Apr 10, 2013

உணவுகளை செரிக்கும் பீட்ரூட்!

சமையலில் ருசியையும்,உணவுகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் தருவதுடன், அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதற்கு பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் கிழங்குகளில் பீட்ரூட்டின் பங்கு இன்றியமையாதது. பீட்டா வல்காரிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட கீனோபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த கிழங்குச்செடிகள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன.

பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்:
கிழங்கு மற்றும் இலைகளில் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் சி மற்றும் ஏராளமான வைட்டமின்களும், கனிமங்களும் காணப்படுகின்றன.
இதிலுள்ள பீட்டைன் என்னும் ஆல்கலாய்டு இருதயத்தை பாதுகாப்பதுடன், போலிக்

மருத்துவரின் காதலி கடுக்காய்!

நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது புராணங்களிலும் இம்மரத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும் போது ஒரு துளி அமிர்தம் சிந்தியது. அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணங்கள் தெரிவிக்கின்றன.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
கடுக்காயில் டேனின், ஆன்த்ரோ குயினான்கள், செபுலிக் அமிலம், ரெசின் மற்றும் எண்ணெய் ஆகியவை காணப்படுகின்றன. டேனின் தோல் பதனிடும் தொழிலில் பயன்படுகிறது. துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு

ஆஸ்துமா தீர்க்கும் முள்ளங்கி

நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.
முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.
முள்ளங்கியின் நறுமணம்:
முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும். சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால்தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...