Dec 7, 2012

முதலையின் வாயில் காலை கொடுத்து மீண்ட அழகி



முதலையின் வாயில் காலை கொடுத்து மீண்ட அழகி
மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் தாரா ஹாக்ஸ் (23). இவர் பார்க்க மிகவும் அழகாக இருப்பார். டு காங்க் பே என்ற சுற்றுலா தளத்துக்கு செல்லும் சொகுசு கப்பலில் பணியாளராக இருந்து வருகிறார். டு காங்க் பே சென்ற அவர் அங்குள்ள குளம் ஒன்றில் இறங்கி நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்போது அங்கு திடீரென வந்த முதலை படுவேகமாக தாராவின் காலை கவ்விப் பிடித்தது. இதனால் அவர் அலறி துடித்தார். இருந்தும் முதலை அவரை விடவில்லை. காலை மெதுவாக வாய்க்குள் இழுக்க தொடங்கியது. இதைப் பார்த்து ஓடிவந்த தாராவின் நண்பர் ஆலன் முதலையின் வாயை பிளந்து காலை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
 
இதையடுத்து முதலையின் கண்களில் சரமாரியாக அவர் குத்தினார். இதனால் நிலை குலைந்த முதலை வாயை திறந்து பின் வாங்கியது. உடனே ஆலனும், மற்றொருவரும் சேர்ந்து தாராவை காப்பாற்றினர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் அவரது காலில் படுகாயம் ஏற்பட்டது

மாலத்தீவுக்கான நிதி உதவி ரத்து: இந்திய அரசு நடவடிக்கை


FILE
மாலத்தீவில் உள்ள சர்வதேச விமான நிலையம் கொண்டுள்ள ஜிஎம்ஆர்-ன் கான்டிராக்ட்டை அந்த அரசு ரத்து செய்துள்ளது. இதனை அடுத்து மாலத்தீவுக்கு இந்தியா வழங்குவதாக இருந்த ரூ.250 கோடி நிதியுதவியை தற்போதைக்கு நிறுத்திவைத்துள்ளது.

மாலத்தீவுக்கு இந்தியா வழங்குவதாக இருந்த ரூ.250 கோடி நிதியுதவி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து இந்திய அரசு சார்பில் எந்த தகவலும் தங்களுக்கு தரப்படவில்லை என்று மாலத்தீவு அரசு கூறியுள்ளது.

நேற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி தரும் விதாமாக ஜிஎம்ஆர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முழு அதிகாரம் மாலத்தீவு அரசுக்கு உள்ளதாக சிங்கபூர்

ஜப்பானுக்கு அருகில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை வாபஸ்



ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகில் இன்று மாலை கடலின் மத்தியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவாகி இருந்ததால், ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. எதிர்பார்த்தது போன்றே சில சிறியளவிலான சுனாமி கரையோர கிராமங்களை தாக்கியுள்ளது.  எனினும் தற்போது ஜப்பானின் வடகிழக்கு நகரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் நகர்ப்புறங்களில் உணரப்பட்டதால் மக்கள் வீடுகளை

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்- ரிக்டரில் 7.3 அலகுகள் பதிவு- சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது!

டோக்கியா: ஜப்பான் நாட்டில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகுகள் பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஜப்பான் நாட்டு நேரப்படி மாலை 5.18 மணியளவில் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் மிகக் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. நில நடுக்கம் உணரப்பட்ட போது அலுவலகங்களில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.
ஜப்பானின் ஹோன்சு அருகே சென்டாயை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மியாகி அருகே 1 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
சென்டாய் பகுதியில் கடந்த ஓராண்டில் 9-வது முறையாக இது போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நிலநடுக்கத்தால் கடந்த 2011-ம் ஆண்டைப் போல பெரும் சுனாமி பேரலைகளை உருவாக வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரையிலான உயரத்துக்கே அலைகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின்!

marina beach dolphin fishமெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காப்பாற்றிய தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.
நேற்று வியாழன் அன்று சென்னை மெரீனா கடற்கரையில் அரிய வகை டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. மிகமும் ஆழமில்லாத கடற்பகுதியில் இந்த பாலூட்டி வகை
யை சேர்ந்த மீன் சிக்கிக் கொண்டதால், அதனால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இந்த மீனை முதலில் குப்பன் என்ற மீனவர் தான் அடையாளம் கண்டார். கடல் சீற்றம் அதிமாக இருந்ததால் இந்த மீனால் கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியவில்லை. இந்த மீனின் வாயில் ரத்தம் கசிந்து வந்ததாக குப்பன் சொல்கிறார்.

இந்த மீனை காப்பாற்ற வழக்கம் போல் தமிழக அரசின் வனத்துறை அதிகாரிகளோ , அல்லது மீன் வளத் துறை அதிகாரிகளோ வரவில்லை.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...