Apr 30, 2013

இன்று 127வது சர்வதேச தொழிலாளர் தினம்

இன்று 127வது சர்வதேச தொழிலாளர் தினம்!

!


May 1, 2013

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்காக குரல் எழுப்பும் 127வது சர்வதேச மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும்

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்



Posted: 30 Apr 2013
எந்தக் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்காத வகையில், கூகுள் டாட் காம் இணைய தளம், தேடலுக்கான சிறந்த தளமாக இன்று இடம் பிடித்துள்ளது. 

கூகுள் தளத்துடன், நாம் ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் என மேலும் சில கூகுள் தரும் வசதிகளை அறிந்து வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வசதிகளையும் சிலர் தெரிந்து தங்கள் வழக்கமான பணியில் இணைத்திருக்கலாம். 

கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கூட ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு ஆச்சரியமானதாகத்தான் உள்ளது. இருப்பினும், கூகுள் இன்னும் பல சேவைகளை நமக்கு வழங்கி வருவது பலருக்குத் தெரியவில்லை. இவை எல்லாமே, இணையத்தில் இருக்கின்றன. நம் வாழ்வை இன்னும் சிறப்பாகவும், சுவைபடத்தக்கதாகவும் மாற்றி வருகின்றன. இவற்றை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம். 


1. கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேட் (Google transliterate) இது ஒரு இலவச மொழி பெயர்க்கும்

டச்சு அரசராக அலெக்சாண்டர் பொறுப்பேற்பு

ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்து நாட்டின் மன்னராக, வில்லெம் அலெக்சாண்டர் நேற்று முடி சூட்டிக்கொண்டார். நெதர்லாந்து நாட்டின் அரசியாக பீட்ரிக்ஸ், 33 ஆண்டுகளாக அரியணையில் இருந்தார். தற்போது 75 வயதாகும், பீட்ரிக்ஸ், உடல் நிலையை காரணம் காட்டி, தனது மகனுக்கு முடி சூட்டுவதாக அறிவித்தார்.

இதையடுத்து, 46 வயதான வில்லெம் அலெக்சாண்டர், ஆம்ஸ்டர்டாம் நகரில், அரசராக நேற்று முடி சூட்டப்பட்டார். இதற்கான ஒப்பந்தத்தில், அரசி பீட்ரிக்ஸ் கையெழுத்திட்டார். நெதர்லாந்தில், 1890ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது தான், மன்னர் பொறுப்பேற்கிறார்.






















உயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்!!! - 10 herbal remedies high bp - Boldsky Tamil








அல்கேன் 7வது சுற்றில், விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி



அல்கேன் நினைவு செஸ் தொடரின் ஏழாவது சுற்றில், “உலக சாம்பியன்’ இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.

பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் அல்கேன் செஸ் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக், அர்மேனியாவின் லெவான் ஆரோனியன், இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ், பிரான்சின் லாரன்ட் பிரசினட் உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதன் ஏழாவது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், பிரான்சின் லாரன்ட் பிரசினட்டை சந்தித்தார். இந்த சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 49வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார்.

இஸ்ரேலின் போரிஸ், சீனாவின் லிரன் டிங்கை வீழ்த்தினார். ஏழு சுற்றுகள் முடிந்த நிலையில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் (4 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். இஸ்ரேலின் போரிஸ் (4.5), பிரான்சின் மேக்ஸ்மீ (4), இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் (4) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். மீதமுள்ள இரண்டு சுற்று போட்டிகளிலும் ஆனந்த் வெற்றி பெறும் பட்சத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...