Sep 23, 2013

கனடா - மிசிசாகாவில் அமைந்துள்ள ஜோடி கட்டிடங்கள் மிகச் சிறந்தவையென தெரிவு!

News Serviceகடந்த 2012ம் ஆண்டின் மிகச்சிறந்த புதிய வானளாவிய கட்டிடம் என்ற கணிப்பீட்டில் மிசிசாகாவில் உள்ள "Marilyn Monroe" என்றழைக்கப்படும் ஜோடி கட்டிடங்கள் மிகச் சிறந்தவையென தெரிவாகியுள்ளது. Absolute World Towers என்ற இவ்விரு கட்டிடங்களும் வளைவான அமைப்புடையவை. ஜேர்மனியின் ஹேம்பர்க் (Hamburg) நகரத்திலுள்ள கட்டிட கணிப்பீட்டு நிறுவனமான Emporis ஆண்டு தோறும் உலக நாடுகளில் மிகச்சிறந்த கட்டிடங்களை தெரிவு செய்து விருது வழங்கி வருகின்றது.
  
இதன்படி 2012ல் நடத்தப்பட்ட கணிப்பில் கனடாவின் மிசிசாகாவில் அமைந்துள்ள இரு

பீட்ரூட் சாறு உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கவல்லது! - ஆய்வில் தகவல்

பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஓரு தேநீர் கோப்பை அளவு, அதாவது 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஓருவரின் உயர் ரத்தஅழுத்தம் சுமார் 10 ஙம் அளவு குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  
News Serviceபதினைந்து பேரிடம் நடத்திய இந்த ஆய்வின் முடிவில் ஓரு சிலருக்கு அவர்களின் உயர் ரத்தஅழுத்தம் சாதாரண அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக, மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவிக்கிறது. இவர்கள் பீட்ரூட் சாற்றைகுடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் ரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம்

நீக்க முடியாத ஸ்கை ட்ரைவ்

ஸ்கை ட்ரைவ், இப்போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மையப் பகுதியாக, அதிலிருந்து நீக்க முடியாத பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், பைல்களை சேவ் செய்திட, ஸ்கை ட்ரைவ் புரோகிராமினை உருவாக்கியது. 

நமக்குத் தேவை எனில், இதில் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், நம் பைல்களை இதில் சேமித்து வைக்கலாம். எங்கு சென்றாலும், எந்த கம்ப்யூட்டரிலிருந்தும், நம் பைல்களைப் பெற்று, எடிட் செய்திடலாம். இந்த வசதி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 

இதனைத் தன் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பிப் பயன்படுத்துகின்றனர் என்பதனை அறிந்த மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் சிஸ்டத்தின் நீக்க முடியாத ஒரு பகுதியாக ஸ்கை ட்ரைவினை ஏற்படுத்தியுள்ளது.

விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நீங்கள் ஸ்கை ட்ரைவ் புரோகிராம் பயன்படுத்த தனியே ஒரு டெஸ்க்டாப் க்ளையண்ட்டை அமைக்க வேண்டியதில்லை; அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மேற்கொண்டது போல, விண்டோஸ் ஸ்டோரிலிருந்து எந்த அப்ளிகேஷனையும் தரவிறக்கம் செய்து இயக்க வேண்டியதில்லை. 

இது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே தரப்படுகிறது. நம்

விண்டோஸ் 7 - சில புதிய குறிப்புகள்


புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் அனைவரும், அதனுடன் வரும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கத் தொடங்கிய பின்னர், அது தரும் வசதிகளை ஒவ்வொன்றாய் ஆய்வு செய்து அறிந்து வரு கின்றனர்.

விஸ்டாவிற்குப் பின் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன், மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதுமைகளையும் எளிய, திறனுடன் கூடிய வசதிகளையும் தந்துள்ளது.

1. கீபோர்ட் ஷார்ட் கட்ஸ்:

விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம்.

எச்: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.

ஐ: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.

ஷிப்ட்+ ஆரோ: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.

D: அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்து, டெஸ்க்டாப் திரையைக் காட்டுகிறது.

E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும்; மை கம்ப்யூட்டர் போல்டர் காட்டப்படும்.

F: தேடல் விண்டோ காட்டப்படும்.

G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.

L: டெஸ்க்டாப்பினை லாக் செய்திடும்.

M: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.

R: ரன் விண்டோவினை இயக்கும்.

T: டாஸ்க் பாரில் சுழன்று வரும்; ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஏரோ பீக் வசதியினைக்

கொடுக்கும்.

U : ஈஸ் ஆப் யூஸ் சென்டரைத் திறக்கும்.

TAB : முப்பரிமாணக் காட்சி

Pause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.

2. ஹெல்ப் அண்ட் சப்போர்ட்:

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஹெல்ப் பிரிவு புதிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மைப் பக்கத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. Search Box, மைக்ரோசாப்ட் இணைய தளத்திற்கான நேரடி லிங்க், அண்டு என்று பெயரிடப்பட்ட பட்டன்.

விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள அண்டு பட்டனை அழுத்தலாம்; அல்லது ஹோம் பேஜில், இடது கீழ்ப் புறம் உள்ள More Support Options பிரிவில் கிளிக் செய்து, தேவையான தகவல்களைப் பெறலாம். இதில் தான் மைக்ரோசாப்ட் அண்டு a Person for Help என்ற பிரிவை மறைத்து வைத்துள்ளது.

இதில் கிளிக் செய்தால் Remote Assistance, Microsoft Help Forums, மற்றும் Computer Manufactures Homepage ஆகியவை கிடைக்கும். இதன் மூலம் எப்படி உதவி பெறலாம் என்பதனை, இதில் சென்று அறிந்து கொள்வதே சிறப்பாக இருக்கும்.

3. சிஸ்டம் ஹெல்த் ரிப்போர்ட்:

நம் கம்ப்யூட்டர் எந்த நிலையில் உள்ளது என்று அறிய அனைவருக்கும் ஆர்வமாகத்தான் இருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதற்கான வழி தரப்பட்டுள்ளது. சர்ச் லைன் பெட்டியில், perfmon/report என டைப் செய்து என்டர் தட்டினால், கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

கம்ப்யூட்டர் செயல்படும் திறன், எவ்வளவு திறனைப் பயன்படுத்துகிறது, பிரச்னைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்க வழி ஆகியவை காட்டப்படும். இந்த அறிக்கை கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். இதனை எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்து, உங்கள் நண்பருக்கு, இதனை இமெயிலில் அனுப்பவும் வழி தரப்படுகிறது.

4. அப்ளிகேஷன் அன் இன்ஸ்டால்:

விண்டோஸ் சிஸ்டத்துடன், சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைத்தே தரப்பட்டன. இவை சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்ததனால், பயன்படுத்துகிறோமோ இல்லையோ, அவை சிஸ்டத்தில் இயக்க நிலையில் இருந்து கொண்டே இருக்கும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, மீடியா பிளேயர், மீடியா சென்டர், டிவிடி மேக்கர் போன்ற புரோகிராம்கள் இதற்கு எடுத்துக் காட்டு. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இவற்றை தேவை இல்லை என்றால், நீக்கிவிட வசதி தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் பேனலில், Program and Features என்ற பிரிவிற்குச் செல்லவும்.

இதில் Turn Windows features on or off என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இவற்றில் இது போன்ற ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படும். இதில் உங்களுக்குத் தேவைப்படும் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்ள அதன் முன்புறம் உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

5.கிரடென்ஷியல் மேனேஜர்: (Credential Manager):

இந்த சிஸ்டத்தின் கண்ட்ரோல் பேனலில், கிரடென்ஷியல் மேனேஜர் என்னும் புதிய அப்ளிகேஷன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை இயக்க சர்ச் லைனில் Credential என டைப் செய்திடவும். இதில் நம் பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றைக் குறிப்பிட்டு சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.

நாம் அடிக்கடி செல்லும் இணையதளங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களையும், இதில் பதிந்து பாதுகாப்பாக வைக்கலாம். இவை Windows Vault என்பதில் சேவ் செய்து வைக்கப்படும். இந்த பைலையும் பேக்கப் எடுத்து வைக்கலாம்.


Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...