Dec 5, 2012

ரஸ்யாவில் கடும்பனி - 200 கி.மீ தூரம் வரை சிக்கிப்போன வாகனங்கள் இரண்டு நாட்களாக நகரமுடியாமல் அவதி!


[Monday, 2012-12-03
News Service ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடும் பனிப்பொழிவு காரணமாக, போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. 200 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் சிக்கியதால் 2 நாட்களாக மக்கள் தவித்தனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் இடுப்பளவு பனி குவிந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
  
மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை இணைக்கும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 700 கி.மீ., தொலைவு கொண்ட இந்த சாலையில் ஒரு கிலோ மீட்டரை கடப்பதற்கு ஒரு நாள் ஆவதாக ஒலக் பசிலோவ் என்ற டிரைவர் கூறினார்.
சாலைகளில் ஆயிரக்கணக்கான டிரக்குகள், கார்கள் ஸ்தம்பித்து நின்றன. 200 கி.மீ. தூரம் வரை சாலைகளில் வாகனங்கள் நின்றதால் மக்கள்
பரிதவித்தனர். மேலும், வாகனங்களில் சென்ற சரக்குகள் சரியான நேரத்துக்கு வரவில்லை என்று பல கம்பெனிகள் புகார் தெரிவித்து வருகின்றன. கேஸ், குடிநீர் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பனி காலத்தில் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளனர். டுவேர் பகுதியில் பனிப்பொழிவு வழக்கத்துக்கு மாறாக காணப்படுகிறது. இங்கு புல்டோசர்கள் மூலம் சாலையில் குவிந்து கிடக்கும் பனியை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...