Sep 21, 2012

இந்தியாவில் 10ல் ஒருவருக்கு நீரிழிவு 4ல் ஒருவருக்கு ரத்த அழுத்தம் ஆய்வில் தகவல்

இந்தியாவில் வசிப்போரில் 4ல் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. 10ல் ஒருவருக்கு சர்க்கரை வியாதி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல்களை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்கிரீன் இன்டியா டுவின் எபிடெக் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த விவரங்கள் வருமாறு:
இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் வசிக்கும் 16 ஆயிரம் மக்களிடம் மூன்று கட்டங்களாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 23.1 சதவீத ஆண்களுக்கும், 22.6 சதவீத பெண்களுக்கும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது. 11.1 சதவீத ஆண்களுக்கும் 10.8 சதவீத பெண்களுக்கும் நீரிழிவு (சர்க்கரை நோய்) உள்ளது.

சோதனை மேற்கொள்ளப்பட்ட 16 ஆயிரம் பேரில் 60 சதவீதத்தினர் இந்த இரு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அந்த நோயை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை.

சோதனை செய்யப்பட்டவர்களில் பலரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 7 சதவீதமாக இருந்தது. கெட்ட கொழுப்பின் அளவு 100 மில்லி கிராம் அளவில் இருந்தது. பலர் உடல் பருமன் நோயாலும் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். நோய் குறித்த விழிப்புணர்வு மகாராஷ்டிரா மக்களிடம் மிக குறைவாகவே உள்ளளது.

மகாராஷ்டிராவில் 5 சதவீதம் பேருக்கு என்ன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றே தெரியாமல் உள்ளனர். மொத்தத்தில் இந்தியாவில் வசிப்போரில் 4 ல் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. 10 ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...