Aug 15, 2012

பிரேசிலை சென்றடைந்தது ஒலிம்பிக் கொடி



நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள், அடுத்து எதிர்வரும் 2016ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ளது.

இதற்காக ரியோடி ஜெனிரோ நகர மேயர் எடுர்டோ பயஸ், கவர்னர் ஜெர்சியோ கேப்ரல் ஆகியோர் கொடியை தனி விமானத்தின் மூலம் லண்டனிலிருந்து பிரேசில் நாட்டுக்கு எடுத்து வந்தனர்.

ரியோடி ஜெனிரோ நகரில் இறங்கிய அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாணவேடிக்கை நிகழ்ச்சி, ஆடல், பாடலுடன் அவர்களை ஏராளமானோர் திரண்டு வந்து வரவேற்றனர்.
இது குறித்து மேயர் எடுர்டோ பயஸ் கூறுகையில், நாடு முழுவதும் ஒற்றுமையாக செயல்பட்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறோம். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம், அடுத்த போட்டியில் நிச்சயம் பிரேசில் அதிக பதக்கங்களை பெற்று திறமையை வெளிப்படுத்தும் என்றார்.
தற்போது நடந்து முடிந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பிரேசில் 3 தங்கம் உள்பட 17 பதக்கங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...