Mar 16, 2013

டென்மார்க்கில் பனிப்புயல் வீச ஆயத்தம்


March 16, 2013
டென்மார்க்கில் வரும் திங்கள், செவ்வாய் இருதினங்களும் பனிப்புயல் வீசப்போகிறது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திங்கள்தானே பார்க்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு விட்டேனா பார் என்று இன்றே பாறாத்தை ஆய்ச்சியின் மெல்லிய இடியப்ப கந்துபோல பனி கொட்ட ஆரம்பித்துவிட்டது.
நாளை ஞாயிறும் பனிப் பொழிவு தொடர்ந்தாலும் திங்கள்தான் அது கனவேகமடையும், ஆஸ்திரிய பகுதியில் இருந்து வரும் குளிர்காற்று டென்மார்க்கிற்குள் நுழைந்து ஆட்டம் போடப்போகிறது.
குளிர்காற்றும், பனியும் இணைந்தே வீசுவதால் இதன் பாதிப்பு மோசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு யூலன்ட் பகுதியில் திங்கள் முற்பகல் ஆரம்பித்து, புதன் மதியம் முடிவடையும், யூலன்ட் பகுதியில் திங்கள் பிற்பகல் ஆரம்பித்து புதன் பிற்பகல் முடிவடையும்.
சேலன்ட் பகுதியில் திங்கள் பிற்பகல் தொடங்கி புதன் இரவுவரையும் நீடிப்புப் பெறும்.
அதிகமாக நாடு முழுவதும் இதன் தாக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...