Oct 30, 2013

வட­மேற்கு ஐரோப்­பாவை தாக்­கிய சென் ஜூட் புயல்:

   



வட­மேற்கு ஐரோப்­பாவைத் தாக்­கிய சென் ஜூட் புயல் கார­ண­மாக குறைந்­தது 14 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் பலர் காய­ம­டைந்­துள்­ளனர்.
ஜேர்­ம­னியில் மட்டும் 7 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மேற்கு ஜேர்­ம­னி­யிலுள்ள கெல்ஸென் கிர்சென் நகரில் காரொன்றின் மீது மர­மொன்று சரிந்து விழுந்­ததில் இருவர் பலி­யா­ன­துடன் அக்­கா­ரி­லி­ருந்த இரு சிறுவர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.
அதே நகரில் பிறி­தொரு காரின் மீது மரம் சரிந்து விழுந்­ததில் இருவர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
அதேசமயம் அங்கு ஒருவர் நீரில் மூழ்­கியும் 66 வயது பெண்­ம­ணி­யொ­ருவர் இடிந்து வீழ்ந்த சுவரின் கீழ் சிக்­கியும் மர­ண­ம­டைந்­துள்ளார்.
இந்தப் புயலால் பிரித்­தா­னி­யாவில் நால்வர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.
லண்­டனின் வடக்கே வட்போர்ட் எனும் இடத்தில் காரொன் றின் மீது மர­மொன்று சரிந்து விழுந்­ததில் 50 வயது மதிக்­கத்­தக்க நபர் ஒருவர் பலி­யா­கி­யுள்ளார்.
கென்ட் நகரில் வீடொன்றின் மீது மரம் சரிந்து விழுந்­ததில் அங்கு உறங்­கிக்­கொண்­டி­ருந்த 17 வயது யுவதி கொல்­லப்­பட்­டுள்ளார்.
அதே­ச­மயம் மேற்கு லண்­டனில் புயல் காற்றால் மோச­மாக பாதிக்­கப்­பட்ட வீதி­யொன்றில் இடம்­பெற்ற எரிவாயு வெடிப்பில் ஆணொ­ரு­வரும் பெண்­ணொ­ரு­வரும் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த எரி­வாயு வெடிப்பில் அந்தப் பிராந்­தி­யத்­தி­லுள்ள பல வீடுகள் சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளன.
மணிக்கு 191 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய இந்த புயலால் மர­மொன்று சரிந்து எரி­வாயு குழாய் மீது விழுந்­த­மையே இந்த வெடிப்­புக்கு கார­ண­மென நம்­பப்­ப­டு­கி­றது.
ஏற்­க­னவே புயலால் லண்­டனில் அமைச்­ச­ரவை அலு­வ­ல­கம் அமைந்­தி­ருந்த கட்­ட­டத்தின் மீது பாரம் தூக்கி உப­க­ர­ண­மொன்று உடைந்து விழுந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்தப் புயலால் டென்­மார்க்­கிலும் உயி­ரி­ழப்­புக்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் தக­வல்கள் கூறு­கின்­றன.
மேற்கு பிரான்­ஸி­லுள்ள பிரிட்­டனியில் பெண்­ணொ­ருவர் கடலில் அடித்துச் செல்­லப்­பட்டு உயி­ரி­ழந்­துள்ளார்.
இந்தப் புய­லை­ய­டுத்து லண்­டன் மற்றும் வட­மேற்கு ஜேர்­ம­னிக்­கான பல புகை­யி­ரத சேவைகள் இரத்து செய்­யப்­பட்­டன. நெதர்­லாந்தின் சிபோல் விமான நிலை­யத்தில் குறைந்­தது 50 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஜேர்மனிய விமான சேவைகளும் தாமதத்தை எதிர்கொண்டன.
ஜேர்மனியில் மீனவர் ஒருவரும் மாலுமி ஒருவரும் கடலில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.


Close

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...