
போகர் அருளிய “போகர் 12000” என்கிற நூலில் அஞ்சனக் கல் குறித்த குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. வெள்ளையும், நீலமும் கலந்த நிறத்தை உடைய இந்த கல்லுக்கு “நீலாஞ்சனம்”, “கருமாக்கல்” என்ற வேறு பெயர்களும் உண்டு.
இந்தியாவில் பஞ்சாப், ஆந்திரா மற்றும் தென் தமிழகப் பகுதியில் இந்த கல் கிடைக்கிறது. ஒழுங்கற்ற உருவமுடைய இவை இலகுவாக உடையும் தன்மையுடையது. இவை தண்ணீரில் கரையாது.
இவற்றில் ஆறு வகை கற்கள் இருப்பதாக போகர் கூறுகிறார். அவையாவன...
சவ்வீராஞ்சனம்
ரசாஞ்சனம்
ரக்தாஞ்சனம்
சுரோதாஞ்சனம்
நீலாஞ்சனம்
புஷ்பாஞ்சனம்
இவற்றில் தற்போது நீலாஞ்சனம் மட்டுமே நமக்கு இலகுவாக கிடைக்கின்றது. மற்றவை மிக அரிதாகவே கிடைக்கும். இந்த அஞ்சனங்களை மருத்துவத்தில் வெளிப்பூச்சுக்காகப் பயன்படுத்தியதற்க்கான பல ஆதாரங்கள் நூலில் காணக் கிடைக்கின்றன.
சித்த மருத்துவத்தில் குழிப்புண், சன்னி, மேகம், நாவறட்சி, கண்வலி, இரத்தப் பித்தம் போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகப் இந்த அஞ்சனக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர மாந்திரீக, வசிய முறைகளில் மை தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் உள்ளன.
சூரிய வெப்பம் கண்ணை பாதிக்காமல் இருக்கவும், கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றாமல் இருக்கவும், கண்களுக்கு மேலதிக அழகாய் உண்டு பண்ணவும் பழந்தமிழ் பெண்கள் இந்த அஞ்சனக் கற்களை அரைத்து புருவத்திலும், இமைகளிலும் மையாக தீட்டிக்கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த அஞ்சன மை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற்து
Time in Colombo 


























No comments:
Post a Comment