Jan 5, 2013

புது வருடம் - 1193 வாகனங்கள் தீக்கிரை

புது வருட Saint-Sylvestre இரவில் 1193 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உள்துறை அமைச்சர் மனுவல் லால்ஸ் கூறியுள்ளார். இதில் சிற்றுந்துகளும் உந்துருளிகளும் அடங்கும். இதில் 344 வாகனங்கள் அருகிலிருந்த வாகனங்கள் கொழுத்தப்பட்டதால் தீ பரவி எரிந்தவை எனக் கூறியுள்ளார். கடந்த வருடம் தீக்கிரையான வாகனங்களின் எண்ணிக்கையை சார்க்கோசி அரசு வெளியிட மறுத்திருந்தது. ஆனாலும் தாம் முழுமையாக வெளிப்படையாக இருக்க விரும்புவதாகவும் அதிகாரபூர்வ எண்ணிக்ககையை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2009 ம் ஆண்டு 31 டிசம்பர்

விமான விபத்து! ஐவர் பலி!!


Grenoble விமான நிலையத்தருகில் நடந்த விமான விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர் பலியகியுள்ளனர். இவ் விபத்து இன்று சனிக்கிழமை மதியம் நடைபெற்றுள்ளது. மொரோக்கோவில் பதிவு செய்யப்பட்ட இவ்விமானம் ஸ்பெயினில் ஒரு தரிப்பைச் செய்து விட்டு மொரோக்கோ திரும்பத் திட்மிட்டிருந்தது. இரண்டு இயந்திரங்கள்  உள்ள இச் சிறு விமானம் Grenoble விமானநிலையத்தில் இருந்து புறப்பட சிறிது நேரத்தில் Saint-Etienne-de-Saint-Geoirs ற்கும்  Saint-Simeon-de-Bressieux ற்கும் இடையில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

ஈபிள் கோபுரத்தின் சிறப்பம்சங்கள்

ஈபிள் கோபுரத்தின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிய வேண்டுமா?

பிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ஆம் தேதி திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது.

1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்..

1. கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்) நிலப்பரப்பு 2.5 ஏக்கர் (412 சதுர அடி, 100 சதுர மீட்டர்).

2. கோபுரம் முழுவதும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...