Feb 10, 2022

மருத்துவ பழமொழிகள்

 


      மருத்துவ பழமொழிகள்

1.ஆயிரம் பேரைக்கொன்றால் அரை வைத்தியன்-ஆயிரம் வேரை கொன்றால் அரை வைத்தியன் என்பதே உண்மையான பழமொழி.சித்த மருத்துவ துறையினுள் நிபுணராவதற்கு குறைந்ததே,ஆயிரம் மூலிகை வேர்களையவது மருந்து செய்வதற்கு தெரிந்திருக்க வேண்டியதை உணர்த்தவே,மேற்கண்ட பழமொழி.

2.ஆலமரத்தினை சுற்றி அடி வயிற்றினை தொட்டு பார்-ஆன்மீக அடிப்படையாக தெரிந்தாலும்,மகப்பேறு இல்லாத மகளிர்களுக்கு சொல்லப்படும் இந்த பழமொழி.ஆலமரக் கொழுந்து,மகளிருடைய கருப்பையில் உள்ள குற்றங்களையெல்லாம் நீக்க்க் கூடியது. ஆலமரக் கொழுந்தை பாலில் அரைத்து சாப்பிட,பெண்களுக்கு கருப்பைக் குற்றம் நீங்கி,குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதே பழமொழி.

3.பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட விருந்து உண்ணலாம்-மிளகு உணவில உள்ள நச்சுத் தன்மையை போக்குவதில் சிறந்த்து. நமக்கு பிடிக்காத பகைவன் வீட்டில், நஞ்சு கலந்த உணவாக இருந்தாலும்,உணவிலுள்ள நச்சுகளை போக்கும் என்பதே பழமொழி.

4.ஆற்றையும் அடக்குமாம் அதிவிடயம்அதிவிடயம் என்ற மூலிகை கழிச்சலுக்கு சிற ந்த்தது.பொங்கி வரும் ஆற்று நீரை எவ்வாறு அணை கட்டி நிறுத்துகிறோமோ,அதுபோல மிகுதியாக வரும் கழிச்சல் நோய்களை அதிவிடயம் நிறுத்தி பயன்தரும் என்பதே பழமொழியின் பொருள்.

5.அழுத பிள்ளை சிரித்த்தாம்,கழுதை பாலை குடித்த்தாம்-கழுதை பாலை, குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு சமமாக கொடுகக்லாம்.தாய்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும்,கழுதைப்பாலில் உள்ளது.


                                                                       என்றும் அன்புடன்,

                                                                                              சித்த மருத்துவன்

                                                                                             ரெ.மாணிக்கவாசகம்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...