Jul 30, 2013

27 பிராந்தியங்கள் கடும் புயல் எச்சரிக்கையில்!!

இன்று வியாழக்கிழமை மாலை 16h00 மணியிலிருந்து சனிக்கிழமை காலை 7h00 மணி வரை பின்வரும் 27 பிராந்தியங்களில் கடும் புயல் மழை பெய்யலாம் என செஞ்சிவப்பு எச்சரிக்கை (Alerte Orange) விடப்பட்டுள்ளது. கடுமையான காற்று அல்லது மிகவும் கடுமையான மழையின் தாக்குதல் மோசமான விளைவுகளை உண்டுபண்ணலாம் என Météo France  எச்சரித்துள்ளது. 
 
 
 
 
முக்கியமாக இப்பகுதியிலுள்ள மக்களும் பொழுது போக்கு மற்றும் சிறுவர் விடுமுறை இல்லங்களும் (activités de loisirs) மிக அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்தச் சமயத்தில் தொலைபேசிகளையும் செல்பேசிகளையும் இலத்திரனியல் மற்றும் மின் உபகரணங்களையும் உபயோகிப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.
 
 
Ile-de-France இனை இப் புயல் மழை வியாழன் நள்ளிரவின் இரண்டாம் சாமத்திலும் வெள்ளிக்கிழமை அதிகாலையும் தாக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வதிவிட உரிமை அட்டை - புதிய நடைமுறை


Seine-Saint-Denis (93) பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு பொபினி  Préfecture புதிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன் மூலம் அதிகாலையிலேயே வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டுள்ளது.
 
* உங்களுக்குரிய 1 வருட வதிவிட உரிமை அட்டையைப் புதுப்பிக்க (Titre de Sejour 1 an)
* உங்களுக்குரிய 10 வருட வதிவிட உரிமை அட்டையைப் புதுப்பிக்க (Titre de Sejour 10 ans)
* 5 வருடங்கள் 1 வருட வதிவிட உரிமை பெற்று அதனை 10 வருட வதிவிட உரிமை அட்டையாக மாற்ற  (Passage en 10 ans)
* உங்கள் வதிவிடத் தகுதி நிலையை மாற்ற (Changement de statut)
* வேறு பிராந்யத்திலிருந்து 93ற்கு விலாசம் மாற்ற (Changement d'adresse - aute département)
* உங்கள் பெயர் மாற்ற (Modification du nom)
* தொலைந்த வதிவிட உரிமை அட்டைக்கு மாற்றீடு அட்டை பெற (Duplicata)
 
நீங்கள் Préfecture நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில் www.seine-saint-denis.gouv.fr எனும் இணையத்தள முகவரியில் உங்களுக்குரிய பகுதியில் பதிவு செய்து  அதற்கான விண்ணப்பத்தை இணையத்தளத்திலேயே நிரப்பி அனுப்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சந்திப்பிற்காகன நேரமும் (RDV) கொண்டு வரவேண்டிய ஆவணங்களின் விபரமும் அனுப்பி வைக்கப்படும்.
 
http://www.seine-saint-denis.gouv.fr/Demarches-administratives/Etrangers/Sejour/Ressortissants-d-un-pays-hors-Union-europeenne/Renouvellement-d-un-titre-de-sejour எனும் பகுதியில் உங்கள் வதிவிட உரிமை அட்டையைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
 
ஏனைய விடயங்களைப் பின்வரும் இணையத்தள முகவரியில் செய்து கொள்ள முடியும்
 
 
உங்கள் வதிவிட அட்டை முடிவதற்கு மூன்று மாதங்களிற்கு முதல் அனுப்பபடும் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும்.  
இதன் மூலம் உங்கள் நேரம் மிச்சப்படுத்தப்படுவதோடு உங்களுக்கான சந்திப்பு நேரமும்; வழங்கப்படுவதால் உங்கள் காத்திருப்பு நேரமும் மிச்சப்படுத்தப்டுகின்றது உங்கள் புதிய வதிவிட உரிமை அட்டை தயாரானவுடன் உங்களுக்கு அது குறுஞ் செய்தி மூலமும் அனுப்பி வைக்கப்படும் என  Préfecture de Bobigny தெரிவித்துள்ளது.
 
 
 

பிரான்ஸைச் சுற்றிப்பார்ப்போம் வாருங்கள் - பகுதி1 (காணொளி)

பிரான்ஸ் தேசம் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களாலும் அரண்மணைகளாலும் தன் வீரத்தினையும் சிறப்பு மிக்க வாழ்வையும் இன்றும் சான்றாகக் கொண்டு மிளிர்ந்து நிற்கும் ஒரு தேசமாகும். அழகு மிக்க இந்த நாடு தன் பண்டைய மற்றும் நவீனக் கட்டக் கலையாலும் இயற்கை அழகுகளாலும் உலக மக்கள் மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் காதல் தேசமாகப் பிரான்சும் அதன் கலாச்சாரமும் அனைவரையும் தன் பால் ஈர்த்துள்ளது. பரிஸ்ம் அதனை அண்மித்த புறநகர்ப் பிரதேசங்களும் பெருமளவான சுற்றுலாப் பயணிகளைத் தம் பால் வசீகரிக்கும் அழகும் வரலாறும் உடையவை.
 
 
 
அவற்றின்முக்கியமான பகுதிகள் சிலவற்றை உங்கள்கோடை விடுமுறைக்குக் கண்டுகளிக்க இலகுவாக நாம் இங்கே தருகின்றோம்.
 
இந்தச் சுற்றுலாவின் முதற்கட்டமாக விபரமாக நாம் பின்வபவற்றைச் சில நாட்களிற்குப் பார்ப்போம்.
 
1. ஈபிள் கோபுரம்.
2. லூவ்ர் அருங்காட்சியகமும் அதன் தோட்டங்களும் பிரமிட்டும்
3. Notre dame de Paris Njthyak; (Our Lady of Paris)
4. ஒப்பேராவும் அதன் சுற்றுப்புறமும்
5. இருதய நாதர் தேவாலயம் (White Church - sacre coeur de montmartre)
6. வேர்செய்ல் அரண்மணையும் தோட்டமும்
7. பொம்பிதூ சதுக்கம்
8. Tuilerie தோட்டம்
09. Arc De Triomphe (etoile)
10. pantheon
11. டிஸ்னி லாண்ட்
 

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...