Jul 14, 2012

திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி(சின்னக்கிளி)

Photo: திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி(சின்னக்கிளி)
(முன்னாள் யாழ். அபிவிருத்தி சபை உப அலுவலக அல்லைப்பிட்டி ஆசிரியர்)
அன்னை மடியில் : 6 மார்ச் 1950 — ஆண்டவன் அடியில் : 13 யூலை 2012
 

மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட உமாபதிசிவம் ஜெயலட்சுமி அவர்கள் 13-07-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஏரம்பு இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவயோகம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

உமாபதிசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிருஷன், கிருஷிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இந்திராவதி(இலங்கை), சந்திரா(பிரான்ஸ்), தங்கநாயகி(இலங்கை), வேலும்மயிலும்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வரத்தினம், கணேசமணி, செவ்வேன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கனகரெத்தினம்(இலங்கை), ஸ்ரனிஸ்லொஸ்(பிரான்ஸ்), சாந்தலிங்கம்(இலங்கை),  லெட்சுமி(பிரான்ஸ்), மகாலிங்கசிவம்(சுவிஸ்), றஞ்சினி(கனடா), சுகநாதசிவம்(பிரான்ஸ்), செல்வராணி(இலங்கை), சோதிசிவம்(டென்மார்க்), பொற்கிளி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோகநாயகி, திவ்வியராணி, தனேஸ்வரி ஆகியோரின் சகலியும்,

கோகிலன், குபேரன், கோமகன், தர்ஷன், தர்ஷிகா, தனுஷா, சன்ஜீவன், ஜதீஷா, பார்த்தீபன், ரிஷாயினி, விதுரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனிஸ்ரா, துளசிகா, அனுசிகா, சாரங்கன், சித்திராங்கன், நிருத்திகா, கோபிலக்ஷன், வதனலக்ஷன், மிதுஷன், விதுரன் ஆகியோரின் பெரிய தாயாரும்,

கார்த்தீபன் அவர்களின் சிறிய தாயும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி(சின்னக்கிளி)
(முன்னாள் யாழ். அபிவிருத்தி சபை உப அலுவலக அல்லைப்பிட்டி ஆசிரியர்)
அன்னை மடியில் : 6 மார்ச் 1950 — ஆண்டவன் அடியில் : 13 யூலை 2012


மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடம
ாகவும் கொண்ட உமாபதிசிவம் ஜெயலட்சுமி அவர்கள் 13-07-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஏரம்பு இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவயோகம் தம்பதிகளின் பாசமிகு

Jul 13, 2012

தமிழ்க்கணினி வல்லுநர் ஆண்டோ பீட்டர் மறைவு

Friday, July 13, 2012



கணினி, இணையம், அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆண்டோ பீட்டர். மென்பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர். கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின்  நிறுவனரும், கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பல கணினி நூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் 12.07.2012 வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார். இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு.

 தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர் ஆண்டோ பீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை அறிமுகப் படுத்திய

Jul 12, 2012

உங்களது கண்கள் மற்றவர்களை எளிதில் கவர வேண்டுமா?




அழகான கண்கள் இலகுவில் மற்றவர்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கும் ஆய்தமாக உள்ளது. கண்கள் சோர்வாக இருந்தால் முகமே களை இழந்து விடும். எனவே கண்களை குளிர்ச்சியாக வைத்திருந்தாலே போதும் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

தூக்கம் கெட்டாலே கண்களை சுற்றி கருவளையும் தோன்றும். எனவே இரவு நேரங்களில் அதிகம் டிவி, நெட் பார்க்காமல் கண்களுக்கு ரெஸ்ட் கொடுங்கள்

Jul 11, 2012


தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்
வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும்.

தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும்.

சுண்டக்காயின் மருத்துவ குணம்..!


!
சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ

உணவுக்கு மட்டுமல்ல மருந்தாகவும் பயன்படும் வெங்காயம்..!





தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு க
ுணம் கிடைக்கும்.

காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால்

கற்றாழை (Aloe vera)


கற்றாழை (Aloe vera)

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க்

உடல் சூட்டை தணிக்கும் கீரணிப்பழம்..!




தமிழகத்தில் மூலை, முடுக்கெல்லாம் "தர்பூசணி", இளநீர் "கீரணிப் பழம்" என்று குவிந்து கிடக்கும் இந்த பழங்கள், கோடைக்கேற்ற, குளிர்ச்சியான பானங்கள் தயாரிக்க மட்டுமன்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. "மெலன்" என்று பொதுவாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்தப் பழங்கள் வெவ்வேறு வகையான வடிவத்திலும், வண்ணத்திலும் கிடைக்கிறது. அதில் ஒரு வகைதான் "கீரணிப் பழம்". இது உடற்சூட்டைத் தணித்து, களைப்பைப் போக்க வல்லது. நெஞ்செரிச்சலை நீக்க உதவும்.

இதில் விட்டமின் "A", "B" மற்றும் பொட்டாசியமும் உள்ளது. ஆயுர்வேதத்தில், சிறுநீரகக் கோளாறு, மலச்சிக்கல், வாய்வுக் கோளாறு, குடற்புண் ஆகியவற்றை சரிசெய்ய, இந்தப் பழம் பரிந்துரைக்கப் படுகிறது.

இதன் தோலை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது சர்க்கரையைத்

தேனீக்கள் பற்றிய தகவல் !!!




உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின்


கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

* கிராம்பில் பலவித மருத்துவ

குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல் , தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...