Oct 16, 2012

Permulaan Coding HTML - Bahas Komputer

Permulaan Coding HTML - Bahas Komputer

சென்காகு தீவுகளை நோக்கி முன்னேறும் சீன போர்க்கப்பல்கள்: ஜப்பானில் பரபரப்புடோக்கியோ: சீனா மற்றும் ஜப்பான் நாடுகளிடையேயான சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளை நோக்கி சீன போர்க்கப்பல்கள் முன்னேறி வருவதையடுத்து, ஜப்பானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே சென்காகு தீவுகள் குறித்த சர்ச்சை நிலவி வருகிறது. இரு நாடுகளும் அத்தீவு தங்களுக்கே சொந்தம் என கூறி வருகின்றன. இந்நிலையில், சென்காகு தீவுகளை விலைக்கு வாங்கி விட்டதாக ஜப்பான் திடீரென அறிவித்தது. ஜப்பானின் இந்த அறிவிப்புக்கு சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து இரு நாட்டு போர்க்கப்பல்களும் சென்காகு தீவுகள் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், சீனாவின் 7 போர்க்கப்பல்கள் சென்காகு தீவுகளை நோக்கி முன்னேறி வருவதால் ஜப்பானில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கப்பல்கள் அனைத்தும் பசிபிக் கடலில் போர்ப்பயிற்சியை முடித்துக்கொண்டு சீனா திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. எனினும் தற்போதைய சூழ்நிலையில், சீனாவின் இந்த மூவ், ஜப்பானை கவலை கொள்ளச் செய்துள்ளது. இதையடுத்து சென்காகு தீவு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒகினவா மாகாணத்திலிருந்து 49 கி.மீ., தொலைவில் தற்போது இந்த கப்பல்கள் உள்ளன. போர்க்கப்பல்கள், ஏவுகணை அழிக்கும் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை மீட்கும் கப்பல்கள் ஆகியவை இதில் அடங்கும். தற்போது சீன கப்பல்கள் சென்று கொண்டிருக்கும் பாதை பசிபிக் கடலில் இருந்து சீனாவுக்கு செல்லும் வழக்கமான பாதை என்ற போதிலும் தற்போதைய சூழலில் ஒருவித பதட்டத்தையே சீன கப்பல்கள் ஏற்படுத்தியுள்ளன.

மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்ற ஜூன் மாதம், தான் வடிவமைத்து தயாரிக்கும் சர்பேஸ் டேப்ளட் பிசி மற்றும் விண்டோஸ் போன் 8 குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது.

இவை இரண்டும் இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. சர்பேஸ் டேப்ளட் அக்டோபர் 25 அன்றும், விண்டோஸ் போன் 8 அக்டோபர் 29 அன்றும் வெளியிடப்படும்.

சர்பேஸ் ஆர்.டி. டேப்ளட் பிசியில் 10 அங்குல திரை, டச் ஸ்கிரீன் டிஸ்பிளே சிறப்பு அம்சங்களாக இருக்கும். இதில் ஏ.ஆர்.எம். ப்ராசசர் இயங்கும். 

மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், யு.எஸ்.பி.2 போர்ட், மைக்ரோ எச்.டி. வீடியோ, சிறப்பான வைபி இணைப்பிற்காக 2x2 MIMO ஆன்டென்னா ஆகியவை தரப்படும். 

விண்டோஸ் 8 போன் வெளியிடப்படுகையில், முழுமையான இதன் பயன்பாடு காட்டப்படும். 

நோக்கியாவின் லூமியா மற்றும் எச்.டி.சி. யின் இணையான போன்கள் வெளியிடப்பட இருப்பதால், மைக்ரோசாப்ட் நிறுவனமும் தன் ஸ்மார்ட் போன் வெளியீடு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவில் வெளியிடப்படும் இவை விரைவில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...