Sep 30, 2012

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் தெரியுமா?



ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதன் மற்றொரு அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

உடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்!


சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ஏற்படும் போது அவர்களை மச்சக்காரன் என்பார்கள். பிறக்கும்போதே இருக்கும் மச்சம் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களையும், யோகங்களையும் கொடுக்கும். இவ்வாறு கொடுக்கும்

கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!


ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர்.

ரதசப்தமியன்று சூரியனை எவ்வாறு வழிபட வேண்டும்?





சூரியனுக்குரிய வடதிசைப்பயணம் துவங்கும் மாதம் தை. இம்மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமியன்று ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சூரியனின் தேர் மேற்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். சூரியன் வலம்வரும் பொன்மயமான தேரின் குதிரைகள் ஏழு என்பதால், சூரியனிடமிருந்து ஏழு பிராணங்களும், ஏழு ஜ்வாலைகளும், ஏழு சமித்துகளும், ஏழு ஹோமங்களும் தோன்றி இதயக்குகையில் ஒடுங்குகின்றன என்று வேதங்கள் சொல்கின்றன. பொதுவாக, தேருக்கு எட்டு குதிரைகள் பூட்டுவார்கள். ஆனால் சூரியனின் தேருக்கு ஏழு குதிரை மட்டுமே உள்ளது. ஒளியின் வண்ணங்கள் ஏழு. அதுவே ஏழு குதிரைகள் என்று கூறப்படுகிறது. அவை: காயத்ரி, பிரகுஹதி, உஷ்ணிக்,

அபிஷேகம்


7.1 அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.
7.2 அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம்
7.3 அபிஷேக திரவியங்கள் தரும் பலன் : சுத்த நீர் - விருப்பங்கள் நிறைவேறும்



பின்வரும் கோவில்களில் நெல்லி தல விருட்சமாய் வணங்கப்பட்டு வருகிறது. கடலூர் திருநெல்வாயிலில் உள்ள உச்சிவனேஸ்வரர் சிவாலயத்திலும்; தஞ்சாவூர்- பழையாறை சோமநாதர் சிவாலயத்திலும்; பெரம்பலூர்- ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் சிவாலயத் திலும்; திருவாரூரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருநெல்லிக்கா என்னும் ஊரில் உள்ள நெல்லிவனநாதர் ஆலயத்திலும் தெய்வங்களுக்கு நிகராய் நெல்லி மரத்தினையும் பக்தர்கள் வணங்கி வலம் வருகின்றனர்.

நாமும் அகப்பிணி போக்கும்- சதாசிவன் உறையும் நெல்லியைச் சரணடைந்து,



கே. சுவர்ணா



                     லகின் பல்வேறு சமயங்களிலும் மாந்ரீக அடிப்படையிலான வழிபாட்டு முறை வழக்கில் இருந்துள்ளது; இப்போதும் நடைமுறையில் உள்ளது.

மந்திரம் என்பதற்கு மன்னும் திறம்- நிலை பெற்றிருக்கும் திறன் என்று பொருள் கொள்ளலாம். யந்திரம் என்பது மந்திர சக்தி நிலைத்திருந்து இயங்கச் செய்யும் கருவி. புலனடக்கத்தோடு இறைவனை மனதில் இருத்தி உள்ளும் புறமும் நிலை நிறுத்திப் பூஜிப்பது யந்திரமுறை. யந்திரங்கள் இறைவனின் மறுவடிவாகவே போற்றப் படுகின்றன.

இத்தகைய வழிபாடுகளில் மந்திர உச்சாடனங்களுடன் மாந்ரீகச் சடங்குகளும் இடம் பெறுகின்றன. ஆக்கல் சக்திகள் தூண்டிவிடப்படுவதன் மூலமாக செயல்கள் நிகழ்ந்து தங்கள் விருப்பங்கள் நிறைவேறு வதால், இவ்வழிபாடு பலராலும் பின்பற்றப் பட்டு வருகிறது. இதில் யந்திரங்கள் கிரியா ஊக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

யந்திரங்கள் எனப்படும் சக்கரங்கள் காகிதத்தில் வரையப்பட்டு கண்ணாடிச் சட்டத்திற்குள் வைக்கப்பட்டோ, மரம் அல்லது உலோகத்தில் கீறல்களாகச் செதுக்கியோ பயன்படுத்தப்படுகிறது. இச்சக்கரங்கள் தியானத்தின்போது மனதை ஒருநிலைப்படுத்தப் பயன்படுகிறது.

முருக வழிபாட்டில் அறு கோணச் சக்கரம் பயன்படுத் தப்படுகிறது. இச்சக்கரத் தில் சம அளவுள்ள இரண்டு சம பக்க முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நேர்எதிர் திசையில் படியு மாறு அமைக்கப்பட்டிருக் கும். இரண்டு முக்கோணங் களுக்கு நடுவில் அமைந் துள்ள புள்ளி உயிர்சக்தியாக- கந்தன் எனக் கொள்ளப் படு கிறது. இதைச் சுற்றியுள்ள உலகின் பல்வேறு சமயங்களிலும் மாந்ரீக அடிப்படையிலான வழிபாட்டு முறை வழக்கில் இருந்துள்ளது; இப்போதும் நடைமுறையில் உள்ளது.

மந்திரம் என்பதற்கு மன்னும் திறம்- நிலை பெற்றிருக்கும் திறன் என்று பொருள் கொள்ளலாம். யந்திரம் என்பது மந்திர சக்தி நிலைத்திருந்து இயங்கச் செய்யும் கருவி. புலனடக்கத்தோடு இறைவனை மனதில் இருத்தி உள்ளும் புறமும் நிலை நிறுத்திப் பூஜிப்பது யந்திரமுறை. யந்திரங்கள் இறைவனின் மறுவடிவாகவே போற்றப் படுகின்றன.

திருக்குறள்


தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி

உலகின் அதிகம் பேசப்படும் மொழிகள்


01.மாண்டரின் (சீனம்)- சீனா - 885 மில்லியன்
02.ஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்
03.ஆங்கிலம் - ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்
04.வங்காள மொழி - இந்தியா, வங்காளதேசம் - 189+ மில்லியன்
05.ஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்
06.போர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்
07.ரஷ்ய மொழி - ரஷ்யா - 170+ மில்லியன்
08.ஜப்பானிய மொழி - ஜப்பான் - 128+ மில்லியன்
09.ஜெர்மன் - ஜெர்மனி - 125+ மில்லியன்
10.பிரெஞ்சு - பிரான்ஸ் - 120+ மில்லியன்
11.வூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்
12.ஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்
13.கொரிய மொழி - தென் கொரியா, வட கொரியா - 75+ மில்லியன்
14.வியட்நாமிய மொழி - வியட்நாம் - 67+ மில்லியன்
15.தெலுங்கு - இந்தியா - 66+ மில்லியன்
16.யூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்
17.மராட்டி - இந்தியா - 64+ மில்லியன்
18.தமிழ் - இந்தியா, இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா - 63+ மில்லியன்
19.துருக்கி மொழி - துருக்கி - 59+ மில்லியன்
20.உருது - பாகிஸ்தான், இந்தியா - 58+ மில்லியன்

உலகின் முக்கிய தினங்கள்


ஜனவரி
26 - உலக சுங்க தினம்
30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி

14 - உலக காதலர் தினம்

மார்ச்

08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

உங்களுக்குத் தெரியுமா?

 உங்களுக்குத் தெரியுமா?
அதிகம் பின்பற்றப்படும் மதங்கள்

    கிறிஸ்தவம் - 210 கோடி (கத்தோலிக்கம் - 100 கோடி; புரடஸ்தாந்தம் - 77.5 கோடி, கிழக்கு மரபுவழி திருச்சபை - 24.0 கோடி)
    இஸ்லாம் - 110 கோடி
    இந்து சமயம் - 105 கோடி
    கன்பூசியம் - 40.0 கோடி
    பெளத்தம் - 35.0 கோடி
    டாவோயிசம் - 5.0 கோடி
    ஷிந்தோ - 3.0 கோடி
    யூதம் - 1.2 கோடி
    சீக்கியம் - 90 இலட்சம்
    சமணம் - 60 இலட்சம்
    பாபி மற்றும் பஹாய் நம்பிக்கைகள்
    சோறாஸ்ரியனிசம்

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்


கண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெண்கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தே வருகின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது.


நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது ‘எமக்குப் பிடித்த ஒரு பொருளை

மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!


முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும்

நினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் தான்! ஆய்வில் தகவல்


மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது.
கனடாவின் மொன்றியல் பல்கலைக்கழக மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வினை

நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க


என்னதான் அழகாக மேக் அப் செய்து அலுவலகம் கிளம்பினாலும் பேருந்து நெரிசலில் சிக்கி முகம் டல்லாகிவிடுகிறதே என்ற கவலை சிலருக்கு உண்டு. நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க அழகு நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் இதோ உங்களுக்காக.

ஐஸ்கட்டி ஒத்தடம்
அலுவலகம் கிளம்புவதற்கு முன் சில ஐஸ் கட்டிகளை காட்டன் துணியில் எடுத்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில் சிறிது நேரம் ஒற்றி எடுங்கள். இதனால் சருமம் புத்துணர்வு பெறும். பின் உங்கள் விருப்பப்படி பவுடர் அல்லது மேக்-அப் போட்டுக் கொண்டால் அடுத்த ஐந்து மணி நேரம் வரை முகம் அப்படியே இருக்கும்.

"குளிர்ந்த நீரில் "யூடிகோலன்" (Eaudecologne) என்ற லோஷனை கலந்து

உலக சமயங்களில் இயற்கை மதம் எது?


உலக சமயங்களில் இயற்கை மார்க்கம்

உலகில் தோன்றிய சமயங்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று தொன்மையானவை. (Ancient Religions) இவை யூத மதம், இந்து மதம்,


புத்த மதம், கிறித்தவ மதம், இஸ்லாமிய மதம் என உயரிய சமயங்களாக வகைப்படுத்துகிறார்கள். மற்றொன்று சிறு சமயங்கள். அவை இந்தியாவில் தோன்றிய ஜைனம், சீக்கியம், சீனாவின் டாவோயிசம், ஜப்பானின் ஷிண்டோயிஸம் போன்றவை.


இவையெல்லாம் மனிதனை அன்பு நெறியிலும் அறவழியிலும் பண்படுத்தி அமைதியான உயர்ந்த வாழ்வு வாழத் தோன்றியவை! ஆனால் இந்த மதங்கள் யாவும் அப்படிப்பட்ட உயர்ந்த நிலையை அடைந்திருக்கின்றதா?

நானும் ஒரு ஹிந்துவே

நானும் ஒரு ஹிந்துவே

தற்காலத்தில் குறிப்பாக ஹிந்துமதவாத அரசியல் வாதிகளும், ஹிந்துத்துவ வளைதளங்களும், ஹிந்துக்கள் என்றால் அனைவரும் ஹிந்துக்கள்தான்,என்ற ஒரு வகைதொகையற்ற கணக்கை காட்டி,குறிப்பாக இஸ்லாம்,கிருத்தவம்,சீக்கியம் அல்லாத இந்தியாவில் உள்ள மக்கள் நார்திகர்கள் உள்பட அனைவரும் ஹிந்துக்கள் என்கிறார்கள். எனவே ஹிந்து என்றால் என்ன, அதில் சாரும் மக்கள் யாவர். என அதன் உண்மை நிலை அறியும் சிறு முயற்சியே இந்த பதிவு... யார் மனதையும் புண்படுத்தும் பதிவு அல்ல,மதநல்லிணக்கப் பதிவு...

தோற்றம்:

ஹிந்து எனும் வார்த்தை பழமை வாய்ந்த பாரசீக மொழியில் முதன் முதலில்

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரதை குறைத்து சொல்கிறது சீனா

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரதை குறைத்து சொல்கிறது சீனா

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் எவ்வளவு என்பதில் சீனா - நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


சீனா - நேபாள எல்லையில் உள்ளது எவரெஸ்ட் சிகரம். இதுதான் உலகிலேயே மிக உயரமானது. இந்தியாவை சேர்ந்த பி.எல்.குலாடி என்ற சர்வேயர் தலைமையிலான குழுவினர், கடந்த 1954ம் ஆண்டு எவரெஸ்டின் உயரத்தை கணக்கிட்டனர்.

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்


வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்

தொடர்ச்சியான காலப்பகுதிகளில் நோன்புபிடிப்பதால் மூளையைச்சிதைக்கின்றநோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறமுடியும் என அமெரிக்க விஞ்ஞானிகளின்ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
ஒரு கிழமையில் ஒன்று அல்லது இரண்டு நாட்களில்குறித்த காலப்பகுதியில் உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் அல்ஸ்ஹைமர்ஸ், பார்கின்ஸோன்ஸ்

கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!(Beet Leaves)


அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.

ஈ" என்னும் நோய் பரப்பி...


"

இன்று நகரத்திலிருந்து கிராமம் வரை எங்கும் பறந்து, திரிந்து வாழும் ஒரு வகை பூச்சி இனம்தான் ஈக்கள். பொதுவாக ஈக்கள் என்றாலே எல்லோருக்கும் அருவெறுப்பு தான் தோன்றும். ஏனெனில், அவை மலம் மற்றும் குப்பைகளிலும் உட்கார்ந்து ... பிறகு, நம் உடலிலும், உண்ணும் உணவுகளின் மீதும் உட்காருவது தான். ஈக்களை முழுமையாக ஒழிக்க, சிறந்த வழி - சுகாதாரமே. அரசும் பல வழிகளில் முயற்சி செய்தும் ஈக்களின் எண்ணிக்கையோ குறைந்த பாடில்லை.

ஈக்களால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் பரவுவதற்கு ஈக்களே முக்கிய காரணியாக இருக்கின்றன.

பொதுவாகவே ஈக்கள் அழுகிப்போன காய்கறிகள் மீதும் மீன் கடைகள்,

உலக சமயங்கள் அட்டவணை


தற்கால உலக சமயங்கள் அட்டவணை
சமயம் கிறித்தவம் இசுலாம் இந்து சமயம் பெளத்தம் சமணம்
பின்பற்றுவோர் தொகை 2.1 பில்லியன் (33.06%) 1.5 பில்லியன் (20.28%) 900 மில்லியன் (13.33%) 376 மில்லியன் (5.8%) 4.2 மில்லியன் (0.07%)
சமயம் தோன்றிய திகதி 1 ம் நூற்றாண்டு 7 ம் நூற்றாண்டு  ? கி.மு 2000 ஆண்டுகள்  ? கி.மு 500 ஆண்டுகள்  ? கி.மு 500 ஆண்டுகள்
சமயம் தோன்றிய இடம் மேற்கு ஆசியா மேற்கு ஆசியா இந்தியா இந்தியா இந்தியா
சமயத்தைத் தோற்றுவித்தவர் இயேசு கிறிஸ்து முகம்மது நபி குறிப்பிடத்தக்க நபர் என்று யாருமில்லை கௌதம புத்தர் மகாவீரர்
கடவுள் இறையின் மகன் இயேசு அல்லா சிவன்  ??  ??
புனித நூல்கள் பைபிள் திருக்குர்ஆன் வேதம், உபநிடதம்  ??  ??
முதன்மை மொழி லத்தீன், ஆங்கிலம் அரபு மொழி சமசுகிருதம், பல  ?? சமசுகிருதம்
சடங்குகள் பைபிள் வாசித்தல், பிராத்தனை தொழுகை பூசை, தேவாரம்  ??  ??
அணிசேரா நாடுகள் சேர்ந்த அணி

உலகில் முதல் பெண் பிரதமருக்கு

உலகத் தலைவர்கள் அளித்த கௌரவம்

அணிசேரா நாடுகளின் தந்தையர்கள் இவர்கள்

தமிழகத்திற்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: உச்ச நீதிமன்றத்திற்கு கர்நாடகம்பணிந்தது


[ ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2012,
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று நேற்று இரவோடு இரவாக காவிரியிலிருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
கடந்த 19ம் திகதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காவிரி நதிநீர் அணையக் கூட்டம் புதுடெல்லியில் நடைப் பெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் திறந்து விட உத்தரவிட்டும் கர்நாடக அரசு திறந்து விடவில்லை.
பின்னர், காவிரி நதி நீர் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை நடந்த போது பிரதமரின் ஆணைப்படி கர்நாடக அரசு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்திய கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷட்டர், கூட்டத்தில் பிரதமர் தமது முடிவை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று பேக்ஸ் அனுப்பப் போவதாகவும் உச்சநீதி மன்றத்துக்கு ஆணையை தற்போது நிறுத்தி வைக்க கேட்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் கர்நாடக ஆளுநர், உச்சநீதி மன்றத்தின் உத்தரவை மீறக் கூடாது என்று அறிவுறுத்தியதால் கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷட்டரின் ஆணைப்படி நேற்று இரவோடு இரவாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் திறந்து விட்டதாகத் கூறப்படுகிறது.

இந்தியாவில் மிக உயரமான ஏசுநாதர் சிலை கேரளாவில் திறப்பு


[ ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2012,
கேரளாவில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் இந்தியாவிலேயே மிக உயரமான ஏசுநாதர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள இந்த ஏசுநாதர் சிலை 33.5 அடி உயரத்தில் வெள்ளை நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல கலை இயக்குனரும், சிற்பியுமான பிரேமசந்திரன் என்பவர் இந்த சிலையை உருவாக்கி உள்ளார்.
பைபர், மெழுகு உட்பட பல்வேறு பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையை 35 நாட்களில் 30 தொழிலாளர்கள் துணையுடன் இந்த சிற்பி வடிவமைத்துள்ளார்.
இந்த சிலை 22.5 அடி உயர பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை ஆர்ச் பிஷப் மோரான்

600 அடி ஆள்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் மீட்பு




[ ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2012,
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அருகே சரியாக மூடப்படாத 600 அடி ஆள்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, அடுத்து தேன்கனிகோட்டை அருகே ஜவலகிரி கிராமத்தில் ஒரு விவசாயி 600 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார்.
தனது பணி முடிந்தும் அதனை சரிவர மூடாமல் சாணல் சாக்கினால் அரைகுறையாக மூடி வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த குணா என்ற 3வயது சிறுவன் ஆள்துளை கிணற்றிற்குள் தவறி விழுந்து விட்டான். இந்த விடயம் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவனை மீட்க தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
2ம் இணைப்பு:
ஜே.பி.சி இயந்திரம் மூலம் தோண்டும் பணிநடந்தது. பின்னர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் குணா உயிருடன் மீட்கப்பட்டான். தற்போது ஒசூர் மருத்துவமனையில் அவனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ரூ.20,000 கோடியில் உருவாகும் முதல் தனியார் விமான நிலையம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...