Feb 8, 2014

அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தலாமா..?




                          நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால் ஒரே நேரத்தில் இதை அருந்துவது நல்லதல்ல. 3 அல்லது 4 மணி நேர இடைவெளிக்கு ஒரு முறை நீர் அருந்த வேண்டும். மேலும், குழம்பு, ரசம், மோர், ஜூஸ் போன்றவற்றாலும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.

எனக்குத் தாகமே எடுப்பதில்லை. அதனால் நான் தண்ணீர் பெரும்பாலும் குடிப்பதில்லை ஆனாலும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சிலர் பெருமிதமாகக் கூறுவதுண்டு.

ஆரம்பத்தில் இவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் நாளடைவில் சிறுநீரகங்களில் செயல்பாடுகள் செயலிழக்க ஆரம்பிக்கும்.

ஒருவர் 4 மணி நேரத்திற்குமேல் நீர் அருந்தாமல் இருப்பது தவறு. ஏனெனில் ஆரோக்கியமான மனிதர்கள் போதிய அளவு நீர் அருந்தாவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும் போது சிறுநீர் குழாயில் எரிச்சல் உண்டாகும். சிறுநீரகத்தில் கழிவுப் பொருட்கள் தங்கி சிறுநீரகக் கல்லாக மாறக்கூடும்.

சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். இது இயல்பு நிலையில் உள்ளவர்களுக்கு. அதிகளவு நீர் அருந்துவதும் உடலுக்கு நல்லதல்ல. ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்யவேண்டியிருக்கும். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடும் அதிகமாக இருக்கும். இது உடலுக்கு நாளடைவில் தீங்கை ஏற்படுத்தும்.

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவதில் தவறில்லை. இது உடலுக்கு மிகவும் நல்லது. அதற்காக ஒரே நேரத்தில் 1 லிட்டருக்கு மேல் நீர் அருந்துவது தவறு. தினமும் இடைவெளி விட்டு ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தினால் உடலுக்கு போதுமானது. இவ்வாறு செய்துவந்தால் நன்கு பசி உண்டாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பொதுவாக நீரிழிவு நோய், காசநோய், மதுப்பழக்கம் புகைப்பழக்கம் உள்ளவர்கள், முதியவர்கள், அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.

அதுபோல் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும்போதும், தேர்வு எழுதச் செல்லும்போதும், அல்லது அவசரமாக வெளியே செல்லும்போதும் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். இதில் கெடுதல் ஏதும் இல்லை.

குறைந்த அளவு நீர் அருந்துவதும், அளவுக்கு அதிகமாக நீர் அருந்துவதும் நல்லதல்ல. சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் நீர் அருந்துவதால் நீண்ட ஆரோக்கியத்தைப் பெறுவது நிச்சயம்.
்தபடுத்தி, மொபைலை வேகப்படுத்தும் பயனுள்ள அருமையான மிக சிறந்த 2 ஆப்ஸ்களை பற்றி பார்ப்போம்.

advanced system care
கணினியில் சிறப்பாக செயல்பட்டு கணினியை வேகப்படுத்தும் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் தற்போது Advanced Mobile Care என்ற பெயரில் இலவசமாக கிடைக்கிறது.

சுத்தபடுத்தும் வேலை மட்டுமல்லாது கேம் பூஸ்டர், பாட்டரி சேவர், அப்ளிக்கேஷன் மேனேஜர் மற்றும் அவசியமான (Privacy Locker) போட்டோ, வீடியோ, பைல்களை மறைத்து வைக்க என்று பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. ஆண்ராய்டு மொபைல் வைத்து இருப்பவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய மென்பொருள்.

Advanced Mobile Care...https://play.google.com/store/apps/details?id=com.iobit.mobilecare&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5pb2JpdC5tb2JpbGVjYXJlIl0.

android system optimizer இதுவும் பல்வேறு வசதிகள் கொண்டஆப்ஸ்தான். ஒரே கிளிக்கில் மெமரியை சுத்தபடுத்தலாம். மேலும் இதில் உள்ள பயனுள்ள வசதிகளை பார்க்கவும்.

1. Apk Cleaner
2. Backup & Restore
3. Homescreen shortcut
4. Memory status report (RAM, ROM, SD Card memory and CPU)
5. System information
6. One-click task killer
7. Cache cleaner
8. History cleaner
9. Call log and messages cleaner
10. SD Card temporary file cleaner
11. App to SD Card
12. SD Card file manager
13. Batch installer
14. Batch uninstaller
15. Startup manager
16. Add app to startup Android System Optimizer
17. Homescreen widget
யுடியூப் வீடியோக்கள் விரைவாக Buffer ஆக
அதிகமான இணையதளப் பயனாளர்கள் விரும்பிப்பார்ப்பது யுடியூப் வீடியோக்கள்தான். குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்பு உள்ளவர்கள் இதில் வீடியோ பார்ப்பதென்றால் சிறிது நேரம் கழித்துதான் பார்க்க முடியும்.
காரணம் வீடியோ முழுவதும் Buffer ஆவதற்கு சிறிய நேரம் எடுத்துக்கொள்ளும். முழுமையான வீடியோவைப் பார்க்க வீடியோ முழுவதும் Buffer ஆகும்வரை காத்திருக்க வேண்டும். இனி அதுபோல காத்திருக்கத் தேவையில்லை.
யுடியூப் வீடியோக்கள் விட்டு விட்டு பஃபர் ஆகாமல் தொடர்ச்சியாக பஃபர் ஆவதற்கென்ன ஒரு எக்ஸ்ட்டன்சன் (YouTube center extension) உள்ளது. கூகிள் குரோம், ஃபையர் ஃபாக்ஸ், ஓபரா, ஓபரா பழைய திப்பு, மேக்ஸ்தான், சஃபாரி என அனைத்து பிரௌசர்களுக்கும் இந்த எக்ஸ்டன்சன் கிடைக்கிறது.
இதை டவுன்லோட் செய்து உங்களுடைய பிரௌசரில் இணைத்துக்கொண்டால், YouTube Video க்கள் தொடர்ச்சியாக பஃபர் ஆகி, உடனடியாக உங்களுக்கு வீடியோ தொடர்ச்சியாக பிளே ஆகும். பயனுள்ள இந்த எக்ஸ்டன்சனை நீங்களும் தரவிறக்கம் செய்து தொடர்ந்து யுடியூப் வீடியோக்கள் பார்த்து மகிழுங்கள்.
இந்த முகவரியில் சென்று உங்கள் பிரௌசருக்கான Extension ஐ நிறுவிக்கொள்ளுங்கள். டவுன்லோட் செய்ய சுட்டி கீழே.
https://github.com/YePpHa/YouTubeCenter/wiki
குரோம் பிரௌசரில் இந்த எக்ஸ்டன்சனை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த வீடியோவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். நன்றி. please share this page.....
ைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை
இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*www.zedge.com
வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி நமது கைப்பேசி மாடலையும் தேர்வு செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் கைப்பேசிகளுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக நமது கைப்பேசியிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கு உங்கள் கைப்பேசியின் பிரவுசரில்http://m.zedge.net/ என்று டைப் செய்து இணையலாம்.

* www.mobile9.com
நமது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும், அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.
மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கு வைக்கலாம்.

* www.getjar.com
முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,மென்பொருட்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது.
பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.கைப்பேசியில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.getjar.net/ என்று டைப் செய்து இ ணையலாம்.

*http://www.apniapps.com/
ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான மென்பொருட்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மேன்போருளைப்பற்றிய சிறு குறிப்பும் உள்ளது,அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் மென்பொருளை தேர்ந்தேடுக்கலாம்.

* http://www.mobilemastee.com/
வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள்,ஸ்க்ரீன் சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

* http://dailymobile.se/
ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ராய்டு வகையை சேர்ந்த போன்களுக்கு வால்பேப்பர்கள்,கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகு தான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்த தளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.

* http://www.ipmart-forum.com/
இந்த தளத்தில் Fun, Games and Entertaining என்ற பிரிவில் சென்று நமது எந்த வகை கைப்பேசிக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய மென்பொருட்களையும்,பழைய மென்பொருட்களின் புதிய அப்டேட் செய்யப்பட்ட மென்பொருட்களும் உடனுக்குடன் தருகிறார்கள்.

* http://www.youpark.com/
ஜாவா, சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி,ஆன்ராய்டு வகை போன்களுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.

இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள். காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை. ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கைப்பேசி வழியாக http://wab.youpark.com/ என்ற முகவரியில் நேரடியாக இணையலாம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...