Sep 22, 2013

மகாளய பட்சத்தின் 15 நாள் வழிபாடு பலன்கள்

மகாளய பட்சத்தின் 15 நாள் வழிபாடு பலன்கள்
மகாளய பட்சத்தின் 15 நாள் வழிபாடு ஒவ்வொன்றுக்கும் ஒருபலன் உள்ளது. அதன் விவரம் வருமாறு:- 

* செப். 20-ந் தேதி (வெள்ளி) பிரதமை திதி- இன்று செய்யப்படும் தர்ப்பணத்துக்கு தனலாபம் உண்டாகும். 

* 21-ந் தேதி (சனி) தூவிதியை திதியான இன்று செய்யப்படும் தர்ப்பணம், சிரார்த்தத்துக்கு புத்திர பாக்கியம் தரும் ஆற்றல் உண்டு. 

* 22-ந் தேதி (ஞாயிறு) திருதியா திதியான மூன்றாம் நாள் செய்யப்படும் தர்ப்பணம் திருமண பாக்கியத்தை அருளும். நல்ல இடத்தில் இருந்து நல்ல மாப்பிள்ளை கிடைப்பார். 

* 23-ந் தேதி (திங்கட்கிழமை) சதுர்த்தி திதியான இன்று செய்யும் பித்ரு வழிபாட்டால், எதிரிகளை விரட்டும் சக்தி கிடைக்கும். 

* 24-ந் தேதி (செவ்வாய்) பஞ்சமி திதியான இன்று நடத்தும் தர்ப்பணம் சகல செல்வங்களையும் உங்களுக்கு தேடித் தரும். 

* 25-ந் தேதி (புதன்கிழமை) மகாளய பட்சத்தின் 6-வது நாளாகும். சஷ்டி திதியான அன்று பித்ருக்களை நினைவு கூர்ந்து வழிபாடு செய்தால் மிகச்
சிறந்த உயர்ந்த புகழ் கிடைக்கும். 

* 26-ந் தேதி (வியாழக்கிழமை) ஏழாம் நாள் வழிபாடாகும் சப்தமி திதியான அன்று செய்யப்படும் தர்ப்பணத்துக்கு வம்ச விருத்தியை பெற்றுத்தரும் ஆற்றல் உள்ளது. 

* 27-ந் தேதி (வெள்ளி) மத்தியாஸ்டமி தினமாகும். அன்று தர்ப்பணம் சிரார்த்தம் கொடுப்பவர்களுக்கு சிறந்த புத்தி கிடைக்கும். 

* 28-ந் தேதி (சனி) நவமி தினமும். அன்று செய்யப்படும் பித்ரு பூஜைக்கு நல்ல அழகும் குணமும் உள்ள மனைவி அமைவாள் என்பது ஐதீகம். 

* 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தசமி. இந்த திதியில் பித்ருக்களை வழிபடுபவர்களுக்கு நினைத்தது எல்லாம் கிடைக்கும். 

* 30-ந் தேதி (திங்கட்கிழமை) பித்ரு வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வேதங்களையும் கற்கும் ஆற்றல் வந்து சேரும். 

* அக்டோபர் 1-ந் தேதி (செவ்வாய்) துலாதசி சிரார்த்த தினமாகும். இந்த திதியில் மகாளாயபட்ச வழிபாட்டை செய்பவர்களுக்கு தங்கம் வந்து சேரும். 

* அக்டோபர் 2-ந் தேதி (புதன்) திரயோதசி திதி இன்று தர்ப்பணம் செய்பவர்களுக்கு அறிவு, நல்ல ஆரோக்கியம், சுதந்திரம், தீர்க்கமான ஆயுள் பலம் கிடைக்கும். 

* அக்டோபர் 3-ந் தேதி சதுர்த்தசி திதியாகும். ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்தவர்களுக்கு இன்று தர்ப்பணம் செய்தால், அந்த பித்ருக்கள் முழு திருப்தி அடைவார்கள். 

* அக்டோபர் 4-ந் தேதி மகாளய அமாவாசை தினமாகும் அன்று நாம் செய்யும் தர்ப்பணம், சிரார்த்தத்தை பித்ருக்கள் ஏற்றுக் கொண்டு, நமக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆசி வழங்குவார்கள். தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் எண்ணை தேய்த்து குளிக்கக் கூடாது. சவரம் செய்யாமல் இருப்பது நல்லது. 

திருவாலாங்காடு, திருதர்ப்பணபுரி, திருவள்ளூர், ராமேசுவரம், திருமயம் அருகில் உள்ள அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், கோடியக்கரை, பவானி கூடுதுறை, குமரிமுனை, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...