Nov 28, 2013

வாஷிங்டன்: பூமியின் பால்வெளி விண்மண்டலத்தில் உயிரினங்கள் வாழத்தக்க ஆயிரம் கோடி கிரகங்கள் உள்ளதாக நாசாவின் தொலைநோக்கியான கெப்ளர் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்டவெளியில் உள்ள தகவல்கள் பற்றி ஆராய்வதற்காக அனுப்பப் பட்ட கெப்ளர் தொலைநோக்கி தந்த தகவல்களின் அடிப்படையில் இத்தகவல் தெரிய வந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

மணிக்கு 2 லட்சம் கி.மீ வேகத்தில் சூரியனை நோக்கி பாய்ந்து செல்லும் 'ஐசான்

டெல்லி: சூரியனை நோக்கி நகர்ந்து வந்த ஐசான் வால் நட்சத்திரம் தற்போது சூரியனுக்கு மிக அருகே போய் விட்டது. மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் அது படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.
இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது மொத்தமாக பொசுங்கிப் பஸ்பமாகி விடும்.. அல்லது தப்பிப் பிழைத்து பூமியில் உள்ள மக்களுக்கு மேலும் சில காலம் வண்ணக் கோலத்தைக் காட்டி நிற்கும்.
நவம்பர் 28ம் தேதி வியாழக்கிழையன்று சூரியனை கடக்கவுள்ளதாம் ஐசான். தற்போது அது சூரியனின் பரப்புக்கு மேலே கிட்டத்தட்ட பத்து லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிற்கிறதாம்.

இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு சூரியனை நோக்கி பாயும் ஐசான்.. காணத் தவறாதீர்கள்



வாஷிங்டன்: உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் விரித்த கண்களுடன் வானை நோக்கி காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகில் போகிறது.
உலகத்தில் உள்ள அத்தனை தொலைநோக்கிகளும், விண்ணியல் ஆர்வலர்களின் கண்களும் ஐசான் வால்நட்சத்திரத்தை நோக்கி திரும்பியுள்ளன. ஐசான் என்னாகப் போகிறது, சூரியனுக்கு அருகே அது போகும்போது என்ன நடக்கும் என்ற பேரார்வம் அத்தனை பேர் மனதிலும் அப்பிக் கிடக்கிறது.
படு வேகமாக சூரியனை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஐசான் இன்று நள்ளிரவு சூரியனை மிக மிக அருகே நெருங்கப் போகிறது. அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை, பொசுங்கிப் போய் விடும் என்று பொதுவான கருத்து இருந்தாலும் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் சிலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...