Jan 20, 2014

கடலில் உள்ள ஆமைகள் மணிக்கு 40 மைல் வேகத்தில் நீந்தக் கூடியவை.
மே.ஆபிரிக்காவிலுள்ள உலகின் மிகப்பெரிய தவளை இனத்தில் ஒன்றின் நீளம் ஒரு அடிவரை இருக்கும். ஐஸ்லாந்தையும், அன்டார்க்டிக்காவையும் தவிர, உலகெங்கும் தவளைகள் உள்ளன.
ஒரே தினத்தில், ஆண் சிங்கம் 100 தடவைக்கு மேல், பெண் சிஙகத்துடன் உடல் உறவு கொள்ளக்கூடியது.
முதலைகள் 100 வருடங்கள் வரை வாழக்கூடியவை. இவற்றின் ஒவ்வொரு தாடையும் இரையைக் கவ்வி நொருக்குவதற்கு உதவியாக 24 கூரான பற்களைக் கொண்டுள்ளன.
முயல்கள் பிறந்து 5 மாதங்களில், கருத்தரித்து குட்டி போடும் நிலையை அடைந்து விடுகின்றன.
செம்மறியாட்டுக்கு வருடத்திற்கு 2 பற்களென, 10 வயதுவரை பற்கள் தொடர்ந்து வளர்கின்றன.
எறும்பு தின்னிகள் எனப்படும் மிருகங்களுக்கு பற்களே கிடையாது. ஒரு எறும்புக்கு தன்னைவிட 20 மடங்கு அதிகமான எடையைச் சுமக்க முடியும்.
நன்கு வளர்ந்த ஒரு பன்றிக்கு 44 பற்கள் இருக்கின்றன.
ஒரு மனித இதயத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில், பூனையின் இதயம் துடிக்கின்றது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...