Jun 25, 2012

ஆரோக்கியம் தரும் குறிப்புகள்

உணவு மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், நோய்களையும் குணப்படுத்தலாம்'' என்பது சித்த மருத்துவத்தின் தத்துவமாகும். இதனை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சென்னை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஆரோக்கிய முகாம்களையும் நடத்தி வருகிறார்கள். முகாம் ஒன்றில் அந்த குழுவை சேர்ந்த டாக்டர் வீரபாபு தந்த ஆரோக்கிய தகவல்கள்:-
 
• இன்று ஏராளமானவர்கள் சர்க்கரை நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம். சாமை அரிசி, வரகு அரிசி, திணை அரிசி போன்றவற்றில் சாதம் செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் மட்டுமின்றி உடல் பருமனும் குறையும். முதலிலே இந்த சாதத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுத்துவிடலாம்.
 
• ஆவாரம்பூவை அன்றாடம் பருப்போடு வேக வைத்து சாம்பார் செய்து உண்டு வருவது நல்லது. இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். உடல் எடையையும் குறைக்கும்.
 
• முடக்கத்தான் கீரையில் ரசம் தயாரிக்கலாம். தோசை சுட்டு சாப்பிடலாம். சூப் வைத்தும் பருகலாம். இந்த கீரையில் மஞ்சள், சீரகம், பூண்டு சேர்த்து வதக்கி அரைத்து அரிசி மாவோடு கலந்து தோசையாக சுட்டு சாப்பிட்டால் மூட்டு வலியே வராது.
 
•  வல்லாரையை தொடர்ந்து உணவில் பயன்படுத்தினால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் வலுப்பெறும்.
 

• தூதுவளையை பயன்படுத்தினால், சுவாச மண்டலம் வலுப்பெறும். சளி, இருமல் வராமல் தடுக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...