Sep 5, 2012

கோஸ்டா ரிகா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி


சான்ஜோஸ், செப், 6 -
 
கோஸ்டா ரிகா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலிமத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேலில் 7.6 எனப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 
 
பெரும்பாலான கட்டிடங்கள் குலுங்கியதில் குறைந்தது இருவர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் பூகம்ப மையம் தலைநகர் சான் ஜோசுக்கு மேற்குப்பகுதியில் 87 மைல் தூரத்தில் அமைந்துள்ளது.
 
அருகிலுள்ள பசிபிக்கடல் நாடுகளில் சுனாமி தாக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. 1991 ல் இங்கு ஏற்பட்ட பூகம்பத்திற்கு 47 பேர் இறந்தனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...