Aug 22, 2013







விண்டோஸ் 8 க்கான ஆண்ட்டிவைரஸ்



1. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials): 

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான, வைரஸுக்கு எதிரான பாதுகாப் பினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது. 

இதனைச் செயல்படுத்துவது, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்திறனைப் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் செய்யப்படுகிறது. இதனைப் பெற செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://windows.microsoft.com/enus/windows/securityessentialsdownload


2. ஏ.வி.ஜி. (AVG): 
அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும். 
இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வேர் தொகுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிகிறது. பாதுகாப்பில்லாத, சந்தேகத்திற்கு இட மான பைல்களைத் தடுத்து நிறுத்துகிறது. 
இணைய தள முகவரிகளை ஆய்வு செய்து எச்சரிக்கை செய்கிறது. நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் முயற்சிகளைத் தடுக்கிறது. டேட்டாக்கள் திருடப்படும் முயற்சிகளை முறியடிக்கிறது. இதனை இலவசமாகப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி : http://free.avg.com

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...