Dec 5, 2012

ரஸ்யாவில் கடும்பனி - 200 கி.மீ தூரம் வரை சிக்கிப்போன வாகனங்கள் இரண்டு நாட்களாக நகரமுடியாமல் அவதி!


[Monday, 2012-12-03
News Service ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடும் பனிப்பொழிவு காரணமாக, போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. 200 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் சிக்கியதால் 2 நாட்களாக மக்கள் தவித்தனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் இடுப்பளவு பனி குவிந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
  
மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை இணைக்கும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 700 கி.மீ., தொலைவு கொண்ட இந்த சாலையில் ஒரு கிலோ மீட்டரை கடப்பதற்கு ஒரு நாள் ஆவதாக ஒலக் பசிலோவ் என்ற டிரைவர் கூறினார்.
சாலைகளில் ஆயிரக்கணக்கான டிரக்குகள், கார்கள் ஸ்தம்பித்து நின்றன. 200 கி.மீ. தூரம் வரை சாலைகளில் வாகனங்கள் நின்றதால் மக்கள்

சூட்டுடம்புக்கு ஏற்றது புடலங்காய்


புடலங்காய் சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும்.

உடலுக்கு வலு கொடுக்கும்.  தேகம் மெலிந்து  இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல்

குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன?

குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன?


உடல் உறுப்புகள் அனைத்தையும் சீரழிக்கும் தன்மை புற்றுநோய்க்கு உண்டு என்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் ராஜா. புற்றுநோய் அறிகுறிகள், அவற்றின் தன்மை குறித்து இதோ அவரே விளக்குகிறார்... புற்றுநோயின் பாதிப்பு வயிறு, தொண்டை, மார்பகம், கல்லீரல், குடல்... என அனைத்து உறுப்பிலும் ஏற்படும். இந்த நோய் ஏற்பட பல காரணங்கள் சொல்லாம்.

அவை புற்றுநோய் பாதிக்கும் உறுப்பை பொறுத்து அமையும். குடல் மற்றும் மலக்குடலில் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் முறையற்ற உணவு பழக்கம். இது மட்டுமே காரணி என்று சொல்ல முடியாது. மரபணு,

இரவு நேரங்களில் நெஞ்செரிச்சல்


இரவு நேரங்களில் நெஞ்செரிச்சலாக இருக்கிறது. அடிக்கடி வாந்தி வருவது போன்று இருப்பதால் சரியாகத் தூங்க முடிவதில்லை. தினமும் இதே பிரச்னை... இதற்கு என்ன தீர்வு?  பதில் சொல்கிறார் குடல் நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சந்திரசேகர்

இதற்கு ‘உணவுக்குழாய் அமில அரிப்பு’ என்று பெயர். நம் உடலின் இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் வால்வு ஒன்று இருக்கிறது. இந்த
வால்வு பழுதுபட்டால் இந்தப் பிரச்னை வரும். இதனை ‘எதுக்களித்தல்’ என்றும் சொல்வதுண்டு.

இரவு நேரத்தில் வயிறு முட்ட சாப்பிடுவதும் இந்தப் பிரச்னையை உருவாக்கும். அதிகம் தண்ணீர் குடிப்பதும் ஒரு காரணம். பருமனாக இருப்பவர்களுக்கு இது வரலாம். இரவு முழுக்க இதே பிரச்னை நீடித்தால், காலையில் எழுந்திருப்பதே கஷ்டமாக இருக்கும்.

மந்தமான உணர்வையும் உருவாக்கும். தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு உணவை முடித்து விடுவது நல்லது. வயிறு முட்டச் சாப்பிடாமல் அளவாக சாப்பிடுவதும் இந்த பிரச்னையிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

அதிக காரம், புளிப்பு, கொழுப்புத் தன்மையுள்ள உணவைத் தவிர்த்து விடுங்கள். பருமனை குறைக்க முயற்சி செய்யுங்கள். இரவு நேரங்களில் பொரித்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தலைவலி, மூட்டுவலி மாத்திரை சாப்பிடுபவர்களையும் இந்த நோய் தாக்கும்.

மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரை எடுத்துக்கொள்வதை சில நாட்கள் ஒதுக்கி வையுங்கள். பிரச்னை தொடர்ந்தால் என்டோஸ்கோபி சோதனை செய்து கொள்வது நல்லது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...