Sep 26, 2013

விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்




விண்டோஸ் 8 பதிப்பு புதிய இடைமுகத்துடன், தொடுதிரை செயலாக்கத்துடன், முற்றிலும் பல புதிய வசதி களைத் தாங்கி வந்தாலும், மாற்றத்திற்குத் தயாராகாத கம்ப்யூட்டர் பயனாளர்கள், முற்றிலுமாக விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஏற்கவில்லை.

இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, விண்டோஸ் 8.1 பதிப்பினை மக்களுக்கான @Œõதனை பதிப்பாக வெளியிட்டுள்ளது.

இது ஒரு சர்வீஸ் பேக் மட்டுமல்ல. பல சிறிய, பெரிய, முக்கிய மேம்பாட்டு வசதிகளையும் பயன்பாட்டினையும் தரும் சிஸ்டமாகத் தரப்பட்டுள்ளது. சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுத் தரும் பல அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, கூடுதலாகவும் தரப்பட்டுள்ளன.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெற்றி எனலாம். ஆனால், பயனாளர்களுக்கு இவை நிறைவைத் தருமா எனத் தெரியவில்லை. மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய வசதிகளை இங்கு காணலாம்.


1. ஸ்டார்ட் ஸ்கிரீன்:

முதல் முறை இதனைக் காண்கையில், முற்றிலும் புதியதாகத் தெரியவில்லை. ஆனால், நுணுக்கமாகப் பார்க்கையில், பல மாற்றங்கள் தென்படுகின்றன. இரண்டு புதிய அளவுகளில் அப்ளிகேஷன்களுக்கான

எதிர்கால டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்





டிஜிட்டல் உலகில், அதன் தொழில் நுட்பத்தின் பரிமாணங்களும், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களும் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன. 

இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கின்ற ஒரு சாதனம், குறுகிய காலத்திலேயே மிகப் பழைய சாதனமாக, எந்த வகையிலும் பயனற்ற ஒன்றாக மாறி வருகிறது. இப்போது யார் டயலைச் சுழற்றி தரைவழி இணைப்பு தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர்? 

பலருக்குத் தங்கள் மொபைல் எண்களே மறந்து போகின்றன. நமக்கு நெருக்கமான மனைவி மற்றும் நம் குழந்தைகளின் தொலைபேசி எண்களைக் கூட நினைவில் வைக்காமல், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். 

கம்ப்யூட்டர்களின் இடத்தில் லேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன் என சுழன்று வருகின்றன. இணையத் தொடர்பின் வேகம் மின்னலுக்கு ஒப்பாகி வருகிறது. டிஜிட்டல் திரைகள் விரிந்து, நம் விழிகளின் அசைவின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் நாள் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இவ்வாறு விரியும் டிஜிட்டல் சாதனங்கள் இனி எப்படி அமையும் என்பதை இங்கு காணலாம்.


1. லேப்டாப்:

லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் பிசிக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு வேகமாகக் குறைந்து வருகிறது. அமைதியாக இணைய உலா வர, மின்னஞ்சல் நிர்வகிக்க, பாட்டு கேட்க, படம் பார்க்க என டேப்ளட் பிசிக்கள் பயன்படுத்தப்பட்டன, லேப்டாப் கம்ப்யூட்டர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து திறன் சார்ந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. 

இவற்றின் மூலம் அறிவுத் திறனாக்கப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால்

விண்டோஸ் 8 - டாஸ்க் மானேஜர் அப்கிரேட்

விண்டோஸ் 8 சிஸ்டம் வெளி வந்து ஏறத்தாழ ஒராண்டாகியும், அதனைக் குறை கூறி வரும் தகவல்கள் இன்னும் நிற்கவில்லை. டச் ஸ்கிரீன் பயன்படுத்தாதவர்கள் சொல்லும் குறைகள் ஏராளம்.

ஆனால், இதில் டாஸ்க் மானேஜர் பயன்பாட்டைக் கண்டவர்கள், நிச்சயம் அதில் ஏற்பட்டுள்ள பல பயனுள்ள மாற்றங்களைப் புகழ்வார்கள். மிகப் பெரிய அளவில் டாஸ்க் மானேஜர் அப்கிரேட் செய்யப்பட்டு,புதிய வசதிகள் பல தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் மானேஜர் புரோகிராமினைத் திறக்க, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Task Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl + Shift + Esc கீகளை அழுத்தவும். உடன், கிடைக்கும் விண்டோவில், மாறா நிலையில், புதிய Process tab அழுத்தப்பட்டு கிடைக்கும்.

இந்த டேப்பில் புரோகிராமின் பெயர், அது சி.பி.யுவில் பயன்படுத்தும் திறன், பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளும் மெமரி பயன்பாடு, டிஸ்க்கில் பயன்பாட்டிற்கான இடம் மற்றும் நெட்வொர்க் பயன்பாடு ஆகிய தகவல்கள்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...