Feb 20, 2014

பாவங்களை விளக்கும் தர்ப்பன பூமி

சென்னையில் இருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது கூத்தனூர். அது ஸரஸ்வதி ஆலயத்திற்கு புகழ் பெற்ற தலம். மாணவ மாணவிகள் பரிட்சை நேரங்களில் அங்கு சென்று பேனா, பென்சில் போன்ற வற்றை வைத்து வணங்கி தாம் நன்றாக படிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வருவது வழக்கம். ஆனால் அந்த ஆலயத்துடன் சம்மந்தப்பட்டுள்ள திலகை பதி என
அழைக்கப்படும் தர்பண பூமி அதாவது ஸ்ரீ முக்தீஸ்வரர் - சொர்ண வல்லி ஆலயம் பற்றிய பின்னணிக் கதை பலருக்கும் தெரிந்திருக்காது.
இராமபிரான் இராவணனை வென்று தன் நாட்டிற்குத் திரும்பியதும்," தர்பண பூமிக்குச் சென்று அங்கு பித்ரு காரியங்களை செய்து முடிந்ததும் கூத்தனூர் ஸரஸ்வதி ஆலயத்தில் அந்தர் மியாமியாக இருந்த பிரும்மாவையும் சென்று வணங்கிய பின்னர் தான் அனைத்து தோஷங்களும் இராமபிரானை விட்டு விலகின". ஆகவே முக்தீஸ்வரர்- சொர்ண வல்லி ஆலயம் செல்பவர்கள் கூத்தனூர் ஆலயத்திற்கும் சென்று வணங்கினால் பெரும் புண்ணியம் கிட்டும் என கருதப்பட்டது. அதன் கதையை இனிபடியுங்கள்:

ஸ்ரீ முக்தீஸ்வரர்- சொர்ணவல்லி ஆலய அமைப்பு:

கூத்தனூருக்கு அருகில் உள்ளது ஸ்ரீ முக்தீஸ்வரர்- சொர்ணவல்லி ஆலயம். அதன் பக்கத்தில் அரி-சிவா என்ற ஆறு உள்ளது. அந்த ஆலயத்தின் தெற்கு முக நுழை வாயிலில் நர முக வினாயகர் என்ற பெயரில் அதாவது மனித முகத்துடன் கூடிய வினாயகர் எழுந்தருளி உள்ளார். உலகில் எந்த ஆலயத்திலும் மனித உருவுடன் வினாயகர் காட்சி அளிக்கும் நிலையில் சிலை கிடையாது என்பது அ தன் விஷேசம். ஆலயத்தில் கிழக்கு நோக்கி நாகம் பிடித்திருந்த குடையின் கீழ் அமர்ந்தபடி முக்தீஸ்வரர் காட்சி தருகின்றார். ஆலயத்தின் பின்புறச் சன்னதியில் பித்ரு லிங்கங்களும், இராமபிரான் மற்றும் நந்தி சோதன் என்ற மன்னனின் சிலைகளும் உள்ளன. மற்றொருபுறத்தில் மந்தார மரமும்;, அதன் அருகில்; சிவலிங்கம், தஷ்ணா மூர்த்தி போன்ற சிலைகளும் உள்ளன.

ஆலய வினாயகர் - பார்வதி தேவியின் கதை:

வினாயகர் பற்றிய கதை என்ன எனில் ஒரு முறை பர்வதி அந்த இ டத்திற்கு வந்து குளித்துக் கொண்டு இருந்த பொழுது ஆண்கள் எவரும் வந்து விட்டால் என்ன செய்வது என எண்ணி நுழைவாயிலில் தனக்குக் காவல் இருக்க வினாயகர் மனிதத் தலையுடன் காட்சி தருகின்றார் மஞ்சளினால் செய்யப்பட்ட ஒரு உருண்டையை பிடித்து; வைத்து விட்டு குளிக்கச் சென்ற பொழுது அந்த மஞ்சள் உருண்டை அவளுடைய பிள்ளையான வினாயகராக உருவெடுத்து காவலில் நின்றது. அதன் பிறகு பல காலம் பொறுத்துத்தான் அங்கு வந்த சிவனாரை உள்ளே விடாமல் தடுத்த பிள்ளையாருடைய தலை போன கதையும், யானை முகம் பெற்ற கதையும் நிகழ்ந்தனவாம்.ஆகவே பார்வதி அந்த தலத்தில் குளிக்க வந்த பொழுது காவலுக்கு நின்ற அங்குள்ள வினாயகர் ஆலயத்தில் உள்ள வினாயகர் மனிதத்

புதிய இணைய தள இணைப்புப் பெயர்கள்



இணைய தள முகவரிகளில், துணைப் பெயரினை நம் விருப்பப்படி அமைக்க முடியாது. ஏனென்றால், அவை இணையதளப் பெயர்களின் வகைகளைக் குறிக்கும்.

தொழில் நுட்ப ரீதியாக, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான், அவற்றை அமைப்பதும், அனைவரும் பயன்படுத்துவதும் இயலும். com, net, biz, edu போன்றவற்றை வரைமுறைப்படுத்தும் அமைப்பாக "ஐகான்" (ICANN (Internet Corporation for Assigned Names and Numbers)), செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்த அமைப்பு பல புதிய வகைப் பெயர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

முதலில் இணையதளப் பெயர்களின் துணைப் பெயராக. Com என்பதுதான் பலரும் பயன்படுத்தும் பெயராக இருந்து வந்தது. 1990 ஆம் ஆண்டு வாக்கில், உருவாக்கப்பட்ட இணைய தளங்களின் எண்ணிக்கை திடீரென பன்னாட்டளவில் அதிகமானதால், புதிய வகைப் பெயர்களை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதனை "dot com" boom என அனைவரும் அழைத்தனர். பின்னர், படிப்படியாக புதிய வகைப் பெயர்கள் தரப்பட்டன. அவற்றை இணைய நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கின.

பேஸ்புக் சந்தித்த பத்து திருப்புமுனைகள்



அண்மையில், பிப்ரவரி 4ல், சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. 

ஹார்வேர்ட் பல்கலையில், சிறிய அளவில் தொடங்கி, இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கை யாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. 

பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகக் காண்போம்.


1. ஓர் எளிய தொடக்கம்: 

2004 ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், பேஸ்புக் தளத்திற்கான விதை ஊன்றப்பட்டது. 

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...