Nov 1, 2013

Concorde Crash - From Start To Finish - Air France Flight 4590

http://www.youtube.com/v/XypmFRmwEcA?version=3&autohide=1&showinfo=1&autohide=1&autoplay=1&feature=share&attribution_tag=VzM8EDAGoOlOE0RpXwfSCw

புகைப்படம்: செக்யூர் டிஜிட்டல் (Secure Digital) அல்லது எஸ்.டி. கார்ட் எனப்படும் மெமரி கார்டுகள், தற்போது அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன. மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம்.
செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. 
செக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. 
இவை குறித்து அறிய முற்படுகையில் பல சந்தேகங்கள் நமக்கு எழுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.
1. எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன.
2. எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters)
3. SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன. 
4. ஒரு வீடியோ பதிவில், எஸ்.டி. கார்டின் வேகத்திறன் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளது என்பது சரியா? ஆம், உண்மையே. ஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும்.
5. எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது. 
6. எஸ்.டி. கார்டில் உள்ள லாக் சிஸ்டத்தை இயக்கிவிட்டால், மீண்டும் அதில் எதுவும் எழுத முடியாதா? இந்த பூட்டு சிஸ்டம் பூட்டவும், மீண்டும் திறந்து இயக்கவும் என்ற வகையில் உள்ளது. மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும்.
7. எந்த வகை மிகச் சிறிய எஸ்.டி. கார்ட்?
எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.
8. பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க இயலுமா? தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த எஸ்.டி.கார்ட் ரீடர், அதன் கெபாசிட்டி பார்மட்டினைப் படித்து தகவல்களைத் தரும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
9. எஸ்.டி.கார்ட் ஒன்றை பார்மட் செய்திட, எஸ்.டி.கார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கும் வழி என்ன? இந்த அசோசியேஷன் SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமினை இதற்கென வழங்குகிறது. ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில் நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம்.
10. ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம்? இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.செக்யூர் டிஜிட்டல் (Secure Digital) அல்லது எஸ்.டி. கார்ட் எனப்படும் கார்டுகள், தற்போதுமெமரி  அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன. மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம்.
செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன.

இலவசமாக ஜி மெயில் வேண்டுமா?


இலவசமாக ஜி மெயில் வேண்டுமா?

உங்கள் பெயரில் இலவசாமாக ஒரு ஜி மெயில் வேண்டுமா ? அதை உருவாக்குவது எப்படி ?

முதலில் இண்டெர் நெட் அட்ரஸ் டைப் செய்யும் இடத்தில் www.gmail.com என்று டைப் செய்து எண்டர் பட்டனை அழுத்துங்கள் உங்களுக்கு இண்டெர்நெட்டில் கீழ் கானும் பகுதி ஓப்பன் ஆகும்

இதில் நம்பர் 1 என்று குறிப்பிட்டுள்ள Create an account என்ற இடத்தை உங்கள் மவுஸ் மூலம் கிளிக் செய்யுங்கள்.

உடனே உங்களுக்கு அடுத்ததாக கீழ் கானும் பகுதி திறந்துகொள்ளும்.

இதில் நம்பர் 2 என்று குறிப்பிட்ட இடத்தில் உங்கள் பெயரின் முதல் பகுதியை டைப் செய்யுங்கள். உதாரணத்திற்க்கு உங்கள் பெயர் Ahamed Mustafa என்று வைத்துகொண்டால் முதலில் நீங்கள் இந்த இடத்தில் Ahamed என்பதை டைப் செய்துகொள்ளுங்கள்

அடுத்து நம்பர் 3 என்று குறிப்பிட்ட இடத்தில் உங்கள் பெயரின் இரண்டாவது பகுதியை டைப் செய்துகொள்ளுங்கள் உதாரணத்திற்க்கு Mustafa

அடுத்து நம்பர் 4 என்று குறிப்பிட்ட இரட்த்தில் உங்களுக்கு தேவையான ஜீ மெயில் முகவரியை

விசைப்பலகைக் குறுக்குவழிகள்.


விசைப்பலகைக் குறுக்குவழிகள்.

windows logo key (சின்ன விசை ) : windows தொடக்க மெனு திறக்கும்
ALT+TAB : திறந்திருக்கும் நிரல்கள் அல்லது சாளரங்களுக்கு மாறலாம்
ALT+F4 : நடப்பு உருப்படி அல்லது நடப்பு நிரல் மூடப்படும்
CTRL+S : நடப்புக் கோப்பு அல்லது ஆவணம் சேமிக்கப்படும் (இந்தக் குறுக்குவழி பெரும்பாலான நிரல்களில் இயங்குகிறது)
CTRL+C : தேர்ந்தெடுத்த உருப்படி நகலெடுக்கப்படும்
CTRL+X : தேர்ந்தெடுத்த உருப்படி வெட்டப்படும்
CTRL+V : தேர்ந்தெடுத்த உருப்படி ஒட்டப்படும்
CTRL+Z : ஒரு செயல் செயல்தவிர்க்கப்படும்
CTRL+A : ஒரு ஆவணத்தில் அல்லது சாளரத்தில் இருப்பவை அனைத்தும் தேர்ந்தெடுக்கப்படும்
F1 ஒரு நிரலுக்கு அல்லது Windows -க்கு உதவி காட்டப்படும்
Windows சின்ன விசை +F1
Windows உதவி மற்றும் ஆதரவு காட்டப்படும்
ESC நடப்புப் பணி ரத்து செய்யப்படும்
பயன்பாட்டு விசை (Application key )ஒரு நிரலில் செய்யப்பட்ட தேர்வு தொடர்பான கட்டளைகளின் மெனு ஒன்று திறக்கப்படும் இது அந்தத் தேர்வை வலது கிளிக் செய்வதற்குச் சமம்.
வழிசெலுத்து விசைகளைப் பயன்படுத்துதல் - using Navigation keys.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...