Sep 15, 2012

யாஹூவின் புதிய சிஇஒவாக முன்னாள் கூகுள் துணைத் தலைவர் மரிஸா மேயர் நியமனம்

 Marissa Mayer Is The New Ceo Yahoo
சன்னிவேல்: யாஹூ இணைய தளத்தின் முதன்மை செயல் அதிகாரியாக மரிஸா மேயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுநாள்வரை கூகுள் தேடுதளத்தின் துணைத்தலைவராக இருந்த அவர் இன்று முதல் யாஹூவின் சி.இ.ஒ வாக பணியை தொடங்குகிறார்.
1999ம் ஆண்டு கூகுளின் முதல் பெண்
பொறியாளராக தனது பணியை தொடங்கிய மரிஸா ஐ கூகுள், கூகுள் நியூஸ், ஜி மெயில் போன்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். 6000க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களை வழி நடத்தினார். 13 ஆண்டுகாலம் கூகுளில் பணியாற்றியுள்ள மரிஸா அந்நிறுவனத்தில் துணைத்தலைவராக உயர்ந்தார்.
யாஹூவில் பணியாற்ற உள்ளது பற்றி கருத்து கூறியுள்ள மரிஸா, இது தனக்கு பெருமை தரக்கூடியது என்று தெரிவித்துள்ளார். 700 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட யாஹூ நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரியாக தன்னை நியமனம் செய்ததற்காக முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவேன் என்றும் மரிஸா கூறியுள்ளார்.
மரிஸாவின் நியமனத்தை யாஹூ இயக்குநர்கள் குழு ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...