Aug 14, 2012

நிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீஸ் 365

ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் ஜனத்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி, கூகுள் டாக்ஸ் (Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து, ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில், புதிய திசை யையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது.
Posted: 13 Aug 2012 09:12 AM PDT

சர்பேஸ் டேப்ளட் மூலம் ஹார்ட்வேர் பிரிவில் மைக்ரோசாப்ட் இறங்கப் போகிறது என்ற செய்தியைக் கேட்டு ஆரவாரம் செய்தவர்களுக்குத் தீனி போடும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கிடைக்கும் கீகளுடன் இயங்கும் வகையில், புதிய வகை மவுஸ் மற்றும் கீ போர்ட்களை மைக்ரோசாப்ட் தயாரித்து வழங்க இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாகவே மைக்ரோசாப்ட் கீ போர்டுகளையும், மவுஸ்களையும் தயாரித்து வழங்கி வருகிறது.

ஆனால், இப்போது வர இருக்கும் கீ போர்ட்களும், மவுஸும் சற்று மாறுபாடு கொண்டதாக இருக்கப் போகின்றன. Wedge, the Sculpt, மற்றும் the Touch என மூன்று மாடல்களில் இவை வெளியாகின்றன. இவற்றின் பயன்பாடு பெரும்பாலும் விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களின் செயல்பாட்டினை ஒட்டியே அமைந்துள்ளதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.

சென்ற ஜூலை 30ல் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், புளுடூத் வசதியுடன் கூடிய இரண்டு மாடல் கீ போர்ட் மற்றும் மவுஸ் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவை Wedge Touch Mouse, the Wedge Mobile Keyboard, the Sculpt Touch Mouse, and the Sculpt Mobile Keyboard எனவும் கூறப்பட்டது.

இவை விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் மட்டுமின்றி, விண்டோஸ் ஆர்.டி., விண்டோஸ் 7 மற்றும் டேப்ளட் பிசிக்களுடன் இணைந்து செயலாற்றும். மேலும் மேக் சிஸ்டம் ஓ.எஸ்.எக்ஸ் பதிப்பு 10.6 மற்றும் 10.7 ஆகியவற்றுடனும் இவை இயங்கும். Wedge Touch Mouse மற்றும் Sculpt Touch Mouse ஆகியவற்றில், நாம் டேப்ளட் பிசி ஒன்றின் டச் ஸ்கிரீன் திரையில் விரல்களைக் கொண்டு என்ன செயல்பாடுகளை மேற்கொள்வோமோ, அவற்றை மேற்கொள்ளலாம்.

Wedge Touch Mouse நான்கு வகையான டச் ஸ்குரோலிங் இயக்கம் கொண்டதாக இருக்கும். நம் பாக்கெட்டில் எடுத்துச் செல்லும் வகையில், அளவில் சிறியதாக இருக்கும். புளுடூத் 4 தொழில் நுட்பம் இதில் இயங்கும். இதனால், இதனை இணைக்கத் தேவையான கேபிள் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

புளுடூத் இயக்கத்துடன், ப்ளூ ட்ராக் இயக்கமும் இதில் கிடைக்கும். இதனால், எந்த தளத்திலும் இதனை இயக்கலாம். சிறப்பான செயல்பாடு கிடைக்கும். மேலும் இதில் உள்ள பேக் அப் (Backpack Mode) மூலம் இதன் மின் சக்தி தேவையற்ற வகையில் வீணாவது தடுக்கப்படுகிறது. இதன் விலை 70 டாலர் அளவில் இருக்கலாம்.

Wedge Mobile கீ போர்ட் தடிமன் குறைவாகக் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தின் ஹாட் கீகள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மீடியா இயக்குவதற்கான கீகளும் தரப்பட்டுள்ளன. இதிலும் புளுடூத் இயக்கம் கிடைக்கிறது. இந்த கீ போர்டில் கவர் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதனை டேப்ளட் பிசியின் ஸ்டாண்டாகவும் பயன்படுத்தலாம். இதன் விலை 80 டாலர் என்ற அளவில் இருக்கும்.

தடிமன் பற்றிக் கவலை இல்லை என எண்ணுபவர்களுக்கு Sculpt கீ போர்ட் உகந்ததாக இருக்கும். Sculpt கீ போர்ட் வழக்கமான கீ போர்டாக வடிவமைக்கப் பட்டு, சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. நான்கு முனைகளும் வளைவாக இருப்பதால், இதனை வைத்து இயக்கப் போதுமான இடம் மட்டும் இருந்தால் போதும்.

விண்டோஸ் 8 சிஸ்டம் ஹாட் கீகள் தனியே தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 10 மாதங்களுக்கு மின் சக்தியைத் தரக் கூடியதாக அமைந்துள்ளது. கீ போர்டிலிருந்து எந்த இயக்கமும் கம்ப்யூட்டருக்கு குறிப்பிட்ட காலம் வரை செல்லவில்லை எனில், மின் சக்தி மிச்சப்படுத்தும் வகையில் ஸ்லீப் மோடுக்குத் தானாகச் சென்றுவிடுகிறது.

மேலே கூறப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இணைந்து இதனை இயக்கலாம். விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்துடனும் இதனை இயக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இதன் விலை 50 டாலராக இருக்கலாம்.

Sculpt மவுஸ் நான்கு வழி இயக்கம் கொண்டுள்ளது. புளுடூத் இயக்கம் உள்ளடக்கியது. இதன் விலை 50 டாலராக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் மைக்ரோசாப்ட் டச் மவுஸ் (Touch Mouse) ஒன்றையும் தருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அசைவுகள் வழி இயக்கத்திற்கு இது துணை புரிகிறது. ஸ்வைப்பிங், இரு விரல் கொண்டு இயக்குவது, மூன்று விரல் கொண்டு ஸூம் செய்வது, முன்னரும் பின்னரும் செல்ல, போன்ற செயல்பாடுகளை இதன் மூலமும் மேற்கொள்ளலாம். இதன் விலை 80 டாலர் அளவில் இருக்க வாய்ப்புள்ளது.

இந்த சாதனங்களினால், இனி கம்ப்யூட்டர் வைத்து இயக்கும் டேபிள்களில் கூட மாற்றங்கள் ஏற்படலாம்.

வயர்லெஸ் மற்றும் டச் ஸ்கிரீன் செயல்பாட்டுக்கு உதவும் வகையில் கீ போர்டும் மவுஸும் அமைய இருப்பதால், மாற்றங்களையும், சாதனங்களை இயக்கும் வகையில் முற்றிலும் புதிய வழிகளையும் எதிர்பார்க்கலாம். இந்த சாதனங்கள் அனைத்துமே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்துபவர்களின் வேலைப் பளுவினை எளிதாகவும், இனிமையாகவும் அமைக்க எடுத்துக் கொள்ளும் தீவிர முயற்சிகளின் அடையாளங்களே.

எப்படியாவது, தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மக்கள் விரும்பும் சிஸ்டமாக மாற்ற, அனைத்து வழிகளிலும் மைக்ரோசாப்ட் திட்டமிட்டு உழைத்திடும் என நாம் எதிர்பார்க்கலாம். இவற்றின் மூலம் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெற்றியை ஈட்டலாம்.

விண்டோஸ் 8 - புதிய மவுஸ் மற்றும் கீ போர்ட்


சர்பேஸ் டேப்ளட் மூலம் ஹார்ட்வேர் பிரிவில் மைக்ரோசாப்ட் இறங்கப் போகிறது என்ற செய்தியைக் கேட்டு ஆரவாரம் செய்தவர்களுக்குத் தீனி போடும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கிடைக்கும் கீகளுடன் இயங்கும் வகையில், புதிய வகை மவுஸ் மற்றும் கீ போர்ட்களை மைக்ரோசாப்ட் தயாரித்து வழங்க இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாகவே மைக்ரோசாப்ட் கீ போர்டுகளையும், மவுஸ்களையும் தயாரித்து வழங்கி வருகிறது.

நல்லூர் ஆலயத்தின் தேர், தீர்த்த உற்சவ நேரத்தில் காவடிகளில் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்ற தடை



நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேர் மற்றும் தீர்த்த உற்சவ நேரத்தின் போது காவடிகளில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற வரும் பக்தர்கள் காலை 9 .00 மணிவரை ஆலயத்திற்குள் செல்ல யாழ் மாநகர சபை தடைசெய்துள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 24 ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
எதிர்வரும் 16 ஆம் திகதி தேர் உற்சவமும், 17ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் காலை 7 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்து 9 .00 மணிக்கு அவரோகணித்து ஆலயத்திற்குள் சென்ற பின்னர் மட்டும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற ஆலயத்திற்கு வரும் காவடிகள், தூக்குக் காவடிகள் பாற்செம்பு மற்றும் கரகங்கள் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவோர் தடையைத் தாண்டி உட்செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் என மாநகர சபை அறிவித்துள்ளது.
தேர், தீர்த்தக் காலங்களில் பக்தர் கூட்டம் அதிகமாகக் காணப்படுகின்ற காரணத்தினால் பக்தர்களின் இடையூறுகளைத் தவிர்க்கும் நோக்கில் ஆலய நிர்வாகமும், மாநகர சபையும் இணைந்து இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

Nallur Kandaswamy Temple festival 2012 day 19 pm

எலும்பை பலப்படுத்தும் அகத்தி!



FILEஅகத்திக்கீரையோட மகத்துவம் நமக்கு பலபேருக்கு தெரியாது. இதுல வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்குது. சாம்பார், கூட்டு, பொரியல் செஞ்சி இந்த கீரையை சாப்பிட்டு வந்தீங்கனா எலும்பு நல்லாவே வளரும். வயசான காலத்துல சிலபேருக்கு இடுப்பு எலும்பு பலமில்லாம முன்பக்கமோ, பின்பக்கமோ வளைஞ்சி நடக்கவே கஷ்டப்படுவாங்க.

இந்தமாதிரி பிரச்சினைகளை தவிர்க்கவும்னா அடிக்கட
ி அகத்திக்கீரை சாப்பிடவும். இது வாயுவை உண்டாக்குற கீரையா இருந்தாக்கூட அதோட பெருங்காயம், வெ‌ள்ளைப்பூண்டு சேர்த்து சமைச்சா வாயு விலகிப்போயிரும். அகத்திக்கீரையில அவ்வளவு விஷயம் இருக்கு.

அரைக்கீரையை தினமும் சாதத்தோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா உடம்புல நல்ல பலம் ஏறும். கல்யாணமான ஆண்க‌ள் அரைக்கீரையோட வெங்காயம் சேர்த்து நெ‌ய்யில பொரிச்சி சாப்பிட்டு வந்தா புது ரத்தம் ஊறி தாது அவுக்க‌ள் உற்பத்தியாகி இல்லற வாழ்க்கைக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

செவ்வாய் கிரகத்தில் தற்போது என்ன நேரம்? அறிந்து கொள்ளும் வகையில் புதிய Apps உருவாக்கம்





செவ்வாய் கிரகத்தில் தற்போது என்ன நேரம் என்பதை நாம் இங்கிருந்தே தெரிந்து கொள்ளும் வகையில், நாசா வழிவகை செய்துள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிறுவனம், சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக கியூரியாசிட்டியை அங்கு நிலைநிறுத்தியுள்ளது.
இந்நிலையில் நாசா நிறுவனத்தின் ஒருபிரிவான ‌கோட்டார்ட் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஸ்பேஸ் ஸ்டடீஸ் நிறுவனம், புதிதாக ஒரு ஆப்சை(Apps) உருவாக்கியுள்ளது.
இந்த ஆப்சை நமது கணனி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களில் நிறுவுவதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய

படுவேகமாக உருகிவரும் ஐஸ் பாறைகள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்



பருவ நிலை மாற்றம் காரணமாக ஆர்டிக் கடல் பகுதியில் உள்ள ஐஸ் பாறைகள் பெருமளவில் அதிவேகமாக தற்போது உருகி வருவது தெரியவந்துள்ளது.இந்நிலையில் பூமியின் பருவநிலை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக கிரையோ சாட்-2 என்ற விண்கலத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் அந்த விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ஆர்டிக் கடலில் உள்ள ஐஸ் கட்டிகள் முன்பை விட அதிவேகமாக உருகி வருவது தெரியவந்துள்ளது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் அங்கு ஐஸ் கட்டிகளே இல்லாத நிலை ஏற்படும். அதாவது அங்கு முற்றிலும் ஐஸ் கட்டிகள் உருகி விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 4,500 கி.மீ வேகத்தில் செல்லும் விமானம்



இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 1 மணி நேரத்தில் விமானத்தில் செல்ல முடியுமா? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.அமெரிக்காவின் நாசா மற்றும் பென்டகன் நிதி அளிப்புடன் 140 மில்லியன் டொலர் செலவில் “எக்ஸ்-51-ஏ வேவ் ரைடர்” என்ற ஜெட் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் யாரையாவது பார்த்தா உடனே 'இன்பார்ம்' பண்ணுங்க... நாசாவுக்கு ஒபாமா கோரிக்கை!


 If You Find Martians Let Me Know Right Away Obama Nasa
Nasas Morpheus spacecraft explodes ...ர்போர்ஸ் ஒன் விமானத்திலிருந்து: செவ்வாய் கிரகத்தில் ஏதாவது உயிரினம் இருப்பதாக தெரிய வந்தால், உடனே எனக்குத் தெரியப்படுத்துங்கள். மிக மிக நுன்னிய உயிரினமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, அதுதான் உலகுக்கு மிகப் பெரிய செய்தி என்று நாசா விஞ்ஞானிகளிடம் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய நிகழ்வை மனதைக் கொள்ளை கொள்ளும் சம்பவம்

காஷ்மீரில் இன்று அதிகாலை 2 மணிக்கு திடீரென நிலநடுக்கம்

காஷ்மீரில் இன்று திடீர் நிலநடுக்கம்
காஷ்மீரில் இன்று அதிகாலை 2 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஸ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் பீதி அடைந்தனர். தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

அங்கு 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...