Mar 13, 2013

தோல்வியில் முடிந்த முதல் நாள் போப் ஆண்டவர் தெரிவு செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2013



புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய கர்தினால்கள் கூட்டம், வாடிகன் பீட்டர் தேவாலயத்தின் 16-வது விசேஷ ஆலயத்தில் நேற்று தொடங்கியது.உலகம் முழுவதிலும் இருந்து 115 கர்தினால்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்திற்கு வாடிகன் கர்தினால்கள் பல்கலைக்கழக டீன் ஆஞ்சலோ சுதானோ தலைமை தாங்கினார். ஆனால் நேற்றைய முதல் நாள் கூட்டம், புதிய போப் ஆண்டவரை தெரிவு செய்யாமல் தோல்வியில் முடிந்தது. இதற்கான அறிவிப்பு, வாடிகன் தேவாலய புகை போக்கியில் வெளிவந்த கருப்பு புகை அறிவிப்பு தெரிவிக்கிறது.
ஒரு புதிய போப்பை, தேர்வு செய்ய இந்த 115 கர்தினால்களும் ஒரு நாளைக்கு 4 முறை வாக்களிப்பார்கள். ஒருவர் மீது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும் வரை இந்த வாக்கெடுப்பு தொடரும்.
பொதுவாக போப் ஆண்டவரை தெரிவு செய்வது ஒரு சில நாட்கள் நடக்கும்

முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படவுள்ள புதிய போப்

முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படவுள்ள புதிய போப்
 புதன்கிழமை, 13 மார்ச் 2013,
120 கோடி கத்தோலிக்க கிறுஸ்தவர்களின் தலைவராக இருந்த போப் 16-ம் பெனடிக்ட், முதுமை காரணமாக கடந்த 28-ம் தேதி தனது பதவியை துறந்து வாடிகன் நகரில் இருந்து வெளியேறினார்.இதைதொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய, உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 115 கர்தினால்கள் வாடிகன் தேவாலாயத்தில் கூடி, இரண்டு நாள் ஆலோசனை நடத்தினர்.
இறுதியில் நேற்று இரவு 11. 45 மணிக்கு அர்ஜென்டினாவின் பியுனோஸ் ஏரெஸ் நகர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். லத்தீன் அமெரிக்கா நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் போப் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் பிஷப் பெர்கோக்லியோ, போப் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்தெடுந்தார்

புதிய பாப்பரசராக அர்ஜென்டினாவின் பெர்கோக்லியோ தேர்வு

புதிய பாப்பரசராக அர்ஜென்டினாவின் பெர்கோக்லியோ தேர்வு


March 14, 2013 
புதிய பாப்பரசராக பியுனோஸ் ஏரெஸ் நகர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய போப் இனி போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார்.

உடல் நிலையை காரணம் காட்டி, 16வது பெனடிக்ட், கடந்த மாதம் பதவி விலகியதால், புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக, வாடிகனின், சிஸ்டன் தேவாலயத்தில், 115 கார்டினல்கள் கூடி ரகசிய ஓட்டு பதிவை நடத்தி வருகின்றனர்.

கியை ஆவலோடு பார்த்து காத்திருந்தனர். ஆனால், கரும்பு புகை வெளியேறியதால், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை, என்பது தெரிந்தது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...