Apr 2, 2013

கறிக்கடைக்காரர் பயன்படுத்திய விண் கல்


பூமியில் மோதிய விண் கல் எச்சங்கள் ஒரு சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பூமியில் மோதிய விண் கல் எச்சங்கள் ஒரு சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயினில் பன்றிகள் வளர்த்துவந்த பண்ணைக்காரர் ஒருவர் கடந்த முப்பது ஆண்டுகளாக பன்றி இறைச்சியைப் பதனிடுவதற்கு பயன்படுத்தி வந்த 100 கிலோ எடைகொண்ட உலோகப் பாறை ஒன்று விண் கல் ஒன்றின் எச்சம் என்று தெரியவந்துள்ளது.
53 லட்சம் அமெரிக்க டாலர்கள் விலைபோகக்கூடிய உலோகப் பாறை இது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஃபாஸ்டினோ அஸென்ஸியோ லொபெஸ் என்ற இந்த நபர் 1980ஆம் ஆண்டு இந்த உலோகப் பாறையை கண்டெடுத்திருந்தார்.
அது முதல் பன்றிக் கறி மீது பளு ஏற்றி பதனிடுவதற்கு அவர் இதனைப் பயன்படுத்தி வந்தார்.
ஸ்பெயினில் தரையில் விண் கல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட டிவி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்த பின்னர், நிலவியல் நிபுணரான யுவான் கார்லோஸ் என்பவரைத் தொடர்புகொண்டு தன்னிடம் உள்ள பாறை பற்றி ஃபாஸ்டினோ குறிப்பிட்டுள்ளார்.
அதன் இந்தப் உலோகப் பாறையை ஆராய்ந்ததில் இது லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பூமியில் விழுந்த ஒரு விண் கல்லின் எச்சம் என்று தெரியவந்துள்ளது.
ஸ்பெயினில் இவ்வகையில் கண்டெடுக்கப்பட்ட நான்காவது விண் கல் எச்சம் இது என்று தெரிவிக்கப்படுகிறது.
ஃபாஸ்டினோ பயன்படுத்திவந்த உலோகப் பாறை தற்போது அருங்காட்சியகத்தில் வீற்றிருக்கிறது.

ஜப்பானை கடும் நிலநடுக்கம் தாக்கியது

First Published : 02 April 2013 12:37 PM IST

ஜப்பானில் இன்று காலை கடும் நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6.0 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.
 மியாகோ, ஜப்பான் பகுதிகளில் இருந்து 107 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவு

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவுடோக்கியோ, ஏப்ரல் 2-

ஜப்பானின் மியாகோ பகுதியிலிருந்து கிழக்கே 107 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவாகியுள்ளது.

இந்திய நேரப்படி  இரவு 12 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வழங்கவில்லை.

நிலநடுக்கத்தால் உயிர் இழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள்  இல்லை.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...