Oct 28, 2012

தேமுதிகவிலிருந்து 12 எம்.எல்.ஏக்கள் அணி மாற முடிவு


October 28, 2012
தேமுதிகவிலிருந்து 4 எம்.எல்.ஏக்கள் இதுவரை வெளியே வந்துள்ள நிலையில் மேலும் 8 எம்.எல்.ஏக்கள் அணி மாற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்.எல்.ஏக்கள் விலகலால், தேமுதிக வட்டாரம் கலகலக்க ஆரம்பித்துள்ளது. ஆளுங்கட்சியின் அதி பயங்கர சக்திவாய்ந்த வலையில் சிக்கி
ஒவ்வொரு எம்.எல்.ஏவாக வெளியேற ஆரம்பித்துள்ளனர். இப்படி ஆளுங்கட்சியினரிடம் சிக்கி எதிர்க்கட்சிகள் சின்னாபின்னமாவது
தமிழகத்திற்குப் புதிதல்ல. கடந்த திமுக ஆட்சியிலும் கூட இப்படித்தான் அதிமுகவை கலைத்துப் பார்த்தார்கள். இந்த நிலையில் தற்போது தேமுதிக

Sandy சூறாவளி நியூயோர்க்கை நோக்கி படையெடுக்கிறது : அச்சத்தில் பொதுமக்கள்


கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் தெற்கு பகுதிகளை தாக்கியுள்ள Sandy சூறாவளி, இன்று திங்கட்கிழமை, நியூயோர்க்கை நோக்கி நகர்கிறது.
இதையடுத்து நியூயோர்க்கின் ரயில், விமான போக்குவரத்துக்கள் முன்னெச்சரிக்கையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு மாநில, மத்திய அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நியூயோர்க்கில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன்,

ஹவாய் தீவை தாக்கியது சுனாமி


ஹானலுலு : கனடாவில் பசிபிக் கடற்கரைப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 7.7 ரிக்டர் புள்ளிகள் அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ந¤லநடுக்கத்துக்கு பிறகு ஏற்பட்ட பின்னதிர்வுகள் 4.6 ரிக்டர் புள்ளிகள் அளவுக்கு இருந்தன. இதனால் ஆழ்கடல் பகுதியில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரிந்தது. இதனால் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மக்கள் நெருக்கம் மிகுந்த தலைநகரான ஓஹு, ஹானலுலு உள்ளிட்ட நகரங்களில் மக்கள் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்ப ட்டனர். முதலில் 3 அடி உயர கடல் அலைகள் எழுந்தன. கரையோரப் பகுதிகளில் சுனாமி தாக்கியது.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: தரிசனத்துக்கு 20 மணிநேரம் ஆகிறது


திருப்பதி, அக்.28-

திருமலையில் பக்தர்கள் கூட்டம் நேற்று சனிக்கிழமை அதிகமாக இருந்தது. வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் வெளியே காத்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தை பார்த்து தேவஸ்தானம் மஹாலகு தரிசனத்தை பின்பற்றியது. கியூ காம்ப்ளக்ஸில் காத்திருந்த பக்தர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

சிறப்பு தரிசனத்துக்கு 6 மணி நேரமும், திவ்ய (நடைபாதை) தரிசனத்துக்கு 5 மணி நேரமும், தர்ம தரிசனத்துக்கு 20 மணி நேரமும் ஆனது. சனிக்கிழமை காலை 6 மணி முதல் 3 மணி வரை 46,668 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

பக்ரீத் மற்றும் வார இறுதி நாளில் விடுமுறை கிடைத்ததாலும் தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். ஐப்பசி மாதம் துலா மாதம் என்பதாலும் கூட்டம் அலைமோதியது.

ஆதீனம் - நித்யானந்தா மோதல் தங்க கீரீடம், செங்கோல் யாருக்கு?


நேரம்:10/28/2012 06:56:57Sunday2012-10-28
மதுரை: மதுரை ஆதீனம், நித்யானந்தா இடையே தங்க கிரீடம், செங்கோல் யாருக்கு என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தாவை கடந்த 19ம தேதி இளைய மடாதிபதி பொறுப்பில் இருந்து டிஸ்மிஸ் செய்து மதுரை ஆதீனம் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து உருவாக்கிய அறக்கட்டளை கலைக்கப்பட்டு, ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டது.இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட போது பெங்களூரில்
மந்திரி சபை விரிவாக்கம்: ஆந்திராவுக்கு அடித்தது அதிர்ஷ்டம்
இன்று நடந்த மத்திய மந்திரி சபை மாற்றத்தின் போது 22 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இந்த 22 பேரில் பல்லம் ராஜு, நடிகர் சிரஞ்சீவி, ஜெயசூர்ய பிரகாஷ்ரெட்டி. சர்வேஸ் சத்ய நாராயணா, பொரிசா பல்ராம் நாயக், கிருபா ராணி கில்லி ஆகிய 6 பேர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே மத்திய மந்திரிசபையில் அதிக மந்திரிகளை அதாவது 8 மத்திய
மந்திய மந்திரி சபையில் மாற்றம்: பதவியேற்ற 22 மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள்மந்திய மந்திரி சபையில் மாற்றம்: பதவியேற்ற 22 மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள்
புதுடெல்லி, அக். 28 -

பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மந்திரி சபையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இன்று மாற்றியமைக்கப்பட்டது. இதில் 7 கேபினெட் மந்திரிகளும், 2 ராஜாங்க மந்திரிகளும் மற்றும் 13 துணை மந்திரிகளும் பதவியேற்றனர்.

அவர்களின் பெயரும் இலாக்காக்களின் விபரங்களும் பின்வருமாறு:-

கேபினெட் மந்திரிகள் 7 பேரின் பெயரும் இலாக்காக்களும்;-

Click Here காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம்: 24 மணி நேரத்துக்கு மழை எச்சரிக்கை

Click Here
காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம்: 24 மணி நேரத்துக்கு மழை எச்சரிக்கை
சென்னை, அக்.28-

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைவதால் தமிழ்நாட்டில் 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் அருகே தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.  அது தீவிரம் அடைந்து தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அநேக இடங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிகப்பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய ஜேர்மனியில் கடும் குளிர்: ரயில் சேவை பாதிப்பு


[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012,
ஜேர்மனியின் பல பகுதிகளில் ஒரே நாளில் குளிர் திடீரெனப் பரவியதையடுத்து பனிப்பொழிவும் அதிகரித்தது.
மத்தியப் பகுதி மற்றும் தென் பகுதிகளில் குளிர் 0 டிகிரிக்கும் குறைவாக இருந்தது.
கடந்த பத்தாண்டுகளுக்குப் பின்பு இப்போது தான் ஜேர்மனியில் ஒக்ரோபர் மாதத்தில் குளிர்காலம் தொடங்கி இருக்கிறது.
பவேரியா, சேக்ஸனி, ரைன்லாந்து - பேலட் டினேட், ஹெஸ்ஸி மற்றும் சார்லாந்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.
நேற்று லீப்சிக், டிரெஸ்டென் மற்றும் மியூனிச்சில் பனி பெய்யத் தொடங்கும் என்று ஜேர்மனியின் தட்பவெப்ப மையம் தெரிவித்தது.
இத்தகைய திடீர் பனிப்பொழிவு முப்பது, நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை

அமெரிக்காவை 'சாண்டி' புயல் தாக்கியது: 6 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவை 'சாண்டி' புயல் தாக்கியது: 6 கோடி பேர் பாதிப்பு
வாஷிங்டன், அக் 28-

அமெரிக்காவையொட்டியுள்ள கரிபியன் கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன் ஹரிகேன் சாண்டி புயல் உருவானது. இதனால் கரிபியன் கடல் பகுதியில் உள்ள ஜமைக்கா, கியூபா நாடுகளில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த புயலுக்கு இந்த இரு நாடுகளிலும் 60 பேர் பலியானார்கள். சாண்டி

வானிலிருந்து மைதானத்திற்குள் திடீரென விழுந்த சுறாவால் பரபரப்பு




[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012
கோல்ப் கிளப் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த போது வானிலிருந்து திடீரென சுறா மீன் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்னர் சிலர் கோல்ப் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வானத்தில் இருந்து உயிருள்ள சுறா மீன் ஒன்று மைதானத்தில் விழுந்து துடித்தது. அதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுத்தை உடலில் இருப்பது போல் புள்ளிகள் நிறைந்த அந்த சுறா மீன் 2 அடி

கனடா செய்தி கனடாவில் நிலநடுக்கம்: ஹவாய் தீவை சுனாமி தாக்கியது




[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012,
கனடாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஹவாயிலுள்ள சைன் தீவை சுனாமி தாக்கியுள்ளது.
கனடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மாஸ்ஸெட் நகரில் இருந்து 139 கிலோ மீற்றர் தொலைவை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டரில் 7.7 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது.
பின்னர் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி பேரலைகள் தாக்கலாம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...