கவும் கண்காணிக்கவும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அறுபதற்குரிய முறை நேர அளவீடானது சுமரில் ஏறத்தாழ கி.மு 2000 ஆண்டு காலத்தைச் சேர்ந்ததாகும். புராதன எகிப்தியர்கள் ஒரு நாளை இரண்டு 12-மணிநேர காலங்களாகப் பிரித்து, சூரியனின் நகர்வைத் தடமறிவதற்கு பெரிய சதுரத்தூபிகளைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நீர்க் கடிகாரங்களையும் உருவாக்கினார்கள்.இது முதன்முதலில் அநேகமாக அமுன்-ரி எல்லைப்பகுதியில் (Precinct of Amun-Re) பயன்படுத்தப்பட்டு, பின்னர் எகிப்துக்கு வெளியேயும் பயன்படுத்தப்பட்டது. புராதன கிரேக்கர்கள் இவற்றை பெரும்பாலும் பயன்படுத்தினார்கள்.
ன்று கடிகாரம் என்பதை நேரம் பார்ப்பதற்காக என்பதை மறந்து அதை ஒரு அழுகுப் பொருளாகவே மாற்றி அணிந்துகொள்ளத் தொடங்கிவிட்டன. காலையில் உதிக்கும் சூரியனின் ஒவ்வொரு அசைவிலும் நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு தங்களின் தினசரி வேலைகளை செய்துவந்த மனிதர்கள். இன்று ஆயிரம் அதிநவீன வசதிகள் இருந்தும் தங்களின் நேரங்களை சரியாக பயன்படுத்த மறந்து தடுமாறும் நிலையில் இருக்கிறார்கள் என்பது மட்டும் யாரும் மறுக்க இயலாத உண்மை. சரி இவை ஒரு பக்கம் இருக்கட்டும் இனி நாம் தகவலுக்கு வருவோம்.

ப்படித்தான் ஒரு முறை ஷாங் மன்னர் பரம்பரையானது நீர் வழிந்தோடும் கடிகாரத்தைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இக்கடிகாரங்கள் கி.மு 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசபோடோமியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும். பிற புரதான காலங்காட்டும் கருவிகளில் சீனா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்தி கடிகாரம், இந்தியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட டைம்ஸ்டிக் (timestick) மற்றும் நீர்க் கடிகாரம் போல இயங்கிய மணல் சொரிந்து காலங்காட்டும் கருவி ஆகியவை உள்ளடங்கும்.
ந்தக் காலத்தின் சூரியனின் தோற்றம் மற்றும் சூரியனின் மறைவை வைத்து மட்டும்தான் நேரத்தைக் கணித்தார்களா நமது முன்னோர்கள் என்று பார்த்தால் அதையும் கடந்து பலப் பறவை இனங்கள் எழுப்பும் ஒலிகளைப் பயன்படுத்தியும் நேரத்தை துல்லியமாக கணித்திருக்கிறார்கள். நமக்கு தெரிந்த நமது முன்னோர்கள் சேவல் கூவும் சத்தத்தை வைத்து விடியலின் நேரத்தைக் கணக்கிடுவார்கள் என்பதை இன்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த சேவல் அல்லாது மற்ற எந்தப் பறவை மனிதனின் நேர கணக்கீட்டிற்கு உதவியது என்பதையும் பார்த்துவிடலாம்.
டிகாரம் பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்பகால கடிகாரங்கள் சூரியன் ஏற்படுத்துகின்ற நிழல்களைச் சார்ந்திருந்தன. ஆகவே மேகமூட்டமான வானிலையில் அல்லது இரவில் இவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. மேலும், பருவகாலம் மாறும்போது மீண்டும் அளவுத்திருத்தம் செய்யவேண்டியும் இருந்தது. சுழற்சி ஆற்றலை விட்டு விட்டு நிகழும் அசைவுகளாக மாற்றிய, நீரினால் இயங்கும் ஒழுங்படுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறையுடன் ஆரம்பகாலத்திலிருந்த கடிகாரமானது, கி.மு மூன்றாம் நூற்றாண்டு புராதன கிரீஸ் காலத்துக்குரியதாகும்.
பின்னர் சீனப் பொறியாளர்கள் பாதரசத்தினால் இயங்கும் ஒழுங்குபடுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறைகள் ஒன்றாய் சேர்ந்திருக்கின்ற கடிகாரங்களை பத்தாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தனர். இதையடுத்து 11 ஆம் நூற்றாண்டில் பற்சக்கர அமைப்புகள் மற்றும் பாரங்கள் ஆகியவற்றால் இயக்கப்படும் நீர்க் கடிகாரங்களை அரபிய பொறியாளர்கள் கண்டுபிடித்தனர்.அதற்குப்பின் ஏற்பட்ட அறிவியலின் வளர்ச்சியால் இன்று கடிகாரத்தில் வளர்ச்சி பற்றிதான் நமக்கு நன்றாகத் தெரியுமே...!!
பின் வரும் பறவைகளின் சத்தங்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் காலையில் வேலைக்கு செல்வதற்கு நேரத்தை கணக்கிட மிகவும் உதவியாக இன்றும் பயன்படுகிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
கரிச்சான் குருவி சத்தமிடும் நேரம் < >   3 மணி.
செம்போத்து .சத்தமிடும் நேரம் < >  3-30 மணி

குயில் கூவும்  நேரம் < >    4-00 மணி.

சேவல் கூவும் நேரம் < >    4-30 மணி.

காகம் கரையும்  நேரம் < > 5-00 மணி.

மீன் கொத்தி.சத்தமிடும் நேரம் < >  6-00 மணி.
ன்ன நண்பர்களே..! இனி கிராமப் புறங்களில் வசிக்கும் ஒவ்வொருவரும் மேலே குறிப்பிட்டு இருக்கும் பறவைகளில் ஏதேனும் ஒன்றின் சத்தத்தை காலை நேரத்தில் நீங்கள் கேட்க நேர்ந்தால் நேரத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஆயிரம் அறிவியல் வளர்ச்சி வந்தாலும் இதுபோன்ற யதார்த்தங்களுக்கு நிகர் இந்த யதார்த்தங்களே என்பது மட்டும் திண்ணம்.

ரி நண்பர்களே..! நேரம் இல்லாததால் நேரத்தை கணக்கிடும் ஆதிகால முறைப் பற்றி எழுதிவிட்டேன் பிடித்து இருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டு செல்லுங்கள். எனக்கும் கிரிக்கெட் விளையாட நேரம் ஆகிடுச்சு நாளை பார்க்கலாம்.  
* * * * * * *

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...