Oct 31, 2012

சான்டிப் புயலின் கோரத் தாண்டவம்: மீண்டும் மூடு விழா கண்ட சுதந்திர தேவி

statue_of_liberty_002


சான்டிப் புயலின் கோரத் தாண்டவத்தால் அங்குள்ள சுதந்திர தேவி சிலை மீண்டும் மூடப்பட்டுள்ளது.
மன்ஹட்டான் நகர மத்தியில் அமைந்துள்ள அமெரிக்கர்களின் வரலாற்றுச் சின்னமான சுதந்திர தேவிச் சிலையை சமீபத்தில்தான் சீரமைத்தார்கள்.
அதுவரைக்கும் மூடப்பட்டிருந்த இச்சிலை, பணிகள் முடிவடைந்து கடந்த ஞாயிறே திறக்கப்பட்டது.
ஆனால் தற்போது 'சான்டி' புயலின் கோரத் தாண்டவம் காரணமாக சுதந்திர தேவி சிலை மறுபடியும் முடப்பட்டிருக்கிறது.
30 மில்லியம் டொலர்கள் செலவில் மேற்கொள்ளப் பட்ட சீரமைப்புப் பணிகள்

இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இஸ்ரேல்!

 10 Bn Business How Israel Became

, செப்டம்பர் 24, 2012,

Get the Google App & Chrome and Start Searching. It's Quick & Easy.
டெல்லி: இந்தியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தை இஸ்ரேல் பிடித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவுக்கு ரூ. 50,000 கோடிக்கும் அதிகமான ஆயுதங்களை இஸ்ரேல் ஏற்றுமதி செய்துள்ளது. 2009ம் ஆண்டில் ரஷ்யாவை விட அதிகமான ஆயுதங்களை இந்தியாவுக்கு இஸ்ரேல் ஏற்றுமதி செய்துள்ளது.
குறிப்பாக நீர்மூழ்கிகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், உளவு செயற்கைக் கோள்கள் தொடர்பான கருவிகள், விமானங்கள்-ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் லேசர் உதவியிலான ஏவுகணைகள்,

ஈரான் போர்க்கப்பல்கள் சூடான் துறைமுகத்தில் நிறுத்தம்: இஸ்ரேலை மிரட்ட திட்டம்


கார்தோம்: ஈரான் நாட்டைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்கள் அதன் நட்பு நாடான சூடானில் நிறுத்தப்பட்டுள்ளது. சூடான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுக்கவும், இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுக்கவுமே இந்த கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூடான் நாட்டில் கார்தோம் நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆயுத தொழிற்சாலையில் சமீபத்தில் இரண்டுமுறை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்வதாக கருதி இந்த தொழிற்சாலை மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்கியதாக சூடான் குற்றம்சாட்டியது. இதற்கு இஸ்ரேல் தரப்பிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில் இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் பாராக்கிடம் இது பற்றி ஒரு செய்தி நிறுவனம் கருத்து கேட்டதற்கு 'இது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை' என்று அவர் கூறிவிட்டார்.
இஸ்ரேலை மிரட்ட போர்க்கப்பல்?
இதற்கிடையே சூடானின் நட்பு நாடான ஈரான் நாட்டின் 2 போர் கப்பல்கள் சூடானின் செங்கடல் பகுதி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதியில் தீவிரவாத செயல், கடற்கொள்ளையர்களை ஒடுக்கவே போர் கப்பல்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், 2 நாட்டு தளபதிகளும் சந்தித்து பேச இருப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது. இருப்பினும் இஸ்ரேலை மிரட்டவே ஈரான்-சூடான் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ரயில் சுரங்கங்களில் வெள்ளம்: போக்குவரத்து சீராக 10 நாட்களாகும்

நியூயார்க் :அமெரிக்காவை உலுக்கிய, "சாண்டி' புயல் காரணமாக, பலத்த மழை பெய்ததால், 1,000 கி.மீ., தூரம் கொண்ட சுரங்க ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து சீராக, 10 நாட்களாகும், என அறிவிக்கப்பட்டுள்ளது. கரிபியன் கடலில், கடந்த வாரம் தோன்றிய, "சாண்டி' புயல், அமெரிக்காவின், நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி உள்ளிட்ட, 15 மாகாணங்களை தாக்கியது. புயலுக்கு இதுவரை, 50 பேர், பலியானர். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நியூஜெர்சியும், நியூயார்க்கும் இந்த புயலில் அதிகமாக பாதிக்கப்பட்டன. நியூயார்க் பங்கு சந்தை இரண்டு நாட்கள் மூடப்பட்டது. 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பலத்த காற்றினால், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான நகரங்கள், இருளில் மூழ்கின. 75 லட்சம் பேர், மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர்.

மூன்று அணு நிலையங்கள் மூடல் : நியூஜெர்சியில் உள்ள, "ஆயிஸ்டர் க்ரீக்' அணுசக்தி நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நியூஜெர்சியில், டெலாவர் நதிக்கருகே உள்ள, இரண்டு

Oct 30, 2012

சர்வதேச விண்வெளி கூடத்துக்கு சென்ற தனியார் விண்கலம் தரை இறங்கியது



சர்வதேச விண்வெளி கூடத்துக்கு சென்ற தனியார் விண்கலம் தரை இறங்கியது
நியூயார்க், அக். 30-
அமெரிக்கா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட 15 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வு கூடம் அமைத்து வருகின்றன. அதற்கான கட்டுமான பொருள் மற்றும் அங்கு தங்கியிருக்கும் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு தேவையான பொருட்களை அமெரிக்காவின் என்டீவர் விண்கலம் மூலம் அனுப்பி வந்தனர். ஆனால் அந்த விண்கலம் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றது.
எனவே, தனியார் நிறுவனத்தின் விண்கலம் மூலம் அவற்றை சமீபத்தில் அனுப்பி வைத்தனர். ஆளில்லாமல் இயங்கும் அந்த விண்கலம் பொருட்களை ஏற்றிக்கொண்டு சர்வதேச விண்வெளிக்கு சென்றது. பின்னர் அங்கு பொருட்களை இறக்கிவிட்டு திட்டமிட்டபடி 18 நாட்கள் கழித்து நேற்று அமெரிக்காவின் பசிபிக் கடலில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதை நீர்மூழ்கி வீரர்கள் குழு பத்திரமாக மீட்டது.

அப்பிளின் சரிவு ஆரம்பம்?


 
By Kavinthan Shanmugarajah
2012-10-30 14:12:57

 
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் அப்பிள்.
 
ஆனால் இப் பெயர் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகின்றது என்பதே தற்போதைய கேள்வி.
 
இதற்கான காரணம் அப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் சிலவாகும்.
 
அப் பிரச்சினைகள் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறியதாகத் தோன்றினாலும், ஒவ்வொன்றும் அப்பிளின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு சக்தி

கரையோரப் பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி உள்நோக்கி நகர்கிறது



காரின் மீது விழுந்து கிடக்கும் மரம்
அமெரிக்காவின் வட கிழக்கு பிரதேசத்தை "சாண்டி" என்று பெயரிடப்பட்டுள்ள மாபெரும் சூறாவளி தாக்கியதில் இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதிலே பத்து உயிரிழப்புகள் நியுயார்க்கில் நிகழ்ந்துள்ளது.
பல ஆண்டுகளில் இல்லாத பெரும் சூறாவளி கரையோரப் பகுதிகளைத் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு தற்போது நிலப்பரப்புக்குள்ளும் தொடர்ந்து வீசிக்கொண்டுள்ளது.

சான்டி: அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய இயற்கைத் துயரம்!

சான்டி: அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய இயற்கைத் துயரம்! 

News Serviceஅமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்கள் மின்சாரம் இன்றி இருளிலேயே பல நாட்களாக மூழ்கிக் கிடக்கிறது! அமெரிக்காவை தாக்கி வரும் சான்டி புயல்தான் அந்நாட்டு வரலாற்றிலேயே மிகப் பெரிய இயற்கை துயரமாக உருவெடுத்திருக்கிறது.
  
சான்டியால் ஒவ்வொரு அமெரிக்க மாகாணமுமே புரட்டிப் போடப்பட்டு வருகிறது. வாஷிங்டன், பால்டிமோர், பிலடெல்பியா, நியூயார்க், போஸ்டன் ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்த சான்டி புயலின் கோரத்தாண்டவத்தால் சுமார் 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
சான்டி புயல் இலக்கு வைத்திருக்கும் நகரங்கள் பலவற்றிலும் மின்சாரம் தொடர்ந்து விநியோகிக்கப்படவில்லை. மருத்துவமனைகளில் பேக்அப் மின்சாரமும் இல்லை. இதனால் மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மன்ஹாட்டனில் 13 அடி உயர சுவர் கூட இந்தப் புயலுக்கு தப்பவில்லை. அமெரிக்க நகரங்கள் எங்கெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அமெரிக்கா முழுவதும் சுமார் 5.7 மில்லியன் பேர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் சுமார் 7ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. பல விமான நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. இதே நிலைமைதான் ரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கும்! சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுவிட்டன! சான்டி புயல் பல இடங்களில் பனிமழையையும் கொண்டு வந்திருக்கிறது கடந்த ஆண்டு அமெரிக்காவைத் தாக்கிய ஐரீன் புயல் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Oct 29, 2012

தீவிரமடைந்து வரும் சான்டி புயல்: கனடா மக்களுக்கு எச்சரிக்கை


sandy_canada_001சான்டி புயல் தீவிரமடைந்து வருவதால், கனடா மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் மைக் மோர்ட்டோன் கூறுகையில், சான்டி புயல் தீவிரமடைந்து வருவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு தேவையான உணவு, மருந்து, குடிநீர் போன்றவற்றை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளம் ஏற்பட்ட பிறகு இடப்பெயர்ச்சி தேவைப்பட்டாலோ, மின்தடை ஏற்பட்டாலோ அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொருவரும் தம்முடைய அவசர உதவி பெட்டியில் 4 லிட்டர்

சூறாவளி தாக்கலாமென்ற எச்சரிக்கையை அடுத்து வடக்கு கரையோர மக்கள் இரவிரவாக வெளியேற்றம்; கொட்டும் மழையில் பெரும் அவலம்


jaffna_floodரொஷான் நாகலிங்கம்

வடக்கு,கிழக்குப் பகுதியில் திங்கட்கிழமை இரவு சூறாவளி தாக்களாமென்ற அபாய அறிவிப்பையடுத்து வடபகுதி கரையோர மக்கள் இரவிரவாக அவசர அவசரமாக கொட்டும் மழையில் கையில் அகப்பட்ட பொருட்களுடன் இடம்பெயர்ந்தனர்.
வங்காளவிரிகுடாவில் இலங்கையின் வடக்கே நிலைகொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக மாறி வடக்கு,கிழக்கு கரையோரத்தால் கடக்கலாமென்று வானிலை அவதான நிலையம் நேற்றிரவு அவசர அவசரமாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

வலி நீக்க வழிகள் வந்தாச்சு!


ன்றைய நவீன  மருத்துவத்தில் எப்பேர்பட்ட பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. குறிப்பாக வலிகளைப் போக்குவதில் பிரபலமாகி வருகிற
நவீன சிகிச்சைகள் பிரமிக்க வைக்கின்றன. மருந்துகளும் மாத்திரைகளும் ஒரு பக்கமிருக்க, வலிகளைப் போக்க வந்திருக்கிற லேட்டஸ்ட் கருவிகள் பல வருடங்களாக வலிகளுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ பேருக்கு வரப்பிரசாதமாக அமையும். வலிகளைப் போக்க அறிமுகமாகி யிருக்கும் லேட்டஸ்ட்கருவிகள் பற்றிப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

‘‘நாள்பட்ட வலிகளுக்கு, உதாரணத்துக்கு புற்றுநோய் வலிகளுக்கு, மருந்து தடவிய ஸ்டிக்கர்கள் வந்திருக்கின்றன. இவற்றை ஒட்டிக்கொள்வதன் மூலம்

வீடுகளில் முடங்கினர் மக்கள் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை கட்டிப்போட்ட சாண்டி புயல்


நியுயார்க் : அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தாக்குவதற்கு சாண்டி புயல் வந்து கொண்டிருப்பதால், அப்பகுதியில் உள்ள மாகாணங்களில் பஸ், ரயில், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  120 கி.மீ. வேகத்தில் சூறாவளியுடன் மழையும் சுழற்றி அடிக்கும் என்பதால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.

கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல், ஜமைக்கா, கியூபாவை பதம் பார்த்தது. இப்பகுதியில் புயல் காரணமாக 65 பேர் இறந்தனர். இந்நிலையில், அந்த புயல் அமெரிக்காவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சாண்டி புயல், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் கரையை கடக்கலாம்

தமிழ் -கருத்துக்களம்-
சிறுமிகளும், பிராய்லர் கோழிகளும்
*******************************
நெருங்கிய தோழியின் மகள் பூப்பெய்திய விழாவுக்குச் சென்றிருந்தேன்.தோழியின் தூரத்து உறவினர் பெண்ணான ஒரு ஆசிரியையும் வந்திருந்தார். சடங்கு,சம்பிராதய நிகழ்வுகள் முடிந்ததும் அந்த ஆசிரியை பூப
்பெய்திய பெண்ணின் வயதைக் கேட்டார். “9″ வயது என்றார்கள்.

இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். இன்றைய பல குடும்பங்களில் வாரம் ஒரு முறை தவறாமல் பிராய்லர் சிக்கன் கோழிகளை வாங்கி சமைக்கின்றனர். ஆண்களுக்கு இது எப்படியோ, ஆனால் பெண்களுக்கு இது ஒரு விதத்தில் ஆபத்து என்றார்.

பண்ணைகளில் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகள் நாற்பதே நாளில் பருத்து வளர ஹார்மோன் ஊசி போடுவது உண்டாம்.இந்தக் கோழிகளை சமைத்துச் சாப்பிடும் நமக்கும் ஹார்மோன்கள் வேலை செய்கிறதாம். குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வரும் முன்னரே பருவம் எய்தும் வேலையை இது செய்கிறது.இது பிஞ்சிலே பழுக்கும் அபாயம் ஆகும்.

தோழியை விசாரித்த போது பூப்பெய்திய அவள் மகள் விரும்பி சாப்பிடும் உணவு பட்டியலில் பிராய்லர் சிக்கனுக்குத்தான் முதலிடம் என்றாள்.

பெண்களைப் பெற்றவர்களே! இந்த மாதிரி வயதில் உங்கள் பெண் குழந்தைகளுக்கு எந்தெந்த உணவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை டாக்டரிடம் கேட்டுப் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

சூறாவளி அச்சுறுத்தல்...விசேட செய்தி...


Written By Admin on Monday, October 29, 2012



சூறாவளி அச்சுறுத்தல்; அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு...

மீளக்குடியமர்ந்த முல்லைத்தீவு மக்கள் பெரும் அவதி..

முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து இன்றிரவு 80 km / h வேகத்தில் மினி சூறாவளி தாக்கவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


இதனால் திருகோணமலை, குச்சவெளியிலிருந்து யாழ்ப்பாணம் வரையான

உலகின் அதிக நட்புறவான நாடாக மலேசியா 10-வது இடத்தில் தேர்வு

உலகின் அதிக நட்புறவான நாடாக மலேசியா 10-வது இடத்தில் தேர்வு


பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 29-உலகிலேயே அதிக நட்புறவான நாடுகளின் பட்டியலில் மலேசியா 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அண்மையில் Forbes நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
சிறந்த வாழ்க்கைத் தரம், திருப்திகரமான சமூக, சுலபமான பொதுபோக்குவரத்து, மற்றும் தங்கள் நாடுகளை விட நல்லதொரு வீட்டு வசதி போன்றவையே மலேசியாவை சிறந்த நட்புறவான நாடாக திகழச்செய்துள்ளதாக Forbes தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தனது டுவீட்டர் அகப்பக்கத்தில் உலக மக்களை வரவேற்கிறோம் என கருத்து தெரிவித்துள்ளார்.
வருமான வரி இல்லாத காரணத்தாலும், மிகவும் அரிதான குற்றச்செயல்கள், மாசுபடாத சுற்றுச்சூழல் மற்றும், வருடம் முழுவதும் நீடிக்கும் கோடைக்காலம் போன்றவற்றால் Cayman தீவுகள் உலகிலேயே அதிக நட்புறவான நாடுகளாக முன்னணி வகிக்கின்றன.
Forbes நடத்திய இந்த ஆய்வில், உலகிலே அதிக நட்பான நாடாக கனடா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நியுசிலாந்து ஐந்தாவது இடத்தையும்,  ஸ்பைன், இங்கிலாந்து, பெர்முடா, தென் ஆப்பிரிக்காவுக்குப் பின்னர் மலேசியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவை அச்சுறுத்தும் சாண்டி புயல்: 3 ஆயிரம் விமான சேவை ரத்து- 4 லட்சம் பேர் வெளியேற்றம்

அமெரிக்காவை அச்சுறுத்தும் சாண்டி புயல்: 3 ஆயிரம் விமான சேவை ரத்து- 4 லட்சம் பேர் வெளியேற்றம்
நியூயார்க், அக். 29-
 
கரீபியன் கடல் பகுதியில் சமீபத்தில் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளி புயல் உருவானது. அந்த சூறாவளி புயலுக்கு சாண்டி என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
சாண்டி புயல் கடந்த 2 தினங்களாக ஜமைக்கா, கியூபா, தெற்கு ஹைதி நாடுகளை துவம்சம் செய்தபடி கடந்தது. இதில் அந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பேர் பலியானார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
 
என்றாலும் சாண்டி புயலின் கோரத்தாண்டவம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நேற்று சாண்டி புயல் மேலும் வலுப்பெற்று அமெரிக்காவை

Oct 28, 2012

தேமுதிகவிலிருந்து 12 எம்.எல்.ஏக்கள் அணி மாற முடிவு


October 28, 2012
தேமுதிகவிலிருந்து 4 எம்.எல்.ஏக்கள் இதுவரை வெளியே வந்துள்ள நிலையில் மேலும் 8 எம்.எல்.ஏக்கள் அணி மாற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்.எல்.ஏக்கள் விலகலால், தேமுதிக வட்டாரம் கலகலக்க ஆரம்பித்துள்ளது. ஆளுங்கட்சியின் அதி பயங்கர சக்திவாய்ந்த வலையில் சிக்கி
ஒவ்வொரு எம்.எல்.ஏவாக வெளியேற ஆரம்பித்துள்ளனர். இப்படி ஆளுங்கட்சியினரிடம் சிக்கி எதிர்க்கட்சிகள் சின்னாபின்னமாவது
தமிழகத்திற்குப் புதிதல்ல. கடந்த திமுக ஆட்சியிலும் கூட இப்படித்தான் அதிமுகவை கலைத்துப் பார்த்தார்கள். இந்த நிலையில் தற்போது தேமுதிக

Sandy சூறாவளி நியூயோர்க்கை நோக்கி படையெடுக்கிறது : அச்சத்தில் பொதுமக்கள்


கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் தெற்கு பகுதிகளை தாக்கியுள்ள Sandy சூறாவளி, இன்று திங்கட்கிழமை, நியூயோர்க்கை நோக்கி நகர்கிறது.
இதையடுத்து நியூயோர்க்கின் ரயில், விமான போக்குவரத்துக்கள் முன்னெச்சரிக்கையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு மாநில, மத்திய அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நியூயோர்க்கில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன்,

ஹவாய் தீவை தாக்கியது சுனாமி


ஹானலுலு : கனடாவில் பசிபிக் கடற்கரைப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 7.7 ரிக்டர் புள்ளிகள் அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ந¤லநடுக்கத்துக்கு பிறகு ஏற்பட்ட பின்னதிர்வுகள் 4.6 ரிக்டர் புள்ளிகள் அளவுக்கு இருந்தன. இதனால் ஆழ்கடல் பகுதியில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரிந்தது. இதனால் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மக்கள் நெருக்கம் மிகுந்த தலைநகரான ஓஹு, ஹானலுலு உள்ளிட்ட நகரங்களில் மக்கள் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்ப ட்டனர். முதலில் 3 அடி உயர கடல் அலைகள் எழுந்தன. கரையோரப் பகுதிகளில் சுனாமி தாக்கியது.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: தரிசனத்துக்கு 20 மணிநேரம் ஆகிறது


திருப்பதி, அக்.28-

திருமலையில் பக்தர்கள் கூட்டம் நேற்று சனிக்கிழமை அதிகமாக இருந்தது. வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் வெளியே காத்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தை பார்த்து தேவஸ்தானம் மஹாலகு தரிசனத்தை பின்பற்றியது. கியூ காம்ப்ளக்ஸில் காத்திருந்த பக்தர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

சிறப்பு தரிசனத்துக்கு 6 மணி நேரமும், திவ்ய (நடைபாதை) தரிசனத்துக்கு 5 மணி நேரமும், தர்ம தரிசனத்துக்கு 20 மணி நேரமும் ஆனது. சனிக்கிழமை காலை 6 மணி முதல் 3 மணி வரை 46,668 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

பக்ரீத் மற்றும் வார இறுதி நாளில் விடுமுறை கிடைத்ததாலும் தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். ஐப்பசி மாதம் துலா மாதம் என்பதாலும் கூட்டம் அலைமோதியது.

ஆதீனம் - நித்யானந்தா மோதல் தங்க கீரீடம், செங்கோல் யாருக்கு?


நேரம்:10/28/2012 06:56:57Sunday2012-10-28
மதுரை: மதுரை ஆதீனம், நித்யானந்தா இடையே தங்க கிரீடம், செங்கோல் யாருக்கு என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தாவை கடந்த 19ம தேதி இளைய மடாதிபதி பொறுப்பில் இருந்து டிஸ்மிஸ் செய்து மதுரை ஆதீனம் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து உருவாக்கிய அறக்கட்டளை கலைக்கப்பட்டு, ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டது.இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட போது பெங்களூரில்
மந்திரி சபை விரிவாக்கம்: ஆந்திராவுக்கு அடித்தது அதிர்ஷ்டம்
இன்று நடந்த மத்திய மந்திரி சபை மாற்றத்தின் போது 22 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இந்த 22 பேரில் பல்லம் ராஜு, நடிகர் சிரஞ்சீவி, ஜெயசூர்ய பிரகாஷ்ரெட்டி. சர்வேஸ் சத்ய நாராயணா, பொரிசா பல்ராம் நாயக், கிருபா ராணி கில்லி ஆகிய 6 பேர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே மத்திய மந்திரிசபையில் அதிக மந்திரிகளை அதாவது 8 மத்திய
மந்திய மந்திரி சபையில் மாற்றம்: பதவியேற்ற 22 மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள்மந்திய மந்திரி சபையில் மாற்றம்: பதவியேற்ற 22 மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள்
புதுடெல்லி, அக். 28 -

பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மந்திரி சபையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இன்று மாற்றியமைக்கப்பட்டது. இதில் 7 கேபினெட் மந்திரிகளும், 2 ராஜாங்க மந்திரிகளும் மற்றும் 13 துணை மந்திரிகளும் பதவியேற்றனர்.

அவர்களின் பெயரும் இலாக்காக்களின் விபரங்களும் பின்வருமாறு:-

கேபினெட் மந்திரிகள் 7 பேரின் பெயரும் இலாக்காக்களும்;-

Click Here காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம்: 24 மணி நேரத்துக்கு மழை எச்சரிக்கை

Click Here
காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம்: 24 மணி நேரத்துக்கு மழை எச்சரிக்கை
சென்னை, அக்.28-

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைவதால் தமிழ்நாட்டில் 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் அருகே தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.  அது தீவிரம் அடைந்து தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அநேக இடங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிகப்பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய ஜேர்மனியில் கடும் குளிர்: ரயில் சேவை பாதிப்பு


[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012,
ஜேர்மனியின் பல பகுதிகளில் ஒரே நாளில் குளிர் திடீரெனப் பரவியதையடுத்து பனிப்பொழிவும் அதிகரித்தது.
மத்தியப் பகுதி மற்றும் தென் பகுதிகளில் குளிர் 0 டிகிரிக்கும் குறைவாக இருந்தது.
கடந்த பத்தாண்டுகளுக்குப் பின்பு இப்போது தான் ஜேர்மனியில் ஒக்ரோபர் மாதத்தில் குளிர்காலம் தொடங்கி இருக்கிறது.
பவேரியா, சேக்ஸனி, ரைன்லாந்து - பேலட் டினேட், ஹெஸ்ஸி மற்றும் சார்லாந்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.
நேற்று லீப்சிக், டிரெஸ்டென் மற்றும் மியூனிச்சில் பனி பெய்யத் தொடங்கும் என்று ஜேர்மனியின் தட்பவெப்ப மையம் தெரிவித்தது.
இத்தகைய திடீர் பனிப்பொழிவு முப்பது, நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை

அமெரிக்காவை 'சாண்டி' புயல் தாக்கியது: 6 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவை 'சாண்டி' புயல் தாக்கியது: 6 கோடி பேர் பாதிப்பு
வாஷிங்டன், அக் 28-

அமெரிக்காவையொட்டியுள்ள கரிபியன் கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன் ஹரிகேன் சாண்டி புயல் உருவானது. இதனால் கரிபியன் கடல் பகுதியில் உள்ள ஜமைக்கா, கியூபா நாடுகளில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த புயலுக்கு இந்த இரு நாடுகளிலும் 60 பேர் பலியானார்கள். சாண்டி

வானிலிருந்து மைதானத்திற்குள் திடீரென விழுந்த சுறாவால் பரபரப்பு




[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012
கோல்ப் கிளப் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த போது வானிலிருந்து திடீரென சுறா மீன் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்னர் சிலர் கோல்ப் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வானத்தில் இருந்து உயிருள்ள சுறா மீன் ஒன்று மைதானத்தில் விழுந்து துடித்தது. அதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுத்தை உடலில் இருப்பது போல் புள்ளிகள் நிறைந்த அந்த சுறா மீன் 2 அடி

கனடா செய்தி கனடாவில் நிலநடுக்கம்: ஹவாய் தீவை சுனாமி தாக்கியது




[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012,
கனடாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஹவாயிலுள்ள சைன் தீவை சுனாமி தாக்கியுள்ளது.
கனடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மாஸ்ஸெட் நகரில் இருந்து 139 கிலோ மீற்றர் தொலைவை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டரில் 7.7 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது.
பின்னர் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி பேரலைகள் தாக்கலாம்

Oct 27, 2012

பாதாம் பருப்பு


அன்பர்களுக்கு வணக்கம், நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என்பதை அறியோம், பணக்காரன் மட்டும்தான் பாதாம் பிஸ்தா சாப்பிடுவான்னு ஒரு நினைப்பு எல்லார்கிட்டயும் இருக்கு, ஆனா இந்த கட்டுரைய படிச்சிங்கனாதான் அது எல்லாரும் சாப்பிட வேண்டிய ஒன்னுனு புரிஞ்சுக்குவிங்க.
பாதாம் பருப்பு - எளிய விளக்கம்:


இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும்

தங்கத்தின் விலை தினம் தினம் மாறுவது ஏன்?


அன்பர்களுக்கு வணக்கம், என்னை ரொம்ப கவர்ந்த தொழிற்களம் மேல நான் இப்ப கோபமா இருக்கேன், எனக்கு ரொம்ப பிடிச்ச விசயங்களை பத்தி எழுத சொன்னா தினமும் 1 பதிவுங்கறதுங்கறது  சாதாரணமா போய்டும், தொழிற்சார்ந்த பதிவுங்கறதால எனக்கு எதுவும் பிடிபடலை. 

ஆனாலும் இதுல பெரிய நல்ல விசயம் இருக்கு, இப்படி எழுதனுங்கறதுக்காகவே ரொம்ப நாளா இணையம் இருந்தும் தெரிஞ்சுக்காம விட்ட பல விஷயங்களை இப்ப தெரிஞ்சுகிட்டு எழுத துவங்கறேன், எல்லா விஷயமும் ஆரம்பத்துலயே எல்லாருக்கும் வந்துடாது, பழக பழக சரியா

கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 1



விலங்குகள் வளர்ப்பு :



















ஆபரணங்கள் :




























தகவல் களஞ்சியம் :















வினாடி வினா :








லாபம் தரும் சந்தன மரம் வளர்ப்பு




                                                முன்பெல்லாம் சந்தன மரங்களை அடர்ந்த வனங்களில் மட்டுமே காண முடியும். தற்போது அமல்படுத்தப்பட்ட புதிய சட்டத் திருத்தத்தின்படி எந்த ஒரு தனி மனிதனும் சந்தன மரம் பயிரிடலாம் என்பதே நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் அகும். ஆம், விவசாய நிலம் வைத்திருக்கும் எந்த ஒரு தனி மனிதனும் தன்னிடம் உள்ள நிலத் தொடர்பான சிட்டா, அடங்கல், மற்றும் கணக்கெடுப்பு எண்ணைக் கொண்டு தனது கிராம நிர்வாக அதிகாரியிடம் பதிவு செய்து கொண்டு இதனை விதைகள்

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராஜினாமா


October 27, 2012
மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
நீண்டகாலமாக சொல்லப்பட்டு வரும் மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு கட்சிப்

இரவு பார்ட்டிகளுக்கு போக மாட்டேன் – சுனைனா

October 27, 2012
பொதுவாக நடிகர், நடிகைகள் இரவு விருந்துகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர். மும்பை திரையுலகில் இந்த கலாசாரம் வேரூன்றி விட்டது. அந்த பழக்கம் தமிழ் பட உலகிலும் பரவி வருகிறது. இதுபோன்ற விருந்துகளில் அத்துமீறல், அடிதடி தகராறுகள் போன்றவையும் நடப்பது உண்டு. இத்தகு விருந்து ஒன்றில் தான் தனது கையை பிடித்து இழுத்து தகாதமுறையில் நடந்ததாக சக நடிகர் மீது நடிகை சோனா புகார் செய்தார்.
தெலுங்கு நடிகர் மனோஜ், மஞ்சுவும் ‘மங்காத்தா’ படத்தில் நடித்த மகத்தும்

பிறந்த நாள் கொண்டாடிய அசின், அமலாபால்

October 27, 2012
நடிகைகள் அசின், அமலாபால் 26.10.2012 அன்று ‘கேக்’ வெட்டி தங்கள் பிறந்த நாளை கொண்டாடினர். இருவருக்கும் ஒரே பிறந்த தேதியாகும். நடிகர், நடிகைகள் பலர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். அசின் இந்தி படங்களில் பிசியாக இருக்கிறார். இவ்வருடம் போல் பச்சன் ஹவுஸ் புல் படங்கள் அவரை மேலும் பிரபலப்படுத்தின. அசின்

கூடுதல் சம்பளம் கேட்டு கதாநாயகிகள் கெடுபிடி


October 27, 2012
கூடுதல் சம்பளம், இந்திப்பட மோகம் போன்ற காரணங்களால் தமிழ் படங்களுக்கு கதாநாயகிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிறைய படங்கள் கதாநாயகிகள் கிடைக்காமல் முடங்கி கிடக்கின்றன. படப்பிடிப்பை துவங்க முடியாமல் இயக்குனர்கள் தவிக்கின்றனர்.
நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி, அமலாபால், அஞ்சலி போன்றோர் ரூ. 70 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடியே 25 லட்சம் வரை தங்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ளனர். அதைவிட குறைவான சம்பளம் வாங்க அவர்கள் தயாராக

சுகயீன சம்பளம் பெறும் 3000 பேர் அதை இழக்கும் நிலையில்


October 27, 2012

டென்மார்க்கில் உழைப்பாளிகளாக இருப்போர் பல்லாயிரக்கணக்கானவர் தமது உடலை வருத்தி உழைப்பதால் வருடந்தோறும் பாதிப்படைந்து வருகிறார்கள்.
இவர்களுக்கான சுகயீனக்கால சம்பளம் வழங்கும் காலம் வெறும் 52 வாரங்கள் மட்டுமே, இக்காலப் பகுதியை முடித்தவர்களில் சுமார் 3000 இருந்து 3500 பேர் மறுபடியும் வேலைக்கு திரும்ப வேண்டிய நிலை உள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.
சுகயீன லீவு பெறுவோருக்கு சம்பளம் வழங்குவதற்காக பில்லியன் கணக்கில்

பென்சன் எடுத்து வெளிநாடு செல்வோர் தொகை 46.000 ஆக அதிகரிப்பு

October 27, 2012
டென்மார்க்கில் பென்சன் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு போய் வாழ்வோர் தொகை என்றுமில்லாதளவு அதிகரித்துவிட்டதாக பொலிற்றிக்கன் எழுதியுள்ளது.
இதுவரை சுமார் 46.000 பேர் டேனிஸ் பென்சனில் வேறு நாடுகளில் இருந்து வண்டியோட்டி வருகிறார்கள், இதனால் அரசுக்கு வருடாந்தம் இரண்டு பில்லியன் குறோணர்கள் செலவு ஏற்பட்டுவருகிறது.
கடந்த 2001 ம் ஆண்டு 775 மில்லியன் குறோணராக இருந்த தொகை இப்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளமை பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாயுள்ளது.
இவ்வளவு பெருந்தொகை பணம் டென்மார்க்கில் இருந்து வெளியேறுவது

Oct 25, 2012

முதல் முறையாக ரோபோ மூலமான இருதய சத்திரசிகிச்சை வெற்றி - பிரித்தானிய விஞ்ஞானிகள் சாதனை Top News

முதல் முறையாக ரோபோ மூலமான இருதய சத்திரசிகிச்சை வெற்றி - பிரித்தானிய விஞ்ஞானிகள் சாதனை Top News
[Thursday, 2012-10-25
News Service ரோபோவின் மூலம் இருதய சத்திரசிகிச்சையொன்றை வெற்றிகரமாக மேற்கொண்டு பிரித்தானிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 'டாவின்சி' என்று பெயரிடப்பட்ட 4 கைகளைக் கொண்ட ரோபோ மூலம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சத்திரசிகிச்சையின் போது 'டாவின்சி' ஆனது வைத்தியர்களினால் ரிமோட் ஒன்றின் ஊடாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
  
மேலும் நோயாளியின் இதயத்தினை அதி துல்லியமான, முப்பரிமாண

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...