May 20, 2013

30 வகை மாங்காய்-மாம்பழ ரெசிபி---30 நாள் 30 வகை சமையல்,


 

வெயில் சீஸனுடன் கூடவே மாங்காய் சீஸனும் களைகட்டிவிட்டது. மங்காய் - மாம்பழம் அதிகமாக கிடைக்கும் இந்த நேரத்தில், அவற்றைக் கொண்டு செய்யக்கூடிய 30 வகை ரெசிபிகளை அளித்திருக்கிறார்... ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், நீண்ட நாள் அவள் விகடன் வாசகியுமான கல்பகம் லஷ்மணன். அந்த ரெசிபிகளை அற்புதமாக சமைத்து வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
 ''ஊறுகாய் வகைகள் மட்டுமல்லாமல்... ஸ்குவாஷ், குல்ஃபி, லஸ்ஸி, மில்க் ஷேக் என்று விதம்விதமான உணவுக் குறிப்புகள் இங்கு இடம்பெறுகின்றன. இந்த மாங்காய் சீஸன், உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி சீஸனாக பரிமளிக்கட்டும்'' என்று இருவரும் மனப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள்.

வெந்தய மாங்காய்
தேவையானவை: கெட்டியான புளிப்புள்ள மாங்காய் - 20 (மீடியம் சைஸ்), காய்ந்த மிளகாய் - 200 கிராம், வெந்தயம் - 100 கிராம், மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், பொடித்த கல் உப்பு - ஒரு கப், நல்லெண்ணெய் - 4 கப். தாளிக்க: கடுகு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4.
செய்முறை: மாங்காய்களை கழுவி, ஈரத்துணியால் துடைத்து துண்டுகளாக வெட்டவும்.

முத்துக்கள் பத்து! --- உபயோகமான தகவல்கள்,



ங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்திலேயே முடித்துத் தரும் ஏ.டி.எம், இந்த அவசர யுகத்தில் நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால், எந்த ஒரு வசதிக்கும் பின்னால் சில பிரச்னைகள் ஒளிந்திருப்பது இயற்கைதானே? நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உங்கள் பணத்தை கையாள உதவும் வகையில் சில டிப்ஸ்கள், 'முத்துக்கள் பத்து’ என்ற தலைப்பில் இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

தனியே... தன்னந்தனியே..!
அகால நேரங்களிலோ, மிகவும் தனிமையாக நீங்கள் இருக்கும் நிலை ஏற்படும்போதோ ஏ.டி.எம்-மைத் தவிருங்கள். கொஞ்ச நேரம் காத்திருந்தாலும் பரவாயில்லை... வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும் ஏ.டி.எம்-களை தேர்ந்தெடுங்கள். ஒரே அறையில் இரண்டு மெஷின்கள் இயங்கும் வசதி கொண்ட பூத்களை இரவு நேரங்களில் தவிருங்கள். ஏ.டி.எம்-மைப் பயன்படுத்தும் ஆரம்ப காலத்தில் நம்பிக்கையான ஒருவரின் துணை அவசியம்.
கணக்கு எங்கே...  கார்டு அங்கே!
முடிந்த மட்டிலும் உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்-மைப் பயன்படுத்துவதே சிறந்தது. சில சமயம் பணம் வருவதில் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது பணம் வராமல், தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்பட்டாலோ மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளுக்கான நடைமுறைகள் கொஞ்சம் எளிதாக இருக்கும்.
கார்டை விட்டு கண்ணைத் திருப்பாதீர்கள்!
பெரிய கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி இருக்கிறது. சில நாணயக் குறைவான நிறுவனங்களிலும், பெட்ரோல் பங்குகளிலும் உங்கள் கார்டை தேய்த்துப் பணம் பெற்ற பிறகு, ரகசியமாகத் தாங்கள் வைத்திருக்கும் இன்னொரு மெஷினிலும் தேய்த்துக் கொள்வார்கள். இது சம்பந்தபட்ட ஊழியர்களும் ஏமாற்றுப் பேர்வழிகள் சிலரும் சேர்ந்து செய்திருக்கும் தில்லாலங்கடி ஏற்பாடு. இதன் மூலம் உங்கள் கார்டின் அனைத்து

பாம்பு , தேள் , பூரான், மனிதன் ,நாய் கடி விடம் நீங்க ---- சித்த மருத்துவம்,



மனிதன், பாம்பு, தேள், பூரான்,
நாய் கடி விடம் நீங்க

பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விடங்களைநீக்குவது பற்றி நாம் கதைப்போம் .
பொரும்பாலும் இந்த நச்சு விடங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , பல எலி போன்ற விடங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும் . எலிக்கடியினால் பின்னாளில்
மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த விடமனாலும் . அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும் .

நாய்க்கடி

நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும் .(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விடம் நீங்கும் .

சீத மண்டலி
சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும்
குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர்

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!!!

உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான். ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். 
 
அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம். 

இதயத்தை பாதுகாக்கும் பழங்கள். இன்றைய நவீன உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன.
அவை நீரிழிவு, இரத்த அழுத்தம்.
இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம்தான் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும்.

ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு


உடல் இளைத்து இருப்பதுதான் அழகு என்றுதான் பெரும்பாலான பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் சொல்லப்படுகிறது. ஆனால் சத்துக்களை குறைத்து உடலை ஒல்லியாக்குவது தேவையற்றது. அது உடலை பலவீனமாகத்தான் ஆக்கும். உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். சுக்கு தண்ணீர் உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம். மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும். பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச்

இஞ்சி(Ginger), சுக்கு(Dried ginger), கடுக்காய்(Terminalia chebula)




காலையில் வெறும் வயிற்றில் பெரு விரல் அளவுக்கான இஞ்சியை தோல் சீவி விட்டு வாயில் போட்டு சிறுக சிறுக ஊரும் உமிழ் நீரை விழுங்கிக்கொள்ள வேண்டும். லேசாக அந்த இஞ்சியை ஆசை போட்டு ஒரு கால் மணி நேரமாவது வாயில் வைத்திருக்க வேண்டும். அந்த உமிழ் நீர்களை விழுங்க விழுங்க சற்று நேரத்தில் நல்ல பசி எடுக்கும். இஞ்சி சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பின்தான் சாப்பிடவேண்டும். அதேப்போல மதியம் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் பெரு விரலில் பாதி அளவுக்கு தோல் இல்லாத சுக்கை இஞ்சியை சாப்பிட்டது போலவே சிறுக சிறுக சாப்பிட வேண்டும். மாலையிலும் அதேப்போல சாப்பிட அரை மணி நேரம் முன் கடுக்காயை அரை கடுக்காயை விதை இல்லாமல் வாயில் போட்டு வைத்தால் அது அவ்வளவு துவர்ப்பாக இருக்கும். இந்த கடுக்காயில்தான் அவ்வளவு மகிமையும் உள்ளது. இந்த கடுக்காயை உண்பதர்க்காகத்தான் இஞ்சியையும் சுக்கையும் சாப்பிடுகிறோம். மாதக்கணக்கில் குடலில் தங்கியுள்ள

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...