Jun 2, 2015


சுண்டக்காயின் மருத்துவ குணம்..!


-------------------------------------
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும்.தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

பலாப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!!



பலாப்பழம் மட்டுமின்றி, அதன் விதையிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள், எலக்ரோலைட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை வளமாக உள்ளது. மேலும் இப்பழத்தில் கலோரிகள் இருக்கிறது ஆனால் கொழுப்புக்கள் இல்லை. ஆகவே இப்பழத்தை எவ்வித அச்சமும் இல்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இது உடலுக்கு மட்டுமின்றி அழகைப் பாதுகாக்கவும் உதவுகிறது. சரி, இப்போது பலாப்பழத்தின் நன்மைகளைப் பார்ப்போமா!!!
மலச்சிக்கல் :-
பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.
புரோட்டீன் :-
பலாப்பழத்தில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இதனை சீசன் போது தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...