Nov 1, 2013

விசைப்பலகைக் குறுக்குவழிகள்.


விசைப்பலகைக் குறுக்குவழிகள்.

windows logo key (சின்ன விசை ) : windows தொடக்க மெனு திறக்கும்
ALT+TAB : திறந்திருக்கும் நிரல்கள் அல்லது சாளரங்களுக்கு மாறலாம்
ALT+F4 : நடப்பு உருப்படி அல்லது நடப்பு நிரல் மூடப்படும்
CTRL+S : நடப்புக் கோப்பு அல்லது ஆவணம் சேமிக்கப்படும் (இந்தக் குறுக்குவழி பெரும்பாலான நிரல்களில் இயங்குகிறது)
CTRL+C : தேர்ந்தெடுத்த உருப்படி நகலெடுக்கப்படும்
CTRL+X : தேர்ந்தெடுத்த உருப்படி வெட்டப்படும்
CTRL+V : தேர்ந்தெடுத்த உருப்படி ஒட்டப்படும்
CTRL+Z : ஒரு செயல் செயல்தவிர்க்கப்படும்
CTRL+A : ஒரு ஆவணத்தில் அல்லது சாளரத்தில் இருப்பவை அனைத்தும் தேர்ந்தெடுக்கப்படும்
F1 ஒரு நிரலுக்கு அல்லது Windows -க்கு உதவி காட்டப்படும்
Windows சின்ன விசை +F1
Windows உதவி மற்றும் ஆதரவு காட்டப்படும்
ESC நடப்புப் பணி ரத்து செய்யப்படும்
பயன்பாட்டு விசை (Application key )ஒரு நிரலில் செய்யப்பட்ட தேர்வு தொடர்பான கட்டளைகளின் மெனு ஒன்று திறக்கப்படும் இது அந்தத் தேர்வை வலது கிளிக் செய்வதற்குச் சமம்.
வழிசெலுத்து விசைகளைப் பயன்படுத்துதல் - using Navigation keys.



இடஞ்சுட்டியை நகர்த்துதல், ஆவணங்களிலும் வலைப்பக்கங்களிலும் வெவ்வேறு இடங்களுக்கு நகர்தல், உரையைத் திருத்துதல் போன்றவற்றைச் செய்ய வழிசெலுத்து விசைகள் உதவுகின்றன. இந்த விசைகளின் பொதுவான செயல்பாடுகள் சில, பின்வரும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இடது அம்பு(LEFT ARROW), வலது அம்பு (RIGHT ARROW), மேல் அம்பு (UP ARROW), கீழ் அம்பு (DOWN ARROW) : இடஞ்சுட்டியை அல்லது தேர்வு, அம்பு காட்டும் திசையில் ஒரு இடைவெளி அல்லது ஒரு வரி நகர்த்தப்படும், அல்லது ஒரு வலைப்பக்கம் அம்பின் திசையில் உருட்டிக் காண்பிக்கப்படும்.

HOME : இடஞ்சுட்டி ஒரு வரியின் தொடக்கத்திற்கு நகர்த்தப்படும் அல்லது வலைப்பக்கத்தின் மேற்பகுதி காண்பிக்கப்படும்.
END : இடஞ்சுட்டி ஒரு வரியின் இறுதிக்கு நகர்த்தப்படும் அல்லது வலைப்பக்கத்தின் அடிப்பகுதி காண்பிக்கப்படும்.
CTRL+HOME : ஒரு ஆவணத்தின் மேற்பகுதி காண்பிக்கப்படும்.
CTRL+END : ஒரு ஆவணத்தின் அடிப்பகுதி காண்பிக்கப்படும்.
PAGE UP : திரையில் இடஞ்சுட்டி ஒரு பக்கம் மேலே நகர்த்தப்படும்.
PAGE DOWN : திரையில் இடஞ்சுட்டி ஒரு பக்கம் கீழே நகர்த்தப்படும்.
DELETE : இடஞ்சுட்டியை அடுத்து வரும் எழுத்துக்குறி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட உரை நீக்கப்படும்; Windows -இல், தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி நீக்கப்பட்டு மறுசுழற்சிக் கூடைக்கு நகர்த்தப்படும்.
INSERT : செருகு பயன்முறை(Insert mode )இயக்கப்படும்(on) அல்லது அணைக்கப்படும்(off). செருகு பயன்முறை இயக்கத்தில் இருக்கும்போது, நீங்கள் தட்டச்சு செய்யும் உரை இடஞ்சுட்டி இருக்கும் இடத்தில் செருகப்படும். செருகு பயன்முறை அணைந்திருக்கும்போது, முன்பே உள்ள உரையை அழிக்கப்பட்டு நீங்கள் தட்டச்சு செய்யும் உரை இடம்பெறும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...