Sep 4, 2012

சிவ தரிசனம் (பெங்களூரு) - கல்கி தீபம் இதழில்..


பெங்களூர் சிவன் கோவில் பற்றிய எனது கட்டுரை, எடுத்த படங்களுடன் நான்குடன் ஆகஸ்ட் 20 கல்கி தீபம் இதழில் மூன்று பக்கங்களுக்கு வெளியாகியுள்ளது.

உலக அலைபேசி பயன்பாடு இந்தியா - சீனா முன்னிலை


புதுடில்லி: நடப்பாண்டு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், சர்வதேச அளவில், புதிய அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை, நிகர அளவில், 14 கோடியாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் பங்களிப்பு, 40 சதவீதம் என்றளவில் உள்ளது என, தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், இந்தியா மற்றும் சீனாவில், புதிய அலைபேசி இணைப்பை பெற்றவர்களின் எண்ணிக்கை முறையே, 2 கோடி மற்றும் 4 கோடி என்ற அளவில் உள்ளது.

சூரியனில் புதிதாகத் தோன்றவுள்ள அரை மில்லியன் மைல் நீளமுள்ள கதிர்வீச்சு அலைகள்



சூரியனில் தற்போது தோன்றியுள்ள சூரிய சூறாவளி (Solar storm) காரணமாக இன்னும் சில மணிநேரங்களில் அதில் இருந்து வெளிப்படவுள்ள கதிர்வீச்சுக்கள் பூமியைப் பாதித்து சராசரியான கதிர்வீச்சுப் புயலைத் தோற்றுவிக்கவுள்ளது எனக் கூறப்படுகின்றது.
மேலும் விஞ்ஞானிகள் இம்முறை தோன்றவுள்ள சூரிய சூறாவளியை ஆய்வு செய்து சூரியனில் ஏற்படவுள்ள கதிர்வீச்சு வெடிப்புக்கள் பூமியில் மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொழிநுட்பம் என்பவற்றை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த விபரங்களைக் கற்க உள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கக் கூடிய இக் கதிர்வீச்சுப் புயல் சூரியனின் மேற்பரப்பில் இருந்து அரை மில்லியன் மைல்கள் நீளமானதாகும்.

இத்தகவலை நாசாவின் சூரிய இயக்க ஆய்வகம் (Solar Dynamics Observatory - SDO) உறுதி செய்துள்ளது.

வடகொரியாவை தாக்கியுள்ள சூறாவளி - 48 பேர் பலி



வடகொரியாவைக் கடந்த சில நாட்களாகத் தாக்கி வரும் தைபூன் 'பொலாவென்' காரணமாக இது வரை 48 பேர் பலியானதாகவும் 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்தும் காணாமற் போயும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர இந்த தைபூன் பொலாவென் மிகப் பெரிய சேதத்தையும் விளைவித்துள்ளது. சுமார் 20 000 இற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து உள்ளனர். நூற்றுக் கணக்கான மரங்கள் முறிந்து வீழ்ந்து சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...