Sep 22, 2013

விநாயகர் சில சுவையான தகவல்கள்

விநாயகர் சில சுவையான தகவல்கள்

* "வி " என்றால் "இதற்கு மேல் இல்லை'' எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது. விநாயகருக்கு அர்ச்சிக்கும் போது , "ஓம் அநீஸ்வராய நம'' என்பர். "அநீஸ்வராய'' என்றால் தனக்கு மேல் ஒரு ஈஸ்வரனே இல்லை என்று பொருள். 

* கணபதி எனும் சொல்லில் "க'' என்பது ஞானத்தைக் குறிக்கிறது. "ண'' என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. "பதி " என்னும் பதம் தலைவன் எனப் பொருள்படுகிறது. பரப்பிரும்ம சொரூபமாயிருப்பவன் கணபதி. மோட்சத்திற்கும் அவனே தலைவன். 


* யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண்,பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யாநை அக்ரிணைப் பொருள், மனிதர் உயர்திணை. ஆக, அக்ரிணை , உயர்திணை அனைத்தும் கலந்தவர். பெரும் வயிறைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர் . அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம். 


* விநாயகருக்கு தும்பிக்கையுடன் சேர்ந்து ஐந்து கரங்களிருக்கிறது. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார். பின் வலது கைகளில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன்பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்த கலசமாகிய மோதகம்

திதி, தர்ப்பணம் கொடுக்கும் பழக்கம் எப்படி தோன்றியது?

திதி, தர்ப்பணம் கொடுக்கும் பழக்கம் எப்படி தோன்றியது?திரேதா யுகத்தில் தாயை இழந்த ஒரு குழந்தையை மகரிஷி ஒருவர் பாசத்துடன் வளர்த்தார். வயதான பிறகு அவர் மரணம் அடைந்தார். அப்போது அவர் வளர்த்த குழந்தை முனிகுமாரனாக மாறி இருந்தான். தனக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்த மகிரிஷி மரணம் அடைந்ததை முனிகுமாரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தன் தந்தை உயிரை பறித்த சூரியன் மீது அவனுக்கு கோபம் ஏற்பட்டது. எனவே தன் தவ வலிமையால் சூரியனை தடுத்து நிறுத்தினான். இதனால் உலகம் இருண்டது. மும்மூர்த்திகளும் தேவர்களும் முனிகுமாரனை சமரசம் செய்தனர். 


அவர்கள் அவனிடம் இனி ஒவ்வொரு ஆண்டும் உன் தந்தை இறந்த அதே நாளில் திரும்பி வருவார். அவருக்கு நீ உணவளிக்கலாம். அதை அவர் ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார். பிறகு பித்ரு லோகத்துக்கு திரும்பிச் சென்று விடுவார்'' என்றனர். 


இதற்கு முனிகுமாரன் சம்மதித்தான். ஒவ்வொரு ஆண்டும் அவன் தந்தை இறந்த திதியில் வரத் தொடங்கினார். இப்படித்தான் மறைந்த முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் பழக்கம் ஏற்பட்டது. பித்ரு பூஜையினால் நம் குலம் தழைக்கும். பித்ருக்கள் நம் பூலோகத்தில் இருந்து தென் திசையில் உள்ளனர். இதனால் அவர்களை தென் புலத்தார் என்று அழைக்கிறார்க

2013-ம் ஆண்டுக்கான மகாளய பட்ச நாட்கள்

இந்த ஆண்டுக்கான (2013) மகாளய பட்ச நாட்களில் செய்ய வேண்டிய சிரார்த்த விபரம் வருமாறு:- 
2013-ம் ஆண்டுக்கான மகாளய பட்ச நாட்கள்
20-ந்தேதி(வெள்ளி)-பிரதனம சிரார்த்தம் 
21-ந்தேதி(சனி)-துவிதியை சிரார்த்தம் 
22-ந்தேதி(ஞாயிறு)- திரிதியை சிரார்த்தம் 23-ந்தேதி(திங்கள்)-சதுர்த்திசிரார்த்தம் 
24-ந்தேதி(செவ்வாய்)-பஞ்சமிசிரார்த் தம் 
25-ந்தேதி(பதன்)-சஷ்டி சிரார்த்தம் 
26-ந்தேதி(வியாழன்)-சப்தமி சிரார்த்தம் 
27-ந்தேதி(வெள்ளி)-அஷ்டமி சிரார்த்தம் 
28-ந்தேதி(சனி)-நவமி சிரார்த்தம் 
29-ந்தேதி(ஞாயிறு)-தசமி சிரார்த்தம் 
30-ந்தேதி(திங்கள்)-ஏகாதசி சிரார்த்தம் 
அக்1-ந்தேதி(செவ்வாய்)-துவாதசி சிரார்த்தம் 
2-ந்தேதி(புதன்)-திரியோதசி சிரார்த்தம் 3-ந்தேதி(வியாழன்)-சதுர்த்தசிசிரார்த்தம் 
4-ந்தேதி(வெள்ளி)-மகாளய அமா வாசை.

மகாளய பட்சத்தின் 15 நாள் வழிபாடு பலன்கள்

மகாளய பட்சத்தின் 15 நாள் வழிபாடு பலன்கள்
மகாளய பட்சத்தின் 15 நாள் வழிபாடு ஒவ்வொன்றுக்கும் ஒருபலன் உள்ளது. அதன் விவரம் வருமாறு:- 

* செப். 20-ந் தேதி (வெள்ளி) பிரதமை திதி- இன்று செய்யப்படும் தர்ப்பணத்துக்கு தனலாபம் உண்டாகும். 

* 21-ந் தேதி (சனி) தூவிதியை திதியான இன்று செய்யப்படும் தர்ப்பணம், சிரார்த்தத்துக்கு புத்திர பாக்கியம் தரும் ஆற்றல் உண்டு. 

* 22-ந் தேதி (ஞாயிறு) திருதியா திதியான மூன்றாம் நாள் செய்யப்படும் தர்ப்பணம் திருமண பாக்கியத்தை அருளும். நல்ல இடத்தில் இருந்து நல்ல மாப்பிள்ளை கிடைப்பார். 

* 23-ந் தேதி (திங்கட்கிழமை) சதுர்த்தி திதியான இன்று செய்யும் பித்ரு வழிபாட்டால், எதிரிகளை விரட்டும் சக்தி கிடைக்கும். 

* 24-ந் தேதி (செவ்வாய்) பஞ்சமி திதியான இன்று நடத்தும் தர்ப்பணம் சகல செல்வங்களையும் உங்களுக்கு தேடித் தரும். 

* 25-ந் தேதி (புதன்கிழமை) மகாளய பட்சத்தின் 6-வது நாளாகும். சஷ்டி திதியான அன்று பித்ருக்களை நினைவு கூர்ந்து வழிபாடு செய்தால் மிகச்

தெய்வீகம் நிறைந்த வலம்புரி சங்கு

தெய்வீகம் நிறைந்த வலம்புரி சங்கு

சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். 

அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள். தமிழ் மக்களின் ஆதி கலாச்சாரத்தில் ஒன்று இந்த சங்கு ஊதுதல்.சங்கு ஊதினால் அபசகுணம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 


சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது. 


இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு

இலத்திரனியல் சாதனங்களின் தயாரிப்பு கையேடுகளை தரும் இணையத்தளம்

இலத்திரனியல் சாதனங்களின் தயாரிப்பு கையேடுகளை தரும் இணையத்தளம்

eShowBiz: Beautiful House's

eShowBiz: Beautiful House's

Turn your Facebook page into a website with in a minute for free

Turn your Facebook page into a website with in a minute for free

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...