Nov 28, 2012

கனடாவில் அகதிக் கோரிக்கையா? புதிய கட்டுப்பாடுகள் - ஆயிரம் முறை யோசித்தே முடிவெடுங்கள்!


[Monday, 2012-11-26
News Service ஒரு காலத்தில் அகதிகளின் சொர்க்கபுரியாக, மனிதாபிமானம் நிறைந்த அன்பால் உபசரிக்கும் ஒரு நாடாகத் திகழ்ந்த கனடாவின் இன்றைய அகதியாளர் தொடர்பான கொள்கை மிகவும் கடுமையானதொன்றாகவும், அகதிகளிற்கான வசதிகள் பலதை மறுப்பதாகவும் இருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு அகதிக்கோரிக்கையாளர் சமூகநல உதவிகளைப் பெறுவதுடன், அவரது அகதிக்கோரிக்கை ஏற்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. அத்தோடு அந்த அகதி தனது குடும்பத்தினரை வரவழைப்பது கூட மிகச் சுலபமாக இருந்தது. இப்போதோ எல்லாமே தலைகீழ்.
  
இந்தப் புதிய கட்டுப்பாடுகள் இந்த வருடமே நடைமுறைக்கு வந்துள்ளதால் இனிவரும் அகதிகளிற்கே பல தலையிடிகள் காத்திருக்கின்றன.
2013ம் ஆண்டில் உள்வாங்கப்படும் குடிவரவாளர்களில் அகதிகளின்

இங்கிலாந்தில் கொட்டும் மழை - வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்! [Monday, 2012-11-26




News Service இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பெய்த பலத்த மழையில் 800க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த புதன்கிழமையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 800க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன.
  
மழை வெள்ளத்தில் மரம் விழுந்தும், காரில் சிக்கியும் 2 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று அதிகாரிகள்

உலகிலேயே செக்சியான மனிதர் வடகொரிய அதிபராம்! - சீன நாளிதழ் குசும்பு


[Wednesday, 2012-11-28
News Service உருண்டை முகத்துடன் இருக்கும் வடகொரியாவின் இளம் தலைவர் கிம் ஜாங்தான் உலகிலேயே செக்சியான மனிதர் என்று சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ் குசும்பு செய்தி வெளியிட்டிருக்கிறது.
  
சும்மா காத்து வாக்கில் வரும் செய்திகள், அரசல் புரசல் தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்படும் தகவல்களுக்கு கண், காது, மூக்கு வைத்து சுவாரஸ்யமாக கூறும் செய்திகளை ஆனியன் என்கிறார்கள். உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது என்பதால் இந்த பெயர். அமெரிக்காவில் தி ஆனியன் என்ற பெயரில் நாளிதழும் இணையதளமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடகொரிய தலைவர் கிம்ஜாங்யுன்ஐ தி ஆனியன் மீடியா நிறுவனம் இந்த ஆண்டின் செக்சியான மனிதர் என்று அறிவித்திருப்பதாக சீனாவின் தி பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ் குசும்பு செய்தி வெளியிட்டுள்ளது. இளமையானவர், அழகானவர், உருண்டை முகம்

செவ்வாய் கிரகத்தில் 80 ஆயிரம் பேரைக் குடியேற்றத் திட்டம்! [Wednesday, 2012-11-28




News Service செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம் நிகழும் என்றும், அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேர் அங்கு குடியேறத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்துள்ளார். பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருள்களை விண்கலத்தில் ஏற்றிச்சென்று சாதனை படைத்தது இந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.
  
இந்நிலையில், செவ்வாய் கிரகத்துக்கு ஆள்களை ஏற்றிச் செல்லும் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்பேஸ்எக்ஸ்.இது தொடர்பாக லண்டனில் உள்ள ராயல் ஏரோநாட்டிக்கல் சங்கத்தில்

செவ்வாய் கிரகத்தில் விரைவில் மக்கள் குடியேறலாம்: SpaceX



செவ்வாய் கிரகத்தில் குடியேற தேவையான நடவடிக்கைகளை மக்கள் எடுத்து வருவதாக ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) நிறுவனம் அறிவித்துள்ளது.பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருள்களை விண்கலத்தில் ஏற்றிச் சென்று ஸ்பேஸ்எக்ஸ் சாதனை படைத்தது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்பேஸ்எக்ஸ்.
இது தொடர்பாக லண்டனில் உள்ள றொயல் ஏரோநாட்டிக்கல் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறுகையில், முதல்கட்டமாக 10 பேரை மட்டும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.
பின்னர் படிப்படியாக அதிக அளவிலானோர் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான கட்டணம் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயித்துள்ளோம்.
முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிகளவில் இப்பயணத்துக்கு முன்வர வேண்டும் என்பதற்காக கட்டணத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
செவ்வாய் கிரகத்தில் செங்குத்தாக தரையிறங்கக்கூடிய விண்கலங்களை தயாரிக்க வேண்டியுள்ளது.
அத்துடன் விண்கலங்களை மீண்டும் மீண்டும் பயணத்துக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிகளுடன் "பால்கன்-9" விண்கலத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளி தாக்காத வகையில் குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பிராணவாயுவை செயற்கையாக உருவாக்கும் கருவிகளை நிறுவுதல், உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தேடிக்கண்டறிந்து குடிநீராகப் பயன்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டியதிருக்கும்.
செவ்வாய் மண்ணில் பயிர் சாகுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகளும்

ஜப்பானில் பனிப்புயல்: 40 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின



ஜப்பானில் கடும் பனி புயல் வீசியதால் மின்கம்பிகள் பலத்த சேதமடைந்ததுடன், பல பகுதிகள் இருளில் மூழ்கின.பசிபிக் கடற்கரையோரத்தில் உள்ள ஹொகைடா தொழில்நகரில் முரோரன் பகுதியில் மணிக்கு 144 கிலோமீற்றர் வேகத்தில் புயல்காற்று வீசியுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. சாலை முழுவதும் பனி கொட்டி கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்துள்ளதால், மொபைல் போன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புயலால் 90 ரயில்கள், 10 உள்ளூர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...